மாதத்தில் இது மாதிரி ஒரு நாள் வாழ்ந்தாலே போதுமே! சினேகன் வீட்டில் கனிகா என்ன செய்கிறார் பாருங்க!
சென்னை: மாதத்தில் இது மாதிரி ஒரு நாள் இல்ல, ஆண்டுக்கு ஒரு நாளாவது இந்த மாதிரி வாழ்ந்தால் இன்பம் கிடைக்குமே!
கூட்டுக் குடும்பங்கள் எல்லாம் இன்றைய அவசர உலகத்தில் தேய்ந்து சிறிய குடும்பம் ஆகிவிட்டது. அந்த காலத்தில் தாத்தா, பாட்டி, சித்தப்பா, சித்தி, பெரியப்பா, பெரியம்மா, மாமா, அத்தை உள்ளிட்டோருடன் குழந்தைகள் வளர்ந்தனர்.

இதனால் அவர்களுக்கு நல்லது கெட்டது தெரிந்தது. பல்வேறு விஷயங்களை அவர்களுடன் இருந்து கற்றதால் அறிவு கூர்மை, புத்திசாலித்தனம் வளர்ந்தது. கூட்டுக் குடும்பத்தின் மூலம் பலதரப்பட்ட மக்களை எப்படி அட்ஜெஸ்ட் செய்துக் கொண்டு வாழ பழகுவது உள்ளிட்டவற்றையும் கற்றுக் கொண்டனர்.
கூட்டுக் குடும்பத்தில்தான் குழந்தைகள் சரளமாக பேசக் கற்றுக் கொள்கிறார்கள். ஆனால் இன்று அப்படி இல்லை. சிறிய குடும்பத்தில் தாயும், தந்தையும் அலுவலகத்திற்கு சென்றுவிடுகிறார்கள். குழந்தைகள் தனிமையில் வளருகிறார்கள். இதனால் பேசுவதற்கு தாமதமாகிறது.
மேலும் செல்போனையே தங்கள் உலகமாக நினைத்துக் கொண்டு அதிலேயே லயித்து போகிறார்கள். இரவு நேரத்தில் மின்மினி பூச்சு போல் விளக்குகளை அணைத்தாலும் செல்போன் வெளிச்சத்தில் குழந்தைகள் கேம்ஸ், யூடியூப் பார்த்து வருகிறார்கள்.
அது போல் அந்த காலத்தில் கூட்டுக் குடும்பத்தினருடன் குழந்தைகள் படுத்து தூங்கினர். அது போல் அவர்களுடனேயே காலையில் எழும் பழக்கத்தையும் கொண்டிருந்தனர். ஆனால் இன்று நிலைமை தலைகீழ்! இரவு தூங்குவதற்கு 1 மணி , 2 மணி ஆகிறது. காலை எழுவதற்கு 10, 11 மணி ஆகிறது.
இப்படிப்பட்ட சூழலில் குடும்பத்தினருடன் ஒன்றாக படுத்து உறங்கும் காலமும் செல்போன் இல்லாத உலகமும் இப்போது கிடைத்தால் எப்படி இருக்கும். கவிஞர் சினேகன் வீட்டில் அது போன்ற ஒரு சம்பவம் நடந்த வீடியோவை இன்பா என்ற சமூகவலைதளவாசி வெளியிட்டு, மாசத்துல ஒரு நாள் இல்ல, வருடத்திற்கு ஒரு நாள் இந்த மாதிரி வாழுங்க! இன்பமான வாழ்க்கை... இதுக்கு எல்லாம் சான்சே இல்லாம போச்சு! என குறிப்பிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் சினேகன் வீட்டிற்கு அவருடைய சொந்தக்காரர்கள் எல்லாம் வந்திருக்கிறார்கள். கிட்டதட்ட 20 பேராவது இருப்பர். வீட்டு ஹாலில் பாய் போட்டு , தலையணை போடுகிறார்கள், சினேகன் மனைவி கனிகா, அனைவரது செல்போனையும் சேகரிக்கிறார். அதை வேறு ஒரு இடத்தில் வைத்துக் கொள்கிறார். அன்றைய தினம் செல்போனே இல்லாமல் குடும்பத்தினர் அனைவரும் படுத்து உறங்குகிறார்கள். இப்படிப்பட்ட வாழ்க்கை அனைவருக்கும் கிடைத்தால் எப்படி இருக்கும்.












Click it and Unblock the Notifications