அண்ணா நகரில் நடுராத்திரியில் பறந்த ட்ரோன்.. அடுக்குமாடி வீடுகளின் ஜன்னலை நோட்டமிட்டதால் பரபரப்பு
சென்னை: சென்னை அண்ணா நகர் பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பின் ஜன்னல்களை நோட்டமிட்டு டிரோன் ஒன்று பறந்து சென்றதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.. இதனிடையே அந்த ட்ரோனை பிடித்த பொதுமக்கள் யார் இப்படி செய்தது என்று குழப்பத்தில் இருக்கிறார்கள்.
சென்னை அண்ணா நகர் கிழக்கு பகுதியில் உள்ள 'என்' பிளாக், 24-வது தெருவில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பு இருக்கிறது. இங்கு ஏராளமான மக்கள் வசிக்கிறார்கள். இந்த குடியிருப்பிற்கு கடந்த செவ்வாய்கிழமை நள்ளிரவு இந்த குடியிருப்புகளை நோட்டமிட்டபடி ட்ரோன் ஒன்று பறந்தது. அந்த டிரோன், அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளில் உள்ள ஜன்னல்களை நோட்டமிட்டவாறு பறந்து சென்று கொண்டிருந்தது.

அந்த குடியிருப்பில் வசிக்கும் ஒருவர் வீட்டின் ஜன்னல் வழியாக அந்த டிரோன் பறந்து செல்வதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதேநேரம் லாவகமாக அந்த ட்ரோனை கையால் அவர் எட்டி பிடித்தார். பின்னர் ஜன்னல் வழியாக கீழே பார்த்தபோது அங்கு 2 மர்மநபர்கள் நின்று கொண்டிருந்தார்கள்.
அவர்கள், இந்தியில் பேசிய படி ட்ரோனை கேட்டதாக சொல்லப்படுகிறது, அதற்கு அந்த நபர் கீழே இறங்கி வர முயற்சித்தார்.. அப்போது அந்த மர்ம நபர்கள் இருவரும் ட்ரோனை அங்கேயே விட்டு விட்டு இரு சக்கர வாகனத்தில் மின்னல் வேகத்தில் தப்பிச் சென்று விட்டார்கள்
நள்ளிரவு நேரத்தில் அடுக்குமாடி குடியிருப்பின் ஜன்னல்களை நோட்டமிட்டவாறு பறந்த டிரோன் பிடிக்கப்பட்டது. இதை அறிந்து அந்த அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
மர்மநபர்கள் கொள்ளையடிக்கும் நோக்கத்தில் இந்த ட்ரோனை பறக்க விட்டனரா? வீடுகளில் ஆட்கள் இருக்கிறார்களா? என்பதை நோட்டமிட இதுபோல் டிரோனை பறக்கவிட்டார்களா? அல்லது வீடுகளில் படுக்கை அறைகளில் பெண்களை ஆபாசமாக படம் பிடிக்கும் நோக்கத்துடன் இதுபோல் செய்தார்களா? என்ற கேள்விகள் எழுகிறது. பிடித்து வைக்கப்பட்ட டிரோனை காவல் நிலையத்தில் ஒப்படைத்து, போலீசில் புகார் அளித்தால் மட்டுமே என்ன காரணத்துக்காக அவர்கள் டிரோனை பறக்கவிட்டனர்? என்பது தெரியவரும் என்பதால் அண்ணா நகர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications