ஈரோடு கிழக்கு: சீமான் 'நிகழ்த்திய அற்புதம்'-'டெபாசிட்' கிடைக்குமா? கிடைக்காதா? விவாதிக்க வைத்த நாதக!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தமிழ்நாட்டில் பெரும் விவாதங்களை சர்ச்சைகளை உருவாக்கியிருந்தது. ஈரோடு கிழக்கு தொகுதி வாக்கு எண்ணிக்கை முடியும் வரை இந்த பரபரப்பு நீடித்துக் கொண்டுதான் இருந்தது.. ஆம் தமிழ்நாடு முழுவதுமே ஈரோடு கிழக்கு தொகுதியில் நாம் தமிழர் கட்சி வெற்றி பெறுமா? என்பதை எல்லாம் விட அந்த கட்சியின் வேட்பாளர் சீதாலட்சுமி, டெபாசிட் பெறுவாரா? இல்லையா? என்பதை கடைசி சுற்று வாக்கு எண்ணிக்கை வரை விவாதிக்க வைத்துவிட்டார் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு 4 ஆண்டுகளில் 2-வது முறையாக இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக போட்டியிடவில்லை. பாஜக, தேமுதிக, தமாகா ஆகியவை தேர்தலைப் புறக்கணித்தன. திமுக கூட்டணியில் முதல் முறையாக திமுகவின் உதயசூரியன் போட்டியிட்டது. திமுகவை எதிர்க்க ஆளே இல்லாத நிலையில் இதுவரை எந்த ஒரு தேர்தலிலும் உள்ளாட்சித் தேர்தலில் கூட வெல்லாத நாம் தமிழர் கட்சி மோதுவதாக அறிவித்து களம் கண்டனது.

erode east by election 2025 erode east election result 2025 2025 2025

திமுகவை முன் எப்போதையும் விட நாம் தமிழர் கட்சி மூர்க்கமாக எதிர்த்தது; அதுவும் திராவிடத்தின் மூலவேரான தந்தை பெரியார் மண்ணில், தந்தை பெரியாரையே இழிவுபடுத்தி பேசிக் கொண்டு, எங்க கெத்தை பார்த்தீங்களா? என உதார்விட்டபடியே பிரசாரம் செய்தார் சீமான்.. ரத்தம் கொதித்துப் போன பெரியாரின் கைத்தடிகளான தொண்டர்களோ, தேர்தல் முடியட்டும்.. முடியட்டும்.. என பல்லைக் கடித்துக் கொண்டே இருந்தனர். சீமானோ, வா.. வந்து அடி.. வெங்காயம் வீசு.. வெடிகுண்டு வீசுவேன் என்றெல்லாம் கூட மிரட்டிப் பார்த்தார். ஆனாலும் சீமான் மீது சிறு கீறல் கூட படாதவகையில் ஜனநாயகம் காத்தனர் தந்தை பெரியாரின் தொண்டர்கள்.

இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி வாக்கு எண்ணிக்கை தொடங்கிய போதே திமுக அதிவேக பாய்ச்சலில் முன்னேறிக் கொண்டே சென்றது. தபால் வாக்குகள் தொடங்கி ஒவ்வொரு சுற்று வாக்குகளிலும் திமுகவின் வாக்கு எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்து கொண்டே போனது. தபால் வாக்குகளிலேயே நாம் தமிழர் கட்சியின் தோல்வி உறுதி என தெரிந்துவிட்டது.

ஆனால் நாம் தமிழர் கட்சி தோல்வி அடைந்தாலும் அந்த கட்சிக்கு டெபாசிட் கிடைக்குமா? கிடைக்காதா? என்பதுதான் பெரும் விவாதமாகிப் போனது. நாம் தமிழர் கட்சியினரைப் பொறுத்தவரை டெபாசிட்டை தக்க வைத்தாக வேண்டும் என தவித்துக் கொண்டிருந்தனர். இன்னொரு பக்கமோ, எப்படா நாம் தமிழர் கட்சிக்கு டெபாசிட் பறிபோகும் என பெரியார் ஆதரவாளர்கள் காத்திருந்தனர்.

14-வது சுற்றுவரை கூட நாம் தமிழர் கட்சிக்கு டெபாசிட் கிடைக்குமா? கிடைக்காதா? என்பதில் உறுதியான முடிவு தெரியாமலே இருந்தது. ஒருவழியாக டெபாசிட்டை நாம் தமிழர் கட்சி பறிகொடுத்தது. அப்போதுதான் பெரியார் தொண்டர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டு கொண்டாடி மகிழ்ந்தனர். அரசியல் களத்தில் நாமும் எத்தனையோ தேர்தல் முடிவுளை கவனித்துள்ளோம்.. ஆனால் ஒரு கட்சிக்கு டெபாசிட் கிடைக்குமா? கிடைக்காதா? என்கிற பதற்றம் நிலவிய ஒரே தேர்தல் களம் ஈரோடு கிழக்குதான்! அர்சியல்தான் எத்தனை விந்தையானது மக்களே!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+