அரசியல்வாதியைப் போல செயல்படும் ஆளுநர் ஆர்.என்.ரவி.. அமைச்சர் பொன்முடி குற்றச்சாட்டு
சென்னை: பல்கலைக்கழக விவகாரங்களில் ஆளுநர் தலையிடுகிறார் என்றும் அரசியல்வாதிகளைப் போல ஆளுநர் அறிக்கை வெளியிடுவது சரியல்ல என்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார். சட்ட வல்லுநர்களை ஆலோசித்தே முதல்வர் முடிவெடுக்கிறார் அதே நேரத்தில் ஆளுநர் சட்ட வல்லுநர்களை ஆலோசிப்பதில்லை என்றும் பொன்முடி கூறியுள்ளார்.
பல்கலைக்கழகங்களில் காலியாக இருக்கும் துணை வேந்தர்களின் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்திருக்கிறார். பல்கலைக்கழக துணை வேந்தர்களின் பணியிடங்களை நிரப்புவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்திருக்கிறார். துணைவேந்தர்கள் இல்லாமல் சில பல்கலைக்கழகங்களில் பணிகள் நடைபெறுவது தாமதமாகி வருவதால் துணை வேந்தர்களின் பணியிடங்களை நிரப்ப ஆளுநர், வலியுறுத்தி கூறியிருக்கிறார்.

சென்னையில் பல்கலைக்கழக நிர்வாகிகள் சந்திப்பில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள அறிக்கையில், சிண்டிகேட், செனட் உள்ளிட்ட பல்கலைக்கழக நிர்வாக அமைப்பு சார்ந்த கூட்டங்கள் பல்கலைக் கழகங்களில் நடைபெறவேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. பல்கலைக்கழகங்களில் காலியாக இருக்கும் துணை வேந்தர்களின் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கவேண்டும், பல்கலைக்கழக துணை வேந்தர்களுக்கு நடத்தப்படும் தேர்வுமுறை யுஜிசி விதிமுறைக்கு உட்பட்டு நடக்கவேண்டும் எனவும் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இதனிடையே இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பொன்முடி, ஆளுநர் அரசியல் செய்து வருவதாக குற்றம் சாட்டினார். நாகை மீன் வளப் பல்கலைக்கழக பட்டமளிப்பு ஆளுநர் மாளிகையில் நடக்கும் என்பதை எப்படி ஏற்க முடியும்?. பல்கலைக்கழகத்தில் கூட்டங்களை நடத்த வேண்டும் எனக்கூறுபவர் ஆளுநர் மாளிகையில் கூட்டம் நடத்துவது ஏன்? என்று கேட்டார்.

சிண்டிகேட் கூட்டங்கள் பல்கலைக்கழகங்களில் மட்டுமே நடைபெற்று வருகிறது. என்ன நடக்கிறது என்பதை முழுமையாக தெரிந்து கொண்ட பிறகே ஆளுநர் பேச வேண்டும்.மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசையே மதிக்காமல் ஆளுநர் செயல்படுகிறார். ஆளுநர் அரசியல் பேசக்கூடாது என பாஜக தலைவர் அண்ணாமலையே கூறிவிட்டார். ஆளுநர் என்ன அரசியல் செய்தாலும் அது தமிழ்நாட்டில் எடுபடாது என்றும் கூறினார்.
எல்லா துறையிலும் தாம் தான் எல்லாம் என ஆளுநர் ரவி நினைக்கிறார். பல்கலைக்கழக துணை வேந்தர் தேடுதல் குழுவுக்கு 3 உறுப்பினர்களை அறிவித்த பிறகும் அதை ஏற்க மறுக்கிறார் ஆளுநர். வழக்கமான 3 பேரை தவிர யுஜிசி சார்பில் ஒருவரை நியமிக்க வேண்டும் என ஆளுநர் கூறுகிறார். யுஜிசி சார்பில் உறுப்பினர் ஒருவரை நியமிக்க வேண்டிய அவசியம் இல்லை அவ்வாறு நியமிக்க ஆளுநர் விரும்பினால் அவரது சார்பில் நியமிக்கப்படும் உறுப்பினரை யுஜிசி பரிந்துரைப்படி நியமிக்கலாம் என்றும் அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.
-
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு












Click it and Unblock the Notifications