அசிங்க அசிங்கமா பேசுவாங்க..பொண்டாட்டி கொடுத்த டார்ச்சர்! யூனிபாஃர்மில் எஸ்ஐ தற்கொலை.. செல்போன் ஆடியோ

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் காவல்துறை எஸ்ஐ கடன் பிரச்சினையால் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்ட நிலையில் தற்போது மனைவியின் கொடுமை காரணமாகவே தான் தற்கொலை செய்து கொண்டதாக அவர் எழுதிய கடிதம் வெளியாகி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை பட்டினப்பாக்கம் காவலர் குடியிருப்பில் தி.நகர் காவல் மாவட்டத்தில் சிறப்பு குற்றப் பலனாய்வு பிரிவு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்த ஜான் ஆல்பர்ட் தனது குடும்பத்தோடு அங்கு வசித்து வந்தார்.

Chennai Police Crime

2016ஆம் ஆண்டு எஸ்ஐயாக காவல்துறையில் அவர் பணியில் இணைந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜெஸ்ஸி என்பவரை திருமணம் செய்து கொண்டார். தம்பதியினருக்கு இரு குழந்தைகள் இருக்கின்றனர்.

இந்நிலையில் ஜான் ஆல்பர்ட் வீட்டில் யாரும் இல்லாத போது தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. நீண்ட நேரமாக அவர் அறையின் கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த ஜெஸ்ஸி அருகில் இருந்தவர்கள் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இதனையடுத்து 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மூலம் அவரை பரிசோதித்த போது அவரது உயிர் பிரிந்ததும் தெரிய வந்தது.

இதை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஜான் ஆல்பர்ட் உடலை ஆம்புலன்ஸ் மூலம் ராயப்பேட்டை அரசு மருத்துவமனை பிணக்கூறு ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தனர். மேலும் ஜான் ஆல்பர்ட்டின் தற்கொலை குறித்து விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் கடன் பிரச்சனை மற்றும் ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்ததால் ஜான் ஆல்பர்ட் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது.

இதற்கிடையே மரணத்திற்கு முன்பாக அவர் உருக்கத்துடன் எழுதிய கடிதம் கிடைத்திருக்கிறது. அதில் "தான் பிறருடன் தகாத உறவில் இருப்பதாக சந்தேகத்தின் பேரில் கல்யாணம் ஆன நாள் முதல் என்னையும் எனது பெற்றோர்களையும் எனது மனைவி மிகவும் ஆபாசமாக பேசி வந்தார். மேலும் கடந்த தந்தையர் தினத்தில் எனது மகளை நான் மிகவும் ஆசையோடு கொஞ்ச சென்றேன். அப்போது மிகவும் என்னை ஆபாசமாக திட்டி மன உளைச்சலை ஏற்படுத்தினார்.

மேலும் மன உளைச்சலை தவிர்ப்பதற்காக ஆன்லைன் ரம்மியில் ஈடுபட்டேன். இதனால் கடன் வாங்கி ஆயிரக்கணக்கில் பணத்தை இழந்தேன். தினம் தினம் செத்துப் போன வாழ்க்கை வாழ்வதற்கு பதிலாக இந்த மண்ணை விட்டு நான் பிரிந்து செல்கிறேன். காவல்துறையில் வீர மரணம் அடைந்திருந்தால் காட் ஆப் ஹானர் செய்திருப்பார்கள்.. ஆனால் நான் கோழை மரணம் அடைகிறேன்.. அதன் காரணமாக எனக்கு பிடித்த காக்கிச்சட்டையில் தற்கொலை செய்து கொள்கிறேன்..

எனது மனைவி என்னை கேவலமாக பேசிய போது ரெக்கார்ட் செய்யப்பட்ட ஆடியோக்கள் எனது போனில் இருக்கிறது. அதனை எனது நண்பன் மூலம் பாஸ்வேர்டை பெற்றுக் கொண்டு காவல்துறையினர் கேட்கலாம். நான் கடன் பிரச்சனை காரணமாகத்தான் தற்கொலை செய்து கொண்டேன் என யாரும் நினைக்க வேண்டாம். என் மனைவி கொடுத்த டார்ச்சரால் மன உளைச்சலால் தான் நான் தற்கொலை செய்து கொள்கிறேன்.

நான் வாங்கிய கடன் மற்றும் நான் சேர்த்து வைத்திருந்த அனைத்தையும் எனது பெற்றோரிடம் ஒப்படைக்க வேண்டும். எனது பெற்றோரிடம் தான் என் உடலை கொடுக்க வேண்டும்.. என் உடலை பார்க்கக் கூட எனது மனைவி வரக்கூடாது. அப்போதுதான் எனது ஆத்மா சாந்தியடையும். என்னை நன்றாக வளர்த்த எனது பெற்றோர் என்னுடன் பழகிய நண்பர்கள், எனது காவல்துறை உயர் அதிகாரிகள் அனைவருக்கும் நன்றி.. எல்லோரும் என்னை மன்னித்து விடுங்கள்" என அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

எந்தவொரு பிரச்சனைக்கும் தற்கொலை தீர்வல்ல என்பதனை புரிந்துகொள்வோம்..

உதவிக்கு - மன நல ஆலோசனை எண் 104 மற்றும் 14416 என்ற எண்னை அழையுங்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+