உங்களுக்கு உரிமையில்ல! உள்ளே வராதீங்க! இந்துசமய அறநிலையத்துறைக்கு கடித எழுதிய சிதம்பரம் தீட்சிதர்கள்
சென்னை : சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆய்வு செய்யும் அதிகாரம் இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு இல்லை எனவும் ஆய்வுக்கு வருவதை கைவிடாவிட்டால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தீட்சிதர்கள் சார்பில் இந்து சமய அறநிலையத் துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது
சிதம்பரம் நடராஜர் கோயிலை தீட்சிதர்கள் கட்டுப்பாட்டில் நிர்வகிக்கலாம் என கடந்த 2014ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பில் கூறப்பட்டிருந்தது. அதன்படி சுமார் 8 ஆண்டுகளாக உச்சநீதிமன்ற தீர்ப்புப்படி தீட்சிதர்களே அனைத்தையும் நிர்வகித்து வருகின்றனர்.
இந்நிலையில் வரும் ஜூன் 7 மற்றும் 8 ஆம் தேதிகளில் சிதம்பரம் நடராஜர் கோயிலின் கணக்கு வழக்குகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள உள்ளதாகவு, இதுகுறித்த ஆவணங்களை தர வேண்டும் என்றும் கோயில் தீட்சிதர்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை தற்போது நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தீட்சிதர்கள் கடிதம்
இந்நிலையில் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு ஆய்வுக்கு வருவதை கைவிட வேண்டுமென்று இந்து சமய அறநிலையத்துறைக்கு தீட்சிதர்கள் கடிதம் அனுப்பியுள்ளனர். இது தொடர்பாக அனுப்பட்டுள்ள கடிதத்தில், "ஹிந்து அறநிலையத்துறை துணை ஆணையர் தன்னிச்சையாக கோவில் ஆவணங்களை கேட்க முடியாது என்று உச்சநீதிமன்ற தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. ஹிந்து அறநிலையத்துறை வெளியிட்ட 19-.9.-2014 தேதியிட்ட அரசாணை எண் 236-ல் ஹிந்து அறநிலையத்துறை 6-.1-.2014 தீர்ப்பின் படி தீட்சிதர்கள் தனி சமய பிரிவினர் என்பது உறுதி செய்யப்பட்டு, எதிர்கால வழக்குகளிலும், மேற்கண்ட தீர்ப்பின் முடிவு இறுதியாக உள்ளது என்பதை ஒப்பு கொள்ளப்பட்டுள்ளது.

கோவில் பதிவேடுகள்
ஆகையால் நடராஜர் கோயில் நிலங்களை பற்றி தனி வட்டாட்சியரிடம்தான் கேட்கவேண்டும். தங்கள் கடிதத்தில் குறிப்பிட்ட பதிவேடுகள், தங்கள் துறை கட்டுபாட்டில் உள்ள 40 ஆண்டுகளாக நுாற்றுக்கும் மேற்பட்ட கோவில்களிலேயே இல்லை. முக்கிய கோயில்களான பழநி, மதுரை மீனாட்சி, திருவண்ணாமலை கோவில்களில் பதிவேடுகள் இல்லாமல் உள்ளது. நகைகள் பற்றிய விபரத்திற்கு, தாங்கள் 2005ம் ஆண்டு செய்த தணிக்கை அறிக்கை இதுவரை சிதம்பரம் கோவிலுக்கு தரப்படவில்லை..

உயர்நீதிமன்ற தீர்ப்பு
அதனால் தங்களது ஆய்வு மற்றும் தணிக்கையை உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற தீர்ப்புகளுக்கு கட்டுப்பட்டு கைவிடுமாறு கோருகிறோம். மேற்கண்ட அம்சங்கள் ஆணையருக்கு விரிவாக தெரிவித்தும், உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி பல கோவில்களில் நியமணம் செய்த நிர்வாக அதிகாரிகள் கால நிர்ணயம் செய்யப்படாமல், தொடர்ந்து செயல்படுவது சட்டப்படி செல்லாது.மேலும் ஹிந்து சமய அறநிலையத்துறை கோவில்களில் தணிக்கை ஆட்சேபனை 15 லட்சத்திற்கும் மேல் தீர்க்கப்படாமல் உள்ளது.

தார்மீக உரிமையில்லை
பல அதிகாரிகள் கோயில் நிதி முறைகேடாக கையாண்டு உயர்நீதிமன்ற தீர்ப்பில் கண்டிக்கப்பட்டுள்ளார்கள்.இவ்வாறு அறநிலையத்துறை கட்டுப்பாட்டு கோவில்களில் முறைகேடுகளை சரி செய்யாமல், நீதிமன்ற உத்தரவுகளை நிறைவேற்றாமல், அரசியல் சாசன பாதுகாக்கப்பட்ட கோவில் நிர்வாகம் செய்யும் தனி சமய பிரிவினரான தீட்சிதர்களின் நிர்வாகத்தை ஆய்வு செய்ய தார்மீக உரிமையில்லை.

சட்டரீதியான நடவடிக்கை
உச்சநீதிமன் தீப்புகளை சரியாக புரிந்துகொள்ளாமல் தீர்ப்புகளை தவறாக மேற்கொள்காட்டி துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பது தவறு. உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தற்போது எடுக்கப்பட்ட துறைரீதியான நடவடிக்கைகள் மற்றும் அராசணையை திரும்ப பெறவும் மீண்டும் கோரப்படுகிறது.தவறினால் நீதிமன்ற அவமதிப்பு உள்ளிட்ட உரிய சட்டரீதியான நடவடிக்கைகளை எடுக்க நேரிடும்: என அந்த கடித்தத்தில் கூறப்பட்டுள்ளது.













Click it and Unblock the Notifications