சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

130 நாடுகளின் தேசிய கீதங்களை அச்சு பிசகாமல் பாடி உலக சாதனை.. அசத்திய சென்னை திருவொற்றியூர் மாணவி!

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையைச் சேர்ந்த 8-ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி சுபிக்ஷா, 130 நாடுகளின் தேசிய கீதங்களை, ஸ்ருதி மாறாமல், அந்தந்த மொழிகளிலேயே பாடி, உலக சாதனை படைத்து, அனைவரையும் பிரமிக்க வைத்துள்ளார்.

சென்னை திருவொற்றியூர் பகுதியைச் சேர்ந்த எட்டம் வகுப்பு படிக்கும் 12 வயது மாணவி சுபிக்ஷா, நல்ல நினைவு ஆற்றல் கொண்டவராக திகழ்ந்து வருகிறார். மாணவி சுபிக்ஷா, ஏற்கெனவே சுப்ரபாதம் முழுவதையும் மனப்பாடும் செய்து சிறப்பாக பாடி, அனைவரையும் ஆச்சரியப்படுத்தி வந்துள்ளார். தனது மகளின் அபார ஆற்றலைக் கண்டு பிரமித்த அவரின் தாய், இதுவரை யாரும் நிகழ்த்தாத சாதனையை தனது மகள் படைக்க வேண்டும் என எண்ணினார்.

கல் குவாரி பற்றி புகார் சொல்லுவியா.. விவசாயியை லாரி ஏற்றி கொன்ற கும்பல்.. ஆடிப்போன கரூர் கல் குவாரி பற்றி புகார் சொல்லுவியா.. விவசாயியை லாரி ஏற்றி கொன்ற கும்பல்.. ஆடிப்போன கரூர்

உலக தேசிய கீதங்கள் மனப்பாடம்

உலக தேசிய கீதங்கள் மனப்பாடம்

இதனையடுத்து, உலக நாடுகளின் தேசிய கீதங்களை தேர்ந்தெடுத்து, அந்த மொழிகளில் உள்ள ராகம், உச்சரிப்புகளுடன் பாடுமாறு தனது மகளுக்கு ஊக்கப்படுத்தினர். தாயின் ஊக்கத்தால் உற்சாகமடைந்த மாணவி சுபிக்ஷா, தனது நினைவாற்றலால், உலக நாடுகளின் தேசிய கீதங்களை மனப்பாடம் செய்து பாடி பயிற்சி மேற்கொண்டார். தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்ட மாணவி, 195 நாடுகளின் தேசிய கீதங்களை மனப்பாடமாக பாடும் திறனை வளர்த்துக்கொண்டு, தனது பெற்றோருக்கு பெருமை சேர்த்தார்.

130 நாடுகளின் தேசிய கீதங்கள்

130 நாடுகளின் தேசிய கீதங்கள்

இந்நிலையில், 195 நாடுகளின் தேசிய கீதங்களை பாடி உலக சாதனை படைக்கும் நிகழ்ச்சி, திருவொற்றியூரில் உள்ள நூலகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், கலந்துகொண்ட மாணவி சுபிக்ஷா, காலை 10 மணியிலிருந்து, மாலை 4 மணி வரை இடைவிடாது, 130 நாடுகளின் தேசிய கீதங்களை பாடி அசத்தினார். 130 நாடுகளின் தேசிய கீதங்களை ஸ்ருதி மாறாமல், அந்தந்த மொழிகளில் பாடி, மாணவி சுபிக்ஷா உலக சாதனை படைத்தார்.

மாணவிக்கு குவியும் பாராட்டு

மாணவிக்கு குவியும் பாராட்டு

இந்த உலக சாதனை நிகழ்ச்சியில், திருவொற்றியூரில் உள்ள சங்கர வித்யாலயா பள்ளியின் தாளாளர் ரங்கநாதன், சமூக ஆர்வலர் ஜி. வரதராஜன், தொழிற்சங்க தலைவர் துரைராஜ், திருவொற்றியூர் மண்டல குழு தலைவர் தனியரசு மற்றும் காவல்துறையினர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். உலக சாதனை படைத்த மாணவி சுபிக்ஷாவை அனைவரும் மனதார பாராட்டி, வாழ்த்து தெரிவித்தனர். 130 நாடுகளின் தேசிய கீதங்களை ஸ்ருதி மாறாமல், அந்தந்த மொழிகளில் பாடி உலக சாதனை படைத்த பள்ளி மாணவி சுபிக்ஷாக்கு, பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து வாழ்த்துகளை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

மாணவியின் பெற்றோர் மகிழ்ச்சி

மாணவியின் பெற்றோர் மகிழ்ச்சி

தங்கள் மகளின் திமையை அறிந்து, அவரை ஊக்கப்படுத்தியதாக தெரிவித்த மாணவி சுபிக்ஷாவின் பெற்றோர், தனது மகள் கல்வியிலும் சிறந்து விளங்கி வருவதாக பெருமிதம் தெரிவித்தனர். நினைவாற்றால் அதிகமாக இருந்ததால், சாதனை படைக்க தனது மகள் விரும்பியதாகவும், அதன்பேரில் அவரை ஊக்கப்படுத்தியதாக தெரிவித்தனர். மகள் சாதனை படைக்க உதவிய பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் மாணவி சுபிக்ஷாவின் பெற்றோர் குறிப்பிட்டனர்.

English summary
A school girl from Chennai has created a world record by singing the national anthem of 130 countries in their respective languages without changing the pitch.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X