பாம்பின் வாயோடு வாய் வைத்து சுவாசம் தந்து, அசைவின்றி கிடந்த எலிப்பாம்பை உயிர்ப்பித்த நிஜ ஹீரோ முகேஷ்
சென்னை: இணையத்தில் ஒரு எலிப்பாம்பு வீடியோ வைரலாகி கொண்டிருக்கிறது.. அதென்ன எலிப்பாம்பு? குஜராத் மாநிலத்தில் நடந்த இந்த சம்பவத்தின் பின்னணி என்ன? யாரிந்த முகேஷ்? சோஷியல் மீடியாவில் பலரும் முகேஷுக்கு பாராட்டுக்களை சொல்ல என்ன காரணம்? இவைகளை பற்றி இங்கே சுருக்கமாக பார்ப்போம்.
எலிப்பாம்பு.. இது பாம்புதான் என்றாலும், விஷமில்லாத ஒரு நல்ல பாம்பு என்றே சொல்லலாம்.. வயல்களில், தோட்டங்களில், வீடுகளின் சுற்றுப்புறங்களில், குடோன்களில் இந்த எலிப்பாம்பு இருக்கும். ஏன் தெரியுமா? இதுபோன்ற இடங்களில்தான் எலிகள் நடமாடும்.. இந்த எலிகளைதான் இந்த வகை பாம்பு சாப்பிடும். அதனால்தான் எலிப்பாம்பு என்று இதற்கு பெயர்..

எலிப்பாம்பு என்ன செய்யும்
எலிகளை வேட்டையாடி சாப்பிடுவதால், விவசாயிகளுக்கு இது ஒரு நன்மை செய்யும் உயிரினமாகவே கருதப்படுகிறது... வேகமாக நகர்வதுடன், உயரமாக தலையை தூக்கும் பழக்கம் கொண்டதாம் இந்த வகை பாம்புகள்.. அதனால்தான் பலரும் இதை பார்த்து நாகப்பாம்பு என்று நினைத்துவிடுவார்கள். ஆனால், நாகப்பாம்புக்கு இருக்கும் விஷம் எலிப்பாம்புக்கு இல்லை.
அப்படியே எலிப்பாம்பு மனிதனை கடித்தாலும், கடித்த இடத்தில் வலி, வீக்கம் இருக்கலாம். எனினும் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும்..
பாம்புக்கு கரண்ட் ஷாக்
இந்நிலையில் குஜராத் மாநிலம் வல்சாத் பகுதியில் மறக்க முடியாத ஒரு சம்பவம் நடந்துள்ளது... அதாவது, அங்குள்ள எலிப்பாம்பு ஒன்று உணவு தேடி , அங்கிருந்த கரண்ட் கம்பியில் ஏற முயன்றுள்ளது.. அப்போது எதிர்பாராத விதமாக ஷாக் அடித்துவிட்டது.. இந்த அதிர்ச்சியில் சுமார் 15 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த அந்த பாம்பு, அங்கேயே அசைவின்றி கிடந்தது.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த உள்ளூர் மக்கள், உடனடியாக வனவிலங்கு மீட்பாளரான முகேஷ் வயாட் என்பவரை தொடர்பு கொண்டு விஷயத்தை சொல்லி உள்ளார்கள்.. கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கும் மேலாக பாம்புகளை மீட்டு வரும் அனுபவம் கொண்ட முகேஷ்,.. இந்த தகவல் கிடைத்ததுமே உடனே ஸ்பாட்டுக்கு ஓடிவந்தார்..
சுவாசம் சிபிஆர் சிகிச்சை
அசைவின்றி கிடந்த பாம்பை கவனமாக பரிசோதித்தார்.. அப்போதுதான் அதற்கு சுவாசம் இல்லை என்பது முகேஷூக்கு தெரியவந்தது.. உடனே அந்த பாம்பை கையில் எடுத்து, வாயோடு வாய் வைத்து அதற்கு சுவாசம் தர துவங்கினார்.. பிறகு, பாம்பின் இதய பகுதிக்கு அருகில் லேசாக தட்டி தந்தார்..
பின்னர் சிஆர்பி முறையில் அந்த பாம்பை உயிருடன் மீட்கும் முயற்சியில் இறங்கினார்.. அரை மணி நேரத்துக்கு அந்த பாம்பு அசையவே இல்லை.. ஆனாலும் தன்னுடைய முயற்சியை முகேஷ் கைவிடவில்லை.. தொடர்ந்து சிகிச்சையை தந்து கொண்டிருந்தார்..

அசைவின்றி கிடந்த பாம்பு உயிர் பெற்றது
இறுதியாக பாம்பு மெதுவாக சுவாசிக்க ஆரம்பித்தது.. பிறகு உடலையும் அசைக்க துவங்கியது.. பிறகு சுயநினைவும் வந்துவிட்டது.. இந்நிகழ்வை பதற்றத்துடன் சுற்றி நின்று வேடிக்கை பார்த்து கொண்டிருந்த மக்களுக்கு, அப்போதுதான் நிம்மதி வந்தது..
அந்த எலிப்பாம்பை பாதுகாப்பாக பிடித்து, அருகிலுள்ள வனப்பகுதியில் பத்திரமாக விட்டு விட்டு வந்தார் முகேஷ்.. அசைவின்றி கிடந்த பாம்பு உயிருடன் மீட்கப்பட்ட வீடியோதான் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது..
"ஒரு பாம்புக்காக இந்தளவுக்கு முயற்சி செய்யும் மனிதாபிமானி இருக்காரா?" என்று நெட்டிசன்கள் முகேஷை பாராட்டி தள்ளி கொண்டிருக்கிறார்கள்..












Click it and Unblock the Notifications