பையன் போயிட்டான்.. புலம்பி தள்ளிய அப்பா! துக்க வீட்டில் ஓபிஎஸ்ஸை பார்த்ததும் ஷாக்.. அதிரும் எடப்பாடி
சென்னை: ஒரு குடும்பத்தில் அப்பா - மகன் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு தற்போது அதிமுகவில் பெரிய விவாதத்தை ஏற்படுத்தி உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதிமுகவிற்கு இந்த மாதம் மிகவும் முக்கியமான மாதம். அதிமுக பொதுக்குழு மேல்முறையீட்டு வழக்கில் இந்த மாதம்தான் உச்ச நீதிமன்றம் விசாரணை நடத்த உள்ளது.
கடந்த செப்டம்பர் இறுதியில் நடந்த வழக்கு விசாரணையில் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக சில வாதங்கள் வைக்கப்பட்டன.

அதிமுக
அதில் அதிமுகவில் எந்த மாற்றத்தை செய்ய கூடாது. கட்சியில் புதிதாக மாற்றங்களை செய்ய கூடாது என்று வாக்குறுதியை எடப்பாடி பழனிசாமியிடம் வாங்கிக்கொண்டு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்த வழக்கு காரணமாக எடப்பாடி பழனிசாமி தற்போது அதிமுகவில் இருந்து யாரையும் நீக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஓ பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக யாராவது செயல்பட்டால் அவர்களை நீக்க முடியாத நிலை எடப்பாடி பழனிசாமிக்கு ஏற்பட்டு உள்ளது.

மோதல்
இந்த நிலையில்தான் நெல்லையை சேர்ந்த அதிமுக நிர்வாகி வி.கே.பி.சங்கர் ஓ பன்னீர்செல்வம் அணியில் சேர்ந்து உள்ளார். எடப்பாடி அணியில் இருந்த வி.கே.பி.சங்கர் திடீரென ஓ பன்னீர்செல்வம் அணியில் சேர்ந்து உள்ளார். முன்பு மாதிரி இருந்தால் எடப்பாடி பழனிசாமி வி.கே.பி.சங்கரை நீக்கி இருப்பார். ஆனால் தற்போது கோர்ட் கட்டுப்பாடு உள்ளதால் எடப்பாடி பழனிசாமியால் ஆக்சன் எடுக்க முடியவில்லை. இதற்கு வேறு சில காரணங்களும் உள்ளன.

அதிமுக நிர்வாகி மாற்றம்
சங்கர்.. நெல்லை அதிமுக நிர்வாகி கருப்பசாமி பாண்டியன் மகன். இவர் எடப்பாடி அணியில் இருக்கிறார். இப்போதும் எடப்பாடி அணியில்தான் அவர் இருக்கிறார். இவர் ஓ பன்னீர்செல்வத்திற்கு தூரத்து சொந்தம். ஆனாலும் இவர் எடப்பாடி அணியில் இருக்கிறார். அப்பா தனது அணியில் இருப்பதால் மகன் மீது ஆக்சன் எடுக்க முடியாத நிலையில் எடப்பாடி பழனிசாமி இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதிமுகவிற்குள் கடும் விவாதத்தை இது ஏற்படுத்தி உள்ளது.

அப்பா மகன்
பையன் இப்படி ஓ பன்னீர்செல்வம் அணிக்கு போயிட்டான் என்று அப்பா கருப்பசாமி புலம்பி வருவதாகவும் கூறப்படுகிறது. அதே சமயம் அப்பாவிற்கு தெரியாமல் பையன் போய் இருப்பாரா.. சமாதான தூதாக இருக்கும். கோர்டில் தீர்ப்பு வந்த பின் வெற்றிபெற்றவர்கள் பக்கம் சேர்ந்து கொள்வார்கள் என்றும் பேச்சுக்கள் அடிபடுகின்றன. இருந்தாலும் சங்கர் இப்படி அணி மாறியதால் எங்கே அப்பா கருப்பசாமியும் அணி மாறிவிடுவாரோ என்று எடப்பாடி தரப்பு அதிருப்தியில் இருக்கிறதாம்.

துக்க வீடு
ஆனால் கருப்பசாமியோ ஓ பன்னீர்செல்வம் அணிக்கு செல்லும் திட்டத்தில் இல்லை என்கிறார்கள். சமீபத்தில் துக்க வீடு ஒன்றில் இவர் ஓ பன்னீர்செல்வத்தை சந்தித்து உள்ளார். ஆனால் அங்கே ஓ பன்னீர்செல்வத்திற்கு இவர் வணக்கம் கூட வைக்கவில்லை. அவரை முகம் எடுத்து கூட பார்க்காமல் அங்கிருந்து கருப்பசாமி கிளம்பி சென்று இருக்கிறார். இதனால் சொந்தமாக இருந்தும் நம்மை பார்க்கவில்லையே என்று அப்செட்டில் இருக்கிறாராம் ஓ பன்னீர்செல்வம்.












Click it and Unblock the Notifications