இறுதி அஞ்சலிக்குப் போன போது விபத்தில் சிக்கிய குடும்பம்.. காப்பாற்றிய நபர் பரிதாப மரணம்!
Recommended Video

சென்னை: சென்னையில் விபத்தில் உயிரிழந்த உறவினர்களின் இறுதி அஞ்சலிக்கு வந்தவர் மற்றொரு விபத்தில் சிக்கி உயிரிழந்தார். தனது உயிரை துச்சமென மதித்து தனது குடும்பத்தினரை காப்பாற்றி விட்டு அவர் பரிதாபமாக பலியாகியுள்ளார்.
சென்னை திருமங்கலம் திருநகரைச் சேர்ந்த மீரான் மொய்தீன் என்பவர் குடும்பத்தினருடன் மதுராந்தகம் அருகே காரில் சென்று கொண்டிருந்த போது கார் சாலைத் தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் மீரான் மொய்தீனும் அவரது சகோதரி மகள் யாஸ்மினும் உயிரிழந்தனர். அவர்களின் இறுதிச் சடங்குகள் சென்னை திருநகரில் உள்ள மீரான் மொய்தீன் வீட்டில் நடைபெற்று வருகின்றன.

சாலையோரம்
இதில் பங்கேற்பதற்காக மீரான் மொய்தீனின் உறவினரான திண்டுக்கல்லைச் சேர்ந்த உபயதுல்லா என்பவர் குடும்பத்தினருடன் பஸ் மூலம் சென்னை வந்தார். அவர்கள் மீரான் மொய்தீன் வீட்டுக்குச் செல்வதற்காக இன்று அதிகாலையில் திருமங்கலத்தில் சாலையோரமாக சென்று கொண்டிருந்தனர்.

வேறு புறம்
அப்போது அங்கு அபாயகரமான வேகத்தில் வந்த ஒரு சொகுசுக் காரின் ஓட்டுநர், திருமங்கலம் சிக்னல் அருகே எதிரே உள்ள சாலையில் இருந்து திரும்பிய கார் மீது மோதாமல் தவிர்க்க சொகுசு காரை வேறுபுறம் திருப்பினார்.

பலி
அப்போது கட்டுப்பாட்டை இழந்து கார் சாலையோரமாகச் சென்றுகொண்டிருந்த உபயதுல்லா குடும்பத்தினரை நோக்கிப் பாய்ந்தது. அப்போது குடும்பத்தினர் அனைவரையும் எச்சரித்தும் பிடித்துத் தள்ளியும் காப்பாற்றிய உபயதுல்லா, தான் தப்பிக்க அவகாசம் இன்றி கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

டிரைவர்
இதனைத் தொடர்ந்து அந்த சொகுசு கார் அந்த இடத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த செங்கல் உள்ளிட்டவற்றில் மோதி நின்றது. இந்த விபத்தில் சொகுசுக் காரின் ஓட்டுநரான சதீஷின் வலது கால் எலும்பு முறிந்தது.

மதுபோதை
விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வரும் திருமங்கலம் போக்குவரத்துப் போலீசார் விபத்தை ஏற்படுத்திய சதீஷ் நினைவு திரும்பிய பின் மது அருந்தியிருந்தாரா என விசாரணை மேற்கொண்டனர்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications