ஐடி துறையில் கொடிகட்டி பறக்கும் தமிழர்கள்! மாஸ்டர் மைண்ட் கருணாநிதி! ஸ்டாலின் பேசிய பிளாஷ்பேக்!
அரசு அலுவலகங்களில் - அரசு சேவைகளில் Mobile Governance, E-Governance கொண்டு வந்தவர் கருணாநிதி என ஸ்டாலின் பெருமிதம்.
சென்னை: தகவல் தொழில்நுட்பத் துறையில் புரட்சியை ஏற்படுத்தியவர் கருணாநிதி என்றும் உலகம் முழுவதும் தமிழ்நாட்டை சேர்ந்த IT Professionals அதிகளவில் இருப்பதற்கு காரணம் அவர் தான் எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
அரசுப் பள்ளிகளில் பயிலும் கிராமப்புற, ஏழை - எளிய மாணவர்கள் கணினி எனும் இயந்திரத்தை நேரில் பார்த்திராத காலகட்டத்தில், அவர்களுக்கு கணினிக் கல்வியைத் தந்தவர் கருணாநிதி என்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தேடி வந்து தேர்வு செய்யக்கூடிய முதல் நகரமாக சென்னையை அவர் மாற்றிக்காட்டினார் என மிகப் பெருமையுடன் பேசியுள்ளார் ஸ்டாலின்.
கணினி என்ற பெயரை தமிழ்நாட்டில் பலரும் கேள்விப்படுவதற்கு முன்னதாகவே, டைடல் பார்க்கை சென்னையில் அமைத்த தொலைநோக்கு பார்வை கொண்டவர் கருணாநிதி என புகழாரம் சூட்டியுள்ளார் ஸ்டாலின்.
தகவல் தொழில்நுட்பத் துறைக்கு திமுக ஆட்சிக்காலங்களில் குறிப்பாக கருணாநிதி முதல்வராக இருந்தபோது கொண்டுவரப்பட்ட திட்டங்கள் பற்றி ஸ்டாலின் பட்டியலிட்டு சென்னையில் நடைபெற்ற ஐடி துறை நிகழ்ச்சி ஒன்றில் பேசினார். அதன் விவரம் வருமாறு;

கணினிக் கல்வி
• திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக் காலத்தில் அதாவது 1997-ஆம் ஆண்டே தகவல் தொழில்நுட்பக் கொள்கையை கலைஞர் முதன்முதலில் தமிழ்நாட்டிற்கு வகுத்துக் கொடுத்தார்.
• அரசுப் பள்ளிகளில் பயிலும் கிராமப்புற, ஏழை - எளிய மாணவர்கள் கணினி எனும் இயந்திரத்தை நேரில் பார்த்திராத காலகட்டத்தில், அவர்களுக்கு கணினிக் கல்வியைத் தந்தார்.
• 1999-2000-ஆம் ஆண்டே, பள்ளிப் பாடத் திட்டத்தில் மட்டுமின்றி, கலை, அறிவியல், மருத்துவம், சட்டம் உள்ளிட்ட கல்விப் பாடத்திட்டங்களிலும் கணினி பாடத்தை கலைஞர் கொண்டுவந்தார்.
• 1996-2001 ஆட்சிக் காலத்திலேயே 'Empower IT' என்ற நிகழ்ச்சியை ஆண்டுதோறும் நடத்தி, தகவல் தொழில்நுட்பத்தின் முக்கியத்துவத்தை பட்டிதொட்டிகள் எல்லாம் கலைஞர் கொண்டு சென்றார்.

அரசு அலுவலகங்களில்
• அப்போதே Mobile Governance, E-Governance போன்றவை அரசு அலுவலகங்களில் - அரசு சேவைகளில் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
• தமிழ்நாட்டில் IT Professionals ஏராளமாக உருவாகக் காரணமாக இருந்தார்.
• தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தேடி வந்து தேர்வு செய்யக்கூடிய முதல் நகரமாக சென்னையை அவர் மாற்றிக் காட்டினார்.
• தகவல் தொழில்நுட்பத்துக்கு என தனித் துறையையும் 1998-ஆம் ஆண்டிலேயே உருவாக்கி, அதற்கு தனி அமைச்சரையும் நியமித்தார்.

டைடல் பார்க்
• கணினி என்ற பெயரைப் பலரும் கேள்விப்படுவதற்கு முன்னதாகவே, டைடல் பார்க்கை தமிழ்நாட்டில் அமைத்த தொலைநோக்கு பார்வை கொண்டவர் தான் கலைஞர்.
*1997-இல் தரமணியில் டைடல் பார்க்கை உருவாக்கிட அதற்கென புதுக் கொள்கையினை உருவாக்கி, ஆசியாவிலேயே மிகப் பெரிய தகவல் தொழில்நுட்பக் கட்டடமாக அதனைக் கட்டி, 2000-ஆம் ஆண்டில் அதனைத் திறந்து வைத்து, தமிழ்நாட்டிற்கே பெருமை சேர்த்தார்.
• தகவல் தொழில்நுட்பத்தில் தமிழ்நாடு நிகழ்த்தியிருக்கும் இன்றைய சாதனை, கலைஞரின் தொலைநோக்குப் பார்வைக்குக் கிடைத்த வெற்றிதான் என்று நாம் உறுதியோடு சொல்லமுடியும்.

தகவல் தொடர்பு தொழில்நுட்ப அகாடமி
* தகவல் தொலைத் தொடர்பு சார்ந்த தேசிய மின் ஆளுமைத் திட்டங்கள் மற்றும் மாநில அரசின் பல்வேறு மின் ஆளுமைத் திட்டங்களை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதில், மற்ற மாநிலங்களுக்கு தமிழ்நாடு முன்னோடியாக விளங்கிக் கொண்டிருக்கிறது.
* தமிழ்நாடு தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பவியல் நிறுவனம் சார்பில் உயர் கல்வி ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும், பல்வேறு தகவல் தொழில்நுட்பங்களில் பயிற்சி அளித்து வருகிறது.
* 2009-ஆம் ஆண்டு கழக ஆட்சியில்தான் தமிழ்நாடு தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்ப அகாடமி (ICTACT) தொடங்கப்பட்டது.
-
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications