சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பிரேமலதாவின் ஒரே பேச்சு.. கொதித்தெழுந்த பெண் உறுப்பினர்கள்.. அதிரடி விலகல்.. அமமுகவில் ஐக்கியம்!

பாலியல் வன்கொடுமை எத்தனை நடந்தாலும் பரவாயில்லை, அதிமுக கூட்டணிக்கு வாக்களியுங்கள் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா பேசியதால் தேமுதிகவில் பெரிய பிளவு ஏற்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    Premalatha Campaign: பிரேமலதாவின் ஒரே பேச்சு, கொதித்தெழுந்த பெண் உறுப்பினர்கள்- வீடியோ

    சென்னை: பாலியல் வன்கொடுமை எத்தனை நடந்தாலும் பரவாயில்லை, அதிமுக கூட்டணிக்கு வாக்களியுங்கள் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா பேசியதால் தேமுதிகவில் பெரிய பிளவு ஏற்பட்டுள்ளது. பிரேமலதாவை கண்டித்து தேமுதிக கட்சியில் இருந்து 200க்கும் மேற்பட்ட பெண்கள் கட்சியில் இருந்து விலகி உள்ளனர்.

    லோக்சபா தேர்தல் மற்றும் தமிழக சட்டமன்ற இடைத்தேர்தலுக்காக அதிமுக கூட்டணி தலைவர்கள் தற்போது தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார்கள். தேமுதிக பொருளாளர் பிரேமலதா தமிழகம் முழுக்க பிரச்சாரம் செய்து வருகிறார்.

    தேமுதிக பொருளாளர் பிரேமலதா பேசிய விஷயம் ஒன்று தற்போது அந்த கட்சிக்கு உள்ளேயே பெரிய பிளவை ஏற்படுத்தி உள்ளது. அந்த கட்சியின் பெண் உறுப்பினர்களை பிரேமலதாவின் பேச்சு பெரிய கோபத்திற்கு உள்ளாக்கி உள்ளது.

    என் உயிருக்கு ஆபத்து.. எச் டி குமாரசாமி மீது சுமலதா அம்பரீஷ் பரபரப்பு புகார் என் உயிருக்கு ஆபத்து.. எச் டி குமாரசாமி மீது சுமலதா அம்பரீஷ் பரபரப்பு புகார்

    என்ன பேசினார்

    என்ன பேசினார்

    பாலியல் வன்கொடுமை எத்தனை நடந்தாலும் பரவாயில்லை, அதிமுக கூட்டணிக்கு வாக்களியுங்கள் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா பேசி இருக்கிறார். மேலும் உங்கள் எல்லோரிடமும் கேட்பது இதுதான். இந்த கூட்டணி கண்டிப்பாக உங்களுக்கு உறுதுணையாக இருந்து எல்லா விதத்திலும் உதவும். உங்களின் பாதுகாப்பிற்கு எங்கள் கூட்டணி உறுதியளிக்கும் என்று பிரேமலதா பேசி இருக்கிறார்.

    மிக மோசம்

    மிக மோசம்

    பிரேமலதாவின் இந்த பேச்சு பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் பிரேமலதா பாலியல் குற்றங்கள் நடந்தாலும் பரவாயில்லை தேமுதிக கூட்டணிக்கு வாக்களியுங்கள் என பெண்களை இழிவாக பேசியதை கண்டிக்கும் விதமாக தேமுதிக கட்சியில் இருந்து 200க்கும் மேற்பட்ட பெண்கள் கட்சியில் இருந்து விலகி உள்ளனர்.

    விலகினார்கள்

    விலகினார்கள்

    அதேபோல் மேலும் பெண்களை தொலைபேசியில் ஆபாசமாக பேச சொல்லும் தேமுதிக தேனி மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தியை கண்டித்தும் இவர்கள் கட்சியில் இருந்து விலகி உள்ளதாக தெரிவித்து இருக்கிறார்கள். தேர்தல் நேரத்தில் இவர்கள் இப்படி முடிவெடுத்து இருப்பது கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

    என்ன காரணம்

    என்ன காரணம்

    மேலும் தேனி மாவட்ட தேமுதிக மகளிரணி துணை செயலாளர் ஈஸ்வரி (எ) பூங்கோதை தலைமையில் 200க்கும் மேற்பட்ட பெண்கள் தனது உறுப்பினர்கள் அட்டையுடன் வந்து அமமுக கட்சியில் இணைந்தனர். டிடிவி தினகரன் முன்னிலையில் இவர்கள் அமமுககட்சியில் இணைந்தனர்.

    English summary
    A huge rift in DMDK after Premalatha's remarks on sexual crimes in AIADMK ruling in Tamilnadu.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X