சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இந்த கோவாக்சின் கோழி ஸ்டேட் கவர்மெண்டுக்காக உரிச்சது.. விலை 600 ரூவா!

Google Oneindia Tamil News

சென்னை: கொரோனா தடுப்பூசியான கோவாக்சினுக்கு 3 விலைகள் நிர்ணயிக்கப்பட்டதையும் கமல்ஹாசன்- கவுண்டமணியின் உறிச்ச கோழி காமெடியையும் ஒப்பிட்டு கிண்டலடிக்கும் மீம்ஸ் சமூக வலைதளத்தில் வைரலாகிறது.

போன தடவையே மாடு மாதிரி ஆகிட்டோம்.. இந்த தடவை வெடிச்சுடுவோமோ.. இப்டியும் ஒரு கவலையா?போன தடவையே மாடு மாதிரி ஆகிட்டோம்.. இந்த தடவை வெடிச்சுடுவோமோ.. இப்டியும் ஒரு கவலையா?

கோவாக்சின் தடுப்பூசிக்கான விலை அண்மையில் அறிவிக்கப்பட்டது. மத்திய அரசுக்கு ரூ150, மாநில அரசுகளுக்கு ரூ600, தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ1200 என விலை நிர்ணயம் செய்யப்பட்டது.

ஒரு தடுப்பூசிக்கு 3 விலைகள்

ஒரு தடுப்பூசிக்கு 3 விலைகள்

ஒரு கோவாக்சின் தடுப்பூசிக்கு ஏன் இந்த 3 விலைகள் என்கிற கேள்வி எழுந்தது. இப்படியான குழப்பமான விலை நிர்ணயத்துக்கு காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

கமல்-கவுண்டமணி காமெடி

கமல்-கவுண்டமணி காமெடி

இந்த குழப்பத்தை நெட்டிசன்கள் மட்டும் சும்மா விடுவார்களா? மகராசன் திரைப்படத்தில் கமல்ஹாசன், கவுண்டமணி, செந்திலின் கலக்கல் காமெடியான உறிச்ச கோழியை முன்வைத்து மீம்ஸ் போட்டு தெறிக்கவிட்டுவிட்டனர். அந்த படத்தில் கசாப்பு கடை வைத்திருக்கும் கமலிடம் செந்தில், 2கிலோ கொண்ட ஒரே கோழி வேண்டும் என்பார். கமல்ஹாசன் 2 கோழிகளை அறுத்து போட்டு ஒரே கோழி என்பார். அதாவது ஒரு கோழி சின்ன வயதில் உறிச்சது; இன்னொன்று அது வளர்ந்த பின்னர் உறிச்சது என்று குழப்பிவிடுவார். கவுண்டமணி விளக்கம் கேட்ட போதும் இதையே கமல் சொல்வார்.

காமெடி மீம்

காமெடி மீம்

இந்த காமெடி சீனை வைத்துதான் இப்போது கோவாக்சினையும் ஓட்டிவருகின்றனர் நெட்டிசன்கள். அதாவது ரூ600 கொண்ட கோவாக்சின் கோழி மாநில அரசுகளுக்காக உறிச்சது; ரூ1200 கொண்ட அதே கோவாக்சின் கோழியும் தனியார் மருத்துவமனைகளுக்கு உறிச்சது; ரூ150 கொண்ட கோவாக்சின் கோழியும் மத்திய அரசுக்காக உறிச்சது என்கிறது அந்த காமெடி.

வைரலான மீம்

வைரலான மீம்

ஒரே ஒரு கோவாக்சினுக்கு இத்தனை விலை வைத்து மக்களை குழப்புவதை விமர்சிக்கும் வகையில் இந்த மீம்ஸ் போடப்பட்டிருக்கிறது. இப்போது இந்த மீம்ஸ் மட்டுமல்ல... மகராசன் படத்தில் வரும் காமெடி சீனும் சமூக வலைதளங்களில் வைரலாக்கப்பட்டு வருகிறது.

English summary
A Meme on Covaxin Price went viral in Social Medias.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X