திருவேற்காட்டில் நகராட்சி அதிகாரி சாந்தி கையில் என்னது அது.. ஒரே நொடியில் காலி செய்த பெண்
சென்னை: சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த ஜெயலட்சுமி என்பவருக்கு சொந்தமான நிலம் திருவேற்காடு பகுதியில் உள்ளது. அந்த நிலத்தில் வீடு கட்ட கடன் பெறுவதற்காக நிலம் வரன்முறை அனுமதி பெறுவதற்கு திருவேற்காடு நகராட்சி அலுவலகத்தில் மனு அளித்திருந்தார். அந்த மனுவை பரிசீலித்த நகரமைப்பு அதிகாரி சாந்தி ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்டிருக்கிறார். பணத்தை பெற உதவி செய்தவரையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
அரசு ஊழியர்கள் லஞ்சம் கேட்டால் கொடுக்க வேண்டியதே இல்லை.. லஞ்சம் கேட்கும் அரசு ஊழியர்கள் குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளிக்கலாம். அவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுப்பார்கள். ஆதாரத்துடன் சென்று மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தால், ரசாயணம் தடவிய நோட்டுகளை தந்து கையும் களவுமாக அதிகாரியை பிடிப்பார்கள். உதவி செய்யும் புரோக்கர்கள் மற்றும் உதவியாளர்களும் இந்த பொறியில் சிக்குவார்கள். அப்படித்தான் திருவேற்காட்டில் சிக்கியுள்ளனர்.

சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்தவர் ஜெயலட்சுமி என்பவருக்கு திருவேற்காட்டில் சொந்தமாக நிலம் அமைந்திருக்கிறது. அந்த நிலத்தில் வீடு கட்ட கடன் பெற ஜெயலட்சுமி விரும்பினார். அதற்கு முறையாக நிலம் வரன்முறை அனுமதி பெற வேண்டும். அதற்கு ஜெயலட்சுமி திருவேற்காடு நகராட்சி அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். ஆனால் அப்படி நிலம் வரன்முறை அனுமதி பெற வேண்டும் என்றால் ரூ.10 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என திருவேற்காடு நகரமைப்பு அதிகாரி சாந்தி கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஜெயலட்சுமி, திருவள்ளூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில், திருவள்ளூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துணை டிஎஸ்பி ஜெயக்குமார் தலைமையில் நேற்று மாலை போலீசார் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை ஜெயலட்சுமியிடம் கொடுத்து அனுப்பினார்கள். அப்போது நகரமைப்பு அதிகாரி சாந்தி, பணத்தை அலுவலகத்திற்கு வெளியே சக்திவேல் என்பவரிடம் கொடுக்குமாறு கூறியதாக சொல்லப்படுகிறது. ஜெயலட்சுமி கொடுத்த பணத்தை சக்திவேல் பெற்றுக்கொண்ட போது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்தார்கள்.
விசாரணையில், நகரமைப்பு அதிகாரி சாந்தியின் உத்தரவின் பேரிலேயே பணத்தை வாங்கியதாக சக்திவேல் கூறினார். இதையடுத்து சாந்தி மற்றும் சக்திவேல் ஆகிய இருவரையும் போலீசார் அதிரடியாக கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் திருவேற்காடு நகராட்சி அலுவலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
Tamil New Year Wishes in Tamil: சித்திரை திருநாளில் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் பகிர அழகிய படங்கள் -
ஜனநாயகன் லீக்.. இயக்குநர் அமீர் கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு.. ஆர்கே செல்வமணி விளக்கம்












Click it and Unblock the Notifications