தமிழ்நாடு அரசு மீண்டும் அனுப்பிய 10 மசோதாக்கள்..“I withhold assent” திருப்பி அனுப்புவாரா ஆளுநர் ரவி?
சென்னை: தமிழ்நாடு சட்டசபையில் ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பிய 10 மசோதாக்கள் மீண்டும் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. தற்போது மீண்டும் அனுப்பப்பட்டுள்ள 10 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் தருவாரா? இல்லையா? உச்சநீதிமன்றம் தலையிடுமா? என்பது பெரும் எதிர்பார்ப்பாக எழுந்துள்ளது.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட 22 மசோதாக்கள் மற்றும் கோப்புகளுக்கு ஒப்புதல் தராமல் நிறுத்தி வைத்திருந்தார். இதனால் தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றம் போனது.

உச்சநீதிமன்றத்தில் வழக்கு: தமிழ்நாடு அரசின் மசோதாக்கள், கோப்புகள் மீது ஆளுநர் விரைவாக முடிவெடுக்க உத்தரவிட கோரியது தமிழ்நாடு அரசு. இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், அரசியல் சாசனத்தின் 200-வது பிரிவின் கீழ் ஆளுநர் முடிவெடுக்க வேண்டும் என கூறியது. ஆளுநர் தரப்பில் ஏன் மசோதாக்கள் நிறுத்தி வைக்கப்பட்டன என்பது குறித்து விளக்கம் தரவும் நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டது உச்சநீதிமன்றம். இந்த வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது.
மீண்டும் சட்டசபையில் நிறைவேற்றம்: இந்நிலையில் 'I withhold assent" என்ற குறிப்புடன் தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்களை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பினார். இதனையடுத்து தமிழ்நாடு சட்டசபையின் சிறப்பு கூட்டம் நேற்று கூட்டப்பட்டு ஆளுநர் திருப்பி அனுப்பிய 10 மசோதாக்கள் மீண்டும் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது.
10 மசோதாக்கள் : சென்னை பல்கலைக்கழக சட்டத் திருத்த மசோதா. தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழக திருத்த மசோதா, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழக சட்டத் திருத்த மசோதா, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக திருத்தச் சட்ட மசோதா, தமிழ்நாடு அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் திருத்த மசோதா, தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழக திருத்தச் சட்ட மசோதா, தமிழ் பல்கலைக்கழக திருத்தச் சட்ட மசோதா, தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழக திருத்தச் சட்ட மசோதா, அண்ணா பல்கலைக்கழக திருத்தச் சட்ட மசோதா, தமிழ்நாட்டில் புதிதாகச் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைப்பதற்கான சட்ட மசோதா ஆகியவை ஆளுநரின் ஒப்புதலுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ள மசோதாக்களாகும். இந்நிலையில் அரசியல் சாசனத்தின் 200-வது பிரிவின் கீழ், 2-வது முறையாக மாநில சட்டசபை நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் தந்தாக வேண்டும். இதனை ஆளுநர் ஆர்.என்.ரவி பின்பற்றுவாரா? இல்லையா என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
I withhold assent : அதேநேரத்தில் I withhold assent என்ற ஆளுநர் ஆர்.என்.ரவியின் குறிப்பும் விவாதத்துக்குரியதாகி இருக்கிறது. தமிழ்நாடு சட்டசபையில் நேற்று பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், "I withhold assent" அதாவது தான் அனுமதியை நிறுத்திவைத்துள்ளதாகக் குறிப்பிட்டு சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பிய சட்டமுன்வடிவுகளை கடந்த 13.11.2023ஆம் தேதியன்று திருப்பி அனுப்பி வைத்திருக்கின்றார் ஆளுநர். ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்டுள்ள சட்டமுன்வடிவுகளை நாம் இங்கே மீண்டும் நிறைவேற்றி, அவரது ஒப்புதலுக்காக மீண்டும் அனுப்பி வைக்க இருக்கிறோம் எனக் குறிப்பிட்டார். I withhold assent என்பதற்கு 'ஆளுநர் அனுமதியை நிறுத்தி வைத்துள்ளதாக' முதல்வர் தரப்பில் விளக்கம் தரப்படுகிறது.
200-வது பிரிவு என்ன சொல்கிறது?: அதே நேரத்தில் "I withhold assent" என்பதற்கு தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை நிராகரித்துவிட்டார் ஆளுநர் ஆர்.என்.ரவி என்பதுதான் அர்த்தம். அரசியல் சாசனத்தின் 200வது பிரிவு "Assent to Bills When a Bill has been passed by the Legislative Assembly of a State or, in the case of a State having a Legislative Council, has been passed by both Houses of the Legislature of the State, it shall be presented to the Governor and the Governor shall declare either that he assents to the Bill or that he withholds assent therefrom or that he reserves the Bill for the consideration of the President".. சுருக்கமாக மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் தருதல் அல்லது அனுமதியை நிறுத்தி வைத்தல் அதாவது நிராகரிப்பது என்பது நேரடியாக சொல்லப்படாமல் மறைமுக சொல்லாக குறிக்கிறது என்கிற ஒரு வாதமும் முன்வைக்கப்படுகிறது. இதனையே தமிழ்நாடு அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ரகுபதி உள்ளிட்டோரும் சுட்டிக்காட்டி இருக்கின்றனர். ஆகையால் ஆளுநர் "நிராகரித்துவிட்ட" மசோதாக்களை சட்டசபையில் மீண்டும் எப்படி நிறைவேற்ற முடியும்? ஆளுநர் ஆர்.என்.ரவி மீண்டும் திருப்பி அனுப்பக் கூடும் அல்லது உச்சநீதிமன்றமே இறுதி முடிவு எடுக்க வேண்டியதிருக்கும் எனவும் மூத்த பத்திரிகையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
-
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங்












Click it and Unblock the Notifications