4 வயசு தான்! பள்ளிக்குள்ளேயே அலறித் துடித்த பிஞ்சுக் குழந்தை! பதைபதைக்க வைத்த பாரதி மெட்ரிக் பள்ளி!
சென்னை : சென்னை மதுரவாயல் அருகே உள்ள பாரதி மெட்ரிகுலேஷன் என்ற தனியார் பள்ளியில் படித்த நான்கு வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை மதுரவாயல் வெங்கடேஷ்வரா நகர் பகுதியில் இயங்கி வரும் பாரதி மெட்ரிகுலேஷன் தனியார் பள்ளியில் பயின்ற 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மதுரவாயல் பகுதியைச் சேர்ந்த சிறுமியின் தந்தை மதுரவாயல் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார்.
அதில் தனது மகளை கடந்த மாதம் பள்ளியில் சேர்த்ததாகவும் சேர்த்த 10 நாளில் தனது மகள் வீட்டில் வந்து தன்னிடம் யாரோ தவறான முறையில் நடந்து கொண்டதாக அழுததாகவும் அப்போது அது தொடர்பாக பள்ளி நிர்வாகத்திடம் கேட்டுள்ளார்.

பாலியல் தொல்லை
அப்போது பள்ளி நிர்வாகம் தாங்கள் வேண்டுமானால் தங்கள் பிள்ளையை அழைத்துச் சென்று விடுங்கள் என்று கூறி பள்ளி கட்டணமாக செலுத்திய 19 ஆயிரம் பணத்தையும் திருப்பி கொடுத்ததாகவும் மேலும் சரிவர பதில் கூறாமலும் தனது மகளுக்கு நடந்த சம்பவம் குறித்து எந்த விசாரணையும் நடத்தாமல் பள்ளி நிர்வாகம் அலட்சியப் போக்கில் இருப்பதாகவும் புகார் அளித்தார்.

காயங்கள்
அது தொடர்பாக விசாரணை செய்ததில் பள்ளி மாணவிக்கு பிறப்புறுப்பில் சில காயங்கள் இருந்ததும் அது மருத்துவ அறிக்கையில் தெரியவந்ததுள்ளது.போலீசார் விசாரணையில் தெரிய வந்த நிலையில் பள்ளியில் 4 வயது சிறுமியிடம் பாலியல் தொல்லை கொடுத்த நபர் யார் என்பது குறித்து போக்சோ வழக்கு பதிவு செய்துள்ளனர்.

விசாரணை
இந்நிலையில் அந்த வழக்கானது தற்போது வளசரவாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டு குற்றவாளி குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் அலட்சிய போக்குடன் செயல்பட்ட பள்ளி நிர்வாகத்தின் மீதும் சிறுமியிடம் தவறாக நடந்து கொண்ட நபர் யார் என்பது விசாரிக்காமல் அலட்சியப்போக்கை கடைபிடிக்கும் பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.

பெற்றோர் அதிர்ச்சி
கடந்த சில நாட்களாக கல்வி நிலையங்களில் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், நிர்வாகிகளின் அலட்சிய செயலால் அப்பகுதியில் சக பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, மேலும் குற்றவாளியை கண்டுபிடித்து உரிய தண்டனை வழங்க வேண்டும் என்பது சிறுமியின் பெற்றோரின் கோரிக்கையாக உள்ளது.












Click it and Unblock the Notifications