ஒரு கோடியப்பு.. சென்னையை அதிர வைத்த பெண் டிக்கெட் பரிசோதகர்.. படைத்த வேறலெவல் சாதனை
சென்னை ரயில்வே கோட்டத்தைச் சேர்ந்த பெண் டிக்கெட் பரிசோதகர் ரூ.1 கோடி அபராதம் வசூலித்து சாதனை படைத்திருக்கிறார்.
சென்னை: டிக்கெட் எடுக்காமல் ரயிலில் பயணிப்பவர்களை பிடிக்க டிக்கெட் பரிசோதகர்கள் தீவிரமாக பணியாற்றுகிறார்கள். குறிப்பாக சென்னையில் டிக்கெட் எடுக்காமல் ரயிலில் செல்பவர்களை பிடித்து அபராதம் விதிக்கப்படுகிறது. இந்நிலையில் சென்னை ரயில்வே கோட்டத்தைச் சேர்ந்த பெண் டிக்கெட் பரிசோதகர் ரூ.1 கோடி அபராதம் வசூலித்து சாதனை படைத்திருக்கிறார்.
தெற்கு ரயில்வேயில் சென்னை, திருச்சிராப்பள்ளி, மதுரை,சேலம், பாலக்காடு, திருவனந்தபுரம் ஆகிய ஆறு கோட்டங்கள் இருக்கின்றன. தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகியவை தெற்கு ரயில்வேயின் நிர்வாக பகுதிகளாக உள்ளது. அதேபோல் ஆந்திரப் பிரதேசம், கர்நாடக மாநிலங்களின் சில பகுதிகளும் தெற்கு ரயில்வேயின் கீழ் உள்ளது.
ஆண்டுதோறும் பல லட்சம் பயணிகள் ரயில்களில் பயணிக்கிறார்கள். தினசரி 100க்கணக்கான ரயில்கள் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்படுகிறது. மற்ற மண்டலங்களைப் போலன்றி தென்னக ரயில்வேயின் வருமானத்தின் பெரும்பகுதி பயணியர் கட்டணம் மூலமாகவே வருகிறது.

3 பேர் ஒரு கோடி
எப்போதுமே வெயிட்டிங் லிஸ்ட் உள்ள ரயில்களை மட்டுமே கொண்ட ரயில்வே என்றால் அது தெற்கு ரயில்வே தான். ஏனெனில் டிக்கெட் கிடைப்பது அந்த அளவிற்கு அரிதானது. அதேநேரம் அன்ரிசர்வ்டு கோச்சுகள் இயக்கப்படுகிறது. அந்த பெட்டிகளில் முன்பதிவு செய்யாமல், டிக்கெட் எடுத்து அப்படியே பயணிக்கலாம். இதேபோல் லோக்கல் ரயில்களிலும் டிக்கெட் எடுத்து பயணிக்கிறார்கள். அதேநேரம் டிக்கெட் எடுக்காமல் பயணிப்பவர்களும் இருக்கிறார்கள். அப்படி பயணிப்பவர்கள் சிக்கினால் மிகப்பெரிய தொகை அபராதமாக விதிக்கப்படும். அப்படி அபராதமாக சென்னை கோட்டத்தில் மட்டும் 3 பேர் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் அபராதம் வசூலித்து சாதனை படைத்துள்ளார்கள்.

டிக்கெட் பரிசோதனை
உரிய டிக்கெட் இன்றி ரயிலில் செல்லுபவர்களை கண்டுபிடித்து அபராதம் விதிக்க சென்னை எழும்பூர், சென்டிரல், தாம்பரம், கிண்டி உள்ளிட்ட பல்வேறு ரயில் நிலையங்களில் திடீர் டிக்கெட் பரிசோதனைகள் நடத்தப்படுகிறது. முறையற்ற பயணத்தை தடுக்கும் வகையில், 2022 ஏப்ரல் முதல் 2023 மார்ச் வரை 'ஒரு கோடி கிளப்' என்ற ஒரு புதிய நடைமுறையை தெற்கு ரெயில்வே ஏற்படுத்தி இருந்தது. இதில், 2022-2023-ம் நிதியாண்டில் ரூ.1 கோடிக்கும் மேல் அபராதம் வசூலிக்கும் டிக்கெட் பரிசோதகர்கள் இந்த கிளப்பில் சேர்க்கப்படுவார்கள்.

சாதனை
அந்தவகையில், ரூ.1 கோடிக்கும் மேல் அபராதம் வசூலிக்கும் மைல் கல்லை சென்னை கோட்டத்தை சேர்ந்த 3 டிக்கெட் பரிசோதகர்கள் எட்டி இருக்கிறார்கள். சென்னை கோட்டத்தின் தலைமை டிக்கெட் பரிசோதகர் எஸ்.நந்த குமார் 27 ஆயிரத்து 787 வழக்குகள் பதிவு செய்து ரூ.1 கோடியே 55 லட்சம் அபராதம் வசூலித்து சாதனை படைத்துள்ளனர்.

சென்னை கோட்டம்
இதேபோல, சென்னை கோட்டத்தின் தலைமை டிக்கெட் பரிசோதகர் ரோசலின் ஆரோக்கிய மேரி ரூ.1 கோடியே 3 லட்சம் அபராதம் வசூலித்து சாதனை படைத்துள்ளார். இந்திய ரயில்வேயில் முதல் முறையாக அதிக அபராதம் வசூலித்த பெண் டிக்கெட் பரிசோதகர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
கூடைப்பந்து வீரரும்,முதுநிலை டிக்கெட் பரிசோதகருமான சக்திவேல் ரூ.1 கோடியே 10 லட்சம் அபராதம் வசூலித்து உள்ளதாக தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் தெரிவித்து உள்ளது.












Click it and Unblock the Notifications