சம்பவம் இருக்கு.. வங்கக்கடலில் உருவாகும் 'அசுரன்'! தேதி குறித்த வானிலை ஆய்வு மையம்!
சென்னை: வங்கக்கடலில் வரும் 27ம் தேதி காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதேபோல இன்று 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் கூறியுள்ளது.
குமரிக்கடல், தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு - மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், கடந்த சில நாட்களாக தமிழ்நாடு முழுவதும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக மேட்டூர் தவிர மற்ற அணைகள் எல்லாம் நிரம்பியுள்ளன. ஆனால் வடகிழக்கு பருவமழை தற்போது வரை 10 சதவிகிதம் குறைவாகதான் பெய்திருக்கிறது என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இந்நிலையில் இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "அந்தமான் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடலில் வரும் 27ம் தேதி காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும். இது வலுப்பெற்று 29ம் தேதி காற்றழுத்த மண்டலமாக மாற வாய்ப்பிருக்கிறது. இதன் காரணமாக தமிழகம் புதுச்சேரியில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும். இன்று திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்யும்.
அடுத்த 2 மணி நேரத்தை பொறுத்த அளவில், அதாவது மாலை 4 மணி வரை தமிழ்நாட்டில் சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, கடலூர், பெரம்பலூர், அரியலூர், திருவாரூர், தஞ்சாவூர், ராமநாதபுரம், திருப்பூர், கரூர், திண்டுக்கல் என 15 மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும்.
அதேபோல திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர், தருமபுரி, சேலம், புதுக்கோட்டை, நீலகிரி மற்றும் திருநெல்வேலி என 9 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக ஆய்வு மையம் கூறியுள்ளது.
சென்னையை பொறுத்த அளவில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications