டேய் விடுடா என் குட்டியை.. எனக்கு வேணும் நீ கொடுடா.. ஆஹாஹாஹா காட்சி!
தன் குட்டியை காப்பாற்ற குழந்தையிடம் நாய் சண்டை போடுகிறது.
Recommended Video

சென்னை: நாய் - நாய்க்குட்டி - குழந்தை = இந்த மூன்று ஜீவனுக்குள் நடக்கும் சமாச்சாரம்தான் இந்த செய்தி!!
இணையத்தில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. ஒரு ஏழ்மையான பின்னணி கொண்ட இடம்போல தெரிகிறது. பார்ப்பதற்கு ஒரு வீட்டின் பின்பகுதியில் உள்ள தொழுவம் போலவும் இருக்கிறது.
அங்கே சுவற்றோரம் நாய் ஒன்று குட்டிகளை ஈன்றுள்ளது. பிறந்த குட்டிகளை தன் பக்கத்துலேயே அரவணைத்து காத்து வருகிறது. அதிலிருந்து ஒரு குட்டியை அந்த வீட்டு குழந்தை ஆசையாக தன் கையில் எடுத்து செல்கிறது.

தள்ளுமுள்ளு
ஆனால் இதை பார்த்த அந்த தாய் நாய் குழந்தையின் கையில் இருந்த தன் குட்டியை பிடுங்குகிறது. இதற்காக குழந்தையை தள்ளி கீழே சாய்க்கிறது தாய் நாய். குழந்தையும் குட்டியுடன் சேர்ந்து தரையில் விழுகிறது. இந்த தள்ளுமுள்ளுவில் எங்கே குட்டிக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்று நமக்கு ஒரு செகண்ட் தூக்கி வாரிப் போடுகிறது.

அழுத குழந்தை
ஆனால் அந்த தாய் நாய் தன் குட்டியை குழந்தையிடம் இருந்து பிடுங்கி கொண்டு போய் மற்ற குட்டிகளுடன் இணைத்து போடுகிறது. நாய்க்குட்டியை கையிலிருந்து பிடுங்கியதும் குழந்தை வீல் என கத்த தொடங்குகிறது. ஆனால் தன் குட்டிகளுக்கு துணையாக பக்கத்தில் தாய் நாய் நின்று கொள்கிறது.

கவ்விய நாய்
பிறகு குழந்தை அழுதுகொண்டே திரும்பவும் குட்டியை எடுத்து கொண்டு திரும்புகிறது, பின்னாடியே வந்து நாய் அதை பிடுங்கி கொண்டு போய் விடுகிறது. ஒவ்வொரு முறை குட்டியை பிடுங்கும்போதும், தன் வாயால் பதமாக குட்டிக்கு வலிக்காமல் கவ்வி கொண்டு போகிறது அந்த நாய்.

அன்பு மட்டும்தான்
இந்த வீடியோவை பார்க்கும்போது, குழந்தைக்கு நாய்க்குட்டி மேல் உள்ள அன்பை இது காட்டுகிறதா? அல்லது யாராக இருந்தாலும் தன் குட்டியை தர மாட்டேன் என்ற நாயின் பாசத்தை காட்டுகிறதா? என்று தெரியவில்லை. ஆனால் எந்த உயிரினமாக இருந்தால் என்ன, எந்த இனமாக இருந்தால் என்ன, அங்கு அன்பு மட்டுமே இருக்கும் என்பது மட்டும் தெளிவாக புரிகிறது.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications