பத்தவச்சுட்டியே பரட்டை .. சென்னை டிராபிக் போலீசுக்கு மறக்க முடியாத பரிசு.. நெட்டிசன் செஞ்ச வேலை!
சென்னை: சென்னையில் வாகன ஓட்டிகள் யாராக இருந்தாலும் கவனமாக செல்ல வேண்டும். குறிப்பாக போலீஸ் என்றாலோ அல்லது போக்குவரத்து போலீஸ் என்றாலோ ரொம்ப கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் ஹெல்மட் போடாமல் சென்றதாக போலீஸையே போட்டோ எடுத்து சிக்க வைத்துள்ளார்கள் நம்ம நெட்டிசன்கள்.
தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை மற்ற ஊர்களை போல் இல்லை.. இங்கு யாராவது போக்குவரத்து விதிகளை மீறினால் ஆன்லைனிலேயே கண்டுபிடிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படுகிறது. இதுதவிர பொதுமக்களும் போக்குவரத்து விதிமீறல்களை யார் செய்தாலும் புகைப்படம் அல்லது வீடியோ எடுத்து அனுப்பி சென்னை போக்குவரத்து போலிசிடம் ட்விட்டரில் புகார் அளிக்கலாம்.

அப்படி புகார் அளித்தால் , சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து உண்மையில் விதிமீறல் நடந்ததா என்பதை கண்டுபிடித்து அபராதமும் விதிக்கிறார்கள். தமிழ்நாட்டிலேயே சென்னையில் தான் இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது. சென்னை மாநகர பகுதிகளில் வெற்றிகரமாக பின்பற்றப்படும் இந்த நடைமுறை காரணமாக இரவில் போலீஸ் இல்லை என்று யாரும் ஹெல்மெட் போடாமல் போக முடியாது. அதேபோல் மூன்று பேர் ஒரே வாகனத்தில் போக முடியாது. பள்ளிக்கு குழந்தைகளை விடக்கூட ஹெல்மெட் அணியாமல் போக முடியாது.ஏனெனில் யாராவது புகைப்படம் எடுத்துபுகார் அளித்தால் கண்டிப்பாக நடவடிக்கை உறுதி.
சென்னை போலீசார் தினமும் ஏராளமானோரின் புகார்களுக்கு இப்படி நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். சென்னையில் இந்த ஆன்லைன் அபராத நடவடிக்கை, பொதுமக்களுக்கு மட்டுமல்ல, போலீசுக்குமே சமயத்தில் அபராதம் விதிக்க வைக்கிறது. அண்மையில் சென்னை திருவல்லிக்கேணி ஜாபர்கான்பேட்டையில் டிராபிக் போலீஸ் ஒருவர் ஹெல்மெட் அணியாமல் சென்றுள்ளார்.
இதை பார்த்த நெட்டிசன், புகைப்படம் எடுத்து சென்னை போக்குவரத்து போலீசிடம் புகார் அளித்தார். அந்த புகாருக்கு பதில் அளித்த சென்னை மாநகர போக்குவரத்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பதில் அளித்துள்ளனர்.இதன் மூலம் அந்த போலீசாருக்கும் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படுவது உறுதியாகி உள்ளது.
மற்ற ஊர்களில் இல்லாத அல்லது பின்பற்றப்படாத போக்குவரத்து நடைமுறைகளை இங்கு பார்ப்போம். சென்னையில் மட்டும் தான் பொதுமக்களின் புகார்களை ஏற்று வாகன விதிமீறல்களுக்கு ஆன்லைனில் அபராதம் விதிக்கும் நடைமுறை உள்ளது.இதேபோல் சென்னையில் மட்டும் சிக்னலுக்கு சிக்னல் துள்ளியமான கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் சிக்னலில் தானியங்கி அபராதம் விதிக்கும் கேமராவும் உள்ளது. சிக்னலை மீறி செல்வோருக்கு இந்த கேமராக்கள் அபராதம் விதிக்கின்றன.
மற்ற ஊர்களில் ஒருவர் ஹெல்மெட் அணிந்தாலே அபராதம் விதிக்காமல் வண்டியை விட்டுவிடுவார்கள். ஆனால் சென்னையில் வாகனம் ஓட்டுபவர், பின்னாடி அமர்ந்திருப்பவர் இருவருமே ஹெல்மெட் அணிந்திருக்க வேண்டும்.அப்போது தான் அபராதத்தில் இருந்து தப்பிக்க முடியும். மற்ற ஊர்களில் ஒருவழிப்பாதையில் சென்றால் பெரிய அளவில் சிக்கல் இருக்காது.
ஆனால் சென்னையில் ஒருவழிப்பாதையில் சென்றால் கண்டிப்பாக அபராதம் விதிப்பார்கள். அதேபோல் சிக்னல் கோட்டை தாண்டி நின்றாலோ, பாதசாரிகள் செல்லும் பாதையில் ஏறி சென்றாலோ அபராதம் உறுதியாக விதிப்பார்கள். கண்ட இடத்தில் பார்க்கிங் செய்தால் கண்டிப்பாக அபராதம் விதிப்பார்கள். இதுதவிர வார இறுதியில் மதுபோதையில் சென்னையில் ஒரு கிலோமீட்டர் கூட சுற்றிவர முடியாது. சுற்றினால் அவர்களுக்கு 10 ஆயிரம் அபராதம் விதிப்பார்கள்.
-
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு












Click it and Unblock the Notifications