நான் வேணா போட்டியிலிருந்து விலகிக்கிறேன்.. எடப்பாடியிடம் சொன்ன அதிமுக கொங்கு "லீடர்".. ஏன்?
சென்னை: கொங்கு மண்டலத்தில் ஒரு அதிமுக வேட்பாளர் போட்டியிட மாட்டேன் என்று சொன்னதாக செய்திகள் வருகிறது. போட்டியில் இருந்தே விலகுகிறேன் என்று கொங்கு மண்டலத்தில் ஒருவர் போட்டியில் இருந்து கூறியதாக செய்திகள் வருகிறது, என்று மூத்த அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார்.
லோக்சபா தேர்தல் மொத்தம் ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறும் நிலையில் தமிழ்நாட்டில் முதல் கட்டத்திலேயே தேர்தல் நடக்கிறது. வாக்குப்பதிவு அனைத்தும் முடிந்து வரும் ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. ஏப்ரல் 19ம் தேதி தமிழ்நாட்டில் தேர்தல் நடக்கிறது.

இந்த தேர்தலில் அதிமுகவின் நிலை எப்படி இருக்கும் என்று மூத்த அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். .
அதில், அதிமுகவின் வாக்குகள் பிரிகிறது. அதனால்தான் கொங்கு மண்டலத்தில் ஒரு அதிமுக வேட்பாளர் போட்டியிட மாட்டேன் என்று சொன்னதாக செய்திகள் வருகிறது. போட்டியில் இருந்தே விலகுகிறேன் என்று கொங்கு மண்டலத்தில் ஒருவர் போட்டியில் இருந்து கூறியதாக செய்திகள் வருகிறது., ஜெயிக்காது என்று தெரிந்த போது யாரும் பணம் செலவழிக்க விரும்பவில்லை. தெற்கு மண்டலத்தில் பணம் செலவழிக்காமல் பல அதிமுக நிர்வாகிகள் ஒதுங்க ஆரம்பித்துவிட்டனர்.,
இன்னும் பாஜக மட்டுமே வேலை பார்க்கிறது. அண்ணாமலை டீம் வேலை பார்க்கிறது. ரொம்ப அலர்ட்டாக இவர்கள் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். அதிமுக காசு கொடுக்க கூடாது என்பதால் கவனமாக பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். இதை பாஜக கண்கொத்தி பாம்பாக பார்த்துக்கொண்டு இருக்கிறது.
எடப்பாடியின் வீழ்ச்சிதான் அண்ணாமலையின் எழுச்சி என்ற நிலை உள்ளது. இதனால் எடப்பாடி பழனிசாமியை பார்த்துக்கொண்டு இருக்கின்றனர். எடப்பாடிக்கு 20 சதவிகிதம் வாக்குகள் வரும். அதுவும் கூட அதிமுகவிற்கு வரும் வாக்குகள். மற்றபடி வேறு வாக்குகள் வராது. அதைவிட அவர் குறைவாக வாக்குகள் பெறலாம். அவரால் ஒரு இடங்களில் கூட வெல்ல முடியாது.
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக பழைய பலத்தோடு இருக்காது. தேவகவுடா கட்சி போல அந்த கட்சி மாறிவிடும். வன்னிய தலைவர்களை வைத்து சுருங்கி வேளாள கவுண்டர் + வன்னியர் கட்சி என்று சுருங்கிவிடும்., மொத்தமாக சரிந்துவிடும். எடப்பாடி பழனிச்சாமி சாதி அடிப்படையில் சென்றுவிட்டார். அது எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சென்றுவிட்டார்.
எம்ஜிஆர், ஜெயலலிதா இதை செய்து இருக்க மாட்டார்கள். பாஜக வாக்குகள் அதிமுகவிற்கு சென்றுள்ளன. எடப்பாடி பழனிசாமி இதை உணரவில்லை. அதிமுக வாக்கு நாம் தமிழருக்கும் செல்கிறது. பறையர்கள், வண்ணார் , குயவர்கள், போன்றவர்கள் நாம் தமிழருக்கு செல்கின்றனர். நாயுடு, பிற மொழியாளர்கள், பிராமணர்கள் அதிமுகவில் இருந்து பாஜகவிற்கு செல்கின்றனர். தமிழ் தேசியம், இந்துத்துவா இரண்டும் அதிமுகவை அடிக்கிறது.
இந்துத்துவா இந்த முறை வலிமையாக இருக்கிறது. இது அதிமுகவிற்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். அதிமுக இதனால் கண்டிப்பாக பெரிய அளவில் ஆதிக்கப்படும். பன்னீர்செல்வத்தை நீங்கியதால் முக்குலதோர் வாக்குகள் அதிமுகவிற்கு எதிராக செல்கின்றன. வெறும் வெள்ளாள கவுண்டர் கட்சியாக எடப்பாடிக்கு எதிராக அதிமுக மாறி உள்ளது.
அவர் முன்னாடி ஜென்டில்மேன் போல செயல்பட்டார். பல ஜாதி தலைவர்கள் இருந்தனர். இப்போது அவர்களை எல்லாம் வெளியே அனுப்பிவிட்டு எடப்பாடி பழனிசாமி சுருங்கிவிட்டார். ஒரே கட்சியை சேர்ந்த 8 பிரமுகர்கள் அந்த கட்சியில் உள்ளனர்.
அதனால் அது ஒன்று - இரண்டு கட்சிக்கான சாதி போல ஆகிவிட்டது. இதனால்தான் போட்டியில் தொடர் பல அதிமுக வேட்பாளர்கள் விரும்பவில்லை. தெற்கு மண்டலத்தில் பணம் செலவழிக்காமல் பல அதிமுக நிர்வாகிகள் ஒதுங்க ஆரம்பித்துவிட்டனர் என்று மூத்த அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications