கொஞ்சம் அர்ஜண்ட்..கூகுள் பே இருக்கா? மோகன் ஜி பேரை சொல்லி ஆட்டைய போட்ட கும்பல்! அவரே சொன்ன விளக்கம்!
சென்னை : தனது பெயரில் முகநூல் கணக்கை தொடங்கி மெசஞ்சரில் பணம் கேட்டு ஒரு கும்பல் மோசடியில் ஈடுபட்டு வருவதாகவும், இதனை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் என திரவுபதி, ருத்ரதாண்டவம் உள்ளிட்ட படங்களின் இயக்குனரான மோகன் ஜி கூறியுள்ளார்.
தொழில்நுட்ப வளர்ந்து விட்ட சூழ்நிலையில் அனைத்து தேவைகளையும் செல்போன் மூலமே நிறைவேற்ற கொள்ள முடியும் என்று நிலை உருவாகி இருக்கிறது. தீபாவளிக்கு துணி எடுப்பது முதல் காலை டிபன் வரை எல்லாமே ஆன்லைனில் ஆர்டர் செய்தால் வீடு தேடி வந்து விடும்.
அதேபோல ஃபேஸ்புக் ட்விட்டர் ஆகியவற்றில் கணக்கு இல்லாத நபர்களே கிடையாது. உச்சபட்ச நடிகர்கள் ,பிரபலங்கள், அரசியல்வாதிகள் தொடங்கி சாதாரண மக்கள் வரை அனைவரும் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களை பயன்படுத்தி வருகின்றனர்.

ஆன்லைன் மோசடி
மேலும் வங்கி சேவைகளைப் பெற தற்போதைய தொழில்நுட்ப உலகில் வங்கிகளுக்குச் செல்ல வேண்டியது இல்லை. இருந்த இடத்திலேயே பணம் பெறுதல் அனுப்புதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். இதற்காக கூகுள் பே போன் பே உள்ளிட்ட பல்வேறு டிஜிட்டல் செயலிகள் இருக்கின்றன. இந்த நிலையில் முகநூல் மற்றும் டிஜிட்டல் வங்கி செயல்களை வைத்து மோசடியில் ஈடுபடும் கும்பல்களில் நடமாட்டமும் அதிகரித்து வருகிறது.

மோகன் ஜி
காவல்துறை அதிகாரிகள் மாவட்ட ஆட்சியர்கள் பெயர்களை முகநூலில் போலி கணக்கு தொடங்கி அவற்றின் மூலம் மற்றவர்களை தொடர்பு கொண்டு கூகுள் பே போன் பே மூலம் பணம் பெற்று மோசடியில் ஈடுபடும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் அந்த வகையான ஒரு மோசடியில் தனது பெயர் பயன்படுத்தப்பட்டிருப்பதாகவும் அதனை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் என முகநூலில் கூறியிருக்கிறார் பழைய வண்ணாரப்பேட்டை திரௌபதி ருத்ரதாண்டவம் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்குனரான மோகன் ஜி.

பணம் கேட்டு செய்தி
தற்போது செல்வராகவனுடன் பாகாசுரன் திரைப்படத்தை முடித்துவிட்டு போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளை கவனம் செலுத்தி வருகிறார். நிலையில் தான் தனது பெயரில் முகநூலில் கணக்கு தொடங்கி மெசஞ்சர் மூலம் பணம் பெற்று மோசடி நடப்பதாக கூறியுள்ளார் மோகன் ஜி. இது தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள் அவர், தனது பெயரில் பயன்படுத்தி இதுவரை 25 மேற்கும் மேற்பட்ட நபர்களிடம் பணம் கேட்டு மோசடி நடந்திருப்பதாகவும் ஆனால் இதுவரை யாரும் பணம் செலுத்தவில்லை எனவே அதனை யாரும் நம்ப வேண்டாம் எனக் கூறியுள்ளார்

எச்சரிக்கை
வழக்கமான 'ஹாய்','ஹலோ' என குறுஞ்செய்தியை அனுப்பிய மோசடி நபர்கள் அவசரமாக பணம் தேவைப்படு கிறது. ரூ.15 ஆயிரம் தொகையை கூகுள்பே அல்லது போன்பே வழியாக அனுப்பி வைக்கவும் இரண்டு நாளில் திருப்பிக் கொடுக்கிறேன் என பதில் வந்துள்ளது. இதைப்பார்த்து சந்தேகம் அடைந்த சிலர் மோகன் ஜியை தொடர்புகொண்டு கூறியுள்ளனர். இதனையடுத்தே எச்சரிக்கை வெளியிட்டுள்ளார் மோகன் ஜி.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications