செங்கல்பட்டில் பிளாட்பாரத்துக்கும், ரயிலுக்கும் நடுவில் பிரமிளா.. நொடியில் எமன் வாசலை தொட்டு வந்த பெண்
சென்னை: செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் நடந்த ஒரு திடீர் விபத்து, அனைவரையும் பதறவைத்ததுடன், ஒரு ஆர்பிஎப் காவலரின் நொடிப்பொழுது துணிச்சலால் பெரிய உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது.. இந்த சம்பவம்தான் வீடியோவாகவும் சோஷியல் மீடியாவில் பரவி வருகிறது.. இதை பார்த்த பொதுமக்கள் ஆர்பிஎப் போலீசுக்கு பாராட்டுக்களை அள்ளி வீசி கொண்டு இருக்கிறார்கள்..
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி பகுதியை சேர்ந்தவர் பிரமிளா.. இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.. சொந்த காரியமாக சென்னை வந்த பிரமிளா, தன்னுடைய 2 குழந்தைகளுடன் விழுப்புரம் கிளம்பி செல்ல தயாரானார்..

சென்னை தாம்பரத்திலிருந்து விழுப்புரம் நோக்கி செல்லும் பயணியர் ரயிலில் ஏறுவதற்காக நேற்று செங்கல்பட்டு ரயில் நிலையத்தின் 6வது பிளாட்பாரத்துக்கு வந்தார்..
செங்கல்பட்டு ரயில்வே ஸ்டேஷன்
அப்போது நடைமேடையில் இருந்து ரயில், மெதுவாக நகரத்தொடங்கியது.. இதை பார்த்த பிரமிளா, குழந்தைகளுடன் அவசர அவசரமாக பெட்டியில் ஏற முயன்றார்.. அப்போது பிரமிளா எதிர்பாராத விதமாக நிலைதடுமாறியதுடன், ஓடும் ரயிலுக்கும் பிளாட்பாரத்திற்கும் இடையிலான இடைவெளியில் தவறி விழுந்துவிட்டார்.
இதை பார்த்த அங்கிருந்த பயணிகள் அலறி கத்தினார்கள்.. ரயிலுக்கு அடியில் பிரமிளா
சென்றுவிட்டதால், என்ன செய்வதென்று தெரியாமல் விழித்தனர்.. ஆப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஆர்பிஎப் காவலர் தயாநிதி என்பவர், இன்றி உடனடியாக விசிலை ஊதி, டிரைவருக்கு எச்சரிக்கை சைகை காட்டினார்.
ரயிலுக்கு அடியில் பிரமிளா
சைகையை கவனித்த ரயில் ஓட்டுநரும் உடனடியாக ரயிலை நிறுத்தினார். இதனால் சக்கரங்களுக்கு இடையில் சிக்க இருந்த பிரமிளா நூலிழையில் உயிர் தப்பினார்.
தொடர்ந்து, ரயிலுக்கு அடியில் சிக்கியிருந்த பிரமிளாவை காவலர் தயாநிதியும் அங்கிருந்த பயணிகளும் சேர்ந்து பாதுகாப்பாக மீட்டனர்.
அவரை உடனடியாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்... உடனடியாக சிகிச்சை தரப்பட்டதையடுத்து, பிரமிளா அபாய கட்டத்தில் இருந்து மீண்டு விட்டதாக தெரிவித்தனர்.
சபாஷ் ஆர்பிஎப் போலீஸ்
ஆர்பிஎப் காவலரின் விழிப்புணர்வு அனைவரிடமும் பாராட்டைப் பெற்றுள்ளது. சரியான நேரத்தில் விழிப்புணர்வுடன் செயல்பட்டு ஒரு உயிரை காப்பாற்றிய ஆர்பிஎப் காவலர் தயாநிதியின் துணிச்சலான செயலை, ரயில்வே பாதுகாப்புப் படை ஆய்வாளர் உன்னிகிருஷ்ணன் மற்றும் சக அதிகாரிகள் வெகுவாகப் பாராட்டினர்...
இந்த பரபரப்பான சம்பவத்தின் வீடியோவும் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது. பொதுமக்கள் இந்த காவலருக்கு தங்களது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர். இதனிடையே, ரயில் முழுமையாக நிற்கும் வரை காத்திருந்து ஏற வேண்டும் என்று ரயில்வே நிர்வாகமும் அறிவுறுத்தியுள்ளது.
-
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
பெட்ரோல் டூவீலர்களுக்கு மொத்தமாக தடை.. அரசு திட்டவட்டம்! ஏற்கனவே பைக் வைத்திருப்போர் என்ன செய்யணும்? -
இரவிலேயே பாய் விரித்து இடம்.. நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள் -
மணி பிளான்ட் இனி தேவையில்லை.. காந்தம் போல பணத்தை ஈர்க்கும் 'அந்த' ஒரு செடி! வீட்டில் எங்கே வைக்கலாம் -
6 மாதங்களில் அண்ணாமலைக்கு தமிழக முதல்வர் பதவி! இபிஎஸ் தலையில் இடியை இறக்கிய திருமாவளவன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ்: மயில் கர்ப்பத்தை பற்றி பழனி சொன்ன விஷயம்! கோபத்தில் சரவணன்.. கதிர் செய்த நல்ல விஷயம் -
Gold: பசிபிக் கடலுக்கடியில் குவிந்து கிடக்கும் ”தங்கம்” கண்டுபிடித்த விஞ்ஞானிகள்.. எம்மாடியோவ்! -
ராகுல் காந்தியை பார்த்ததும்.. திரும்பி வந்து பேசிய பிரதமர் மோடி.. நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த சுவாரசியம் -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
ஈரான் கொடுத்த ஷாக்.. ஆடிப்போன அமெரிக்கா.. பூதாகரமாக வெடிக்கும் கண்ணிவெடி விவகாரம்! -
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்!












Click it and Unblock the Notifications