ஆரம்பிச்சாச்சு.. தண்ணீர் பிடிப்பதில் தகராறு.. பெண்ணுக்கு கத்திக்குத்து.. சபாநாயகரின் ஒட்டுநர் கைது!
Recommended Video
சென்னை: சென்னையில் நிலவும் தண்ணீர் பிரச்சனை கத்துக்குத்து வரை சென்றுள்ளது. தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட தகாராறில் பெண்ணை வெட்டிய சபாநாயகரின் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னையில் இந்த இடம், அந்த இடம் என சொல்வதற்கு இல்லை. பெரும்பாலான இடங்களில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
தண்ணீர் பிரச்சனையால் என்ன செய்வது என்று தெரியாமல் மக்கள் பெரும் தவிப்புக்கு ஆளாகியுள்ளனர். மழையின்றி நிலத்தடி நீர் வற்றியதால்கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

குடங்களின் கணக்கு
குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள் தனியார் லாரிகளில் தண்ணீர் வாங்கியே பயன்படுத்தி வருகின்றனர். இதனால் குடங்களின் கணக்கு அடிப்படையிலேயே மக்களுக்கு தண்ணீர் வழங்கப்படுகிறது.

தண்ணீர் பிடிப்பதில் தகராறு
இதனால் பல இடங்களில் தண்ணீரால் மக்களிடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் பெண்ணை கத்தியால் குத்திய சபாநாயகரின் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சபாநாயகரின் ஓட்டுநர்
சென்னை அனகாபுத்தூர் அமரேசன் நகரில் உள்ள குடியிருப்பில் தமிழக சபாநாயகரின் ஓட்டுநர் ஆதிமூலராமகிருஷ்ணன் வசித்து வருகிறார். இந்த குடியிருப்பில் மோகன் என்பவரும் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

மோட்டார் போட்டதால் தகராறு
இந்நிலையில் மோகன் வீட்டில் தண்ணீர் வரவில்லை எனக்கூறி மோட்டார் போட்டு தண்ணீர் பிடித்துள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சபாநாயகரின் ஓட்டுநர் ஆதிமூலராமகிருஷ்ணன் மோகனுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

பெண்ணுக்கு 6 தையல்கள்
அப்போது ஆத்திரமடைந்த ஆதிமூலராமகிருஷ்ணன் கத்தியால் மோகனின் மனைவி சுபாஷினியின் முகத்தில் குத்தியுள்ளார். இதில் தாடையில் பலத்த காயமடைந்த சுபாஷினி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு 6 தையல்கள் போடப்பட்டுள்ளது.

கத்தி வரை சென்ற தண்ணீர் பிரச்சனை
இந்நிலையில் சுபாஷினியை கத்தியால் வெட்டிய சபாநாயகரின் ஓட்டுநர் ஆதிமூலராமகிருஷ்ணனை போலீசார் கைது செய்துள்ளனர். தண்ணீர் பிரச்சனை கத்தி வரை சென்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications