சசிகுமார் நடித்த அயோத்தி படம் கதை யாருடையது? எழுத்தாளர்கள் எஸ்ரா-மாதவராஜ் இடையே டிஸ்யூம் டிஸ்யூம்!
சசிகுமாரின் அயோத்தி கதை யாருடையது என்பது சர்ச்சையாக வெடித்துள்ளது.
சென்னை: இயக்குநரும் நடிகருமான சசிகுமார் நடித்த அயோத்தி படத்தை முன்வைத்து புதிய சர்ச்சை வெடித்துள்ளது. இப்படத்தின் கதை யாருடையாது என்பதில் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் (எஸ்.ரா, எஸ்ரா) மற்றும் மாதவராஜ் இடையே சமூக வலைதளங்களில் மோதல் வெடித்துள்ளது.
சசிகுமார் நடிப்பில் வெளியான அயோத்தி திரைப்படம் அனைத்து தரப்பினராலும் வரவேற்கப்பட்டு வருகிறது. நீண்ட இடைவெளிக்குப் பின்னர் சசிகுமார் வெற்றிப் படத்தை கொடுத்திருப்பதாக கொண்டாடப்பட்டு வருகிறார்.

இப்படம் தொடர்பாக எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் தமது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருந்ததாவது: சிறந்த இயக்குநரும் நடிகருமான சசிகுமார் இன்று சாலிகிராமத்திலுள்ள எனது அலுவலகம் வந்திருந்தார். நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தோம். அவரது நடிப்பில் இயக்குநர் மந்திரமூர்த்தி இயக்கத்தில் நேற்று வெளியாகியுள்ள அயோத்தி திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
இப்படத்தின் கதை என்னுடையது. திரைப்படத்திற்காகவே இதனை எழுதினேன். படம் மிகுந்த உணர்ச்சிப் பூர்வமான வரவேற்பை பெற்றுள்ளது. திரையரங்கினை விட்டு வெளியே வரும் பலரும் கண்ணீர் மல்கப் பாராட்டுகிறார்கள். ஊடகங்கள் படத்தைக் கொண்டாடுகின்றன. திரையுலகினை சேர்ந்த பலரும் எனக்குத் தொலைபேசியில் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள். மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது.

அயோத்தி திரைப்படத்தின் வெற்றிக்கு சசிகுமார் காட்டிய தீவிர அக்கறையும் ஈடுபாடுமே முக்கியக் காரணம். கதையை மட்டுமே முதன்மைப்படுத்தித் தனது கதாபாத்திரத்தைச் சரியாக உள்வாங்கி அவர் திறம்பட நடித்துள்ளார். அவரது ComeBack film என மக்கள் கொண்டாடுகிறார்கள். இயக்குநர் மந்திரமூர்த்தி உணர்வுப் பூர்வமாகப் படத்தை உருவாக்கியது பாராட்டுக்குரியது. தேர்ந்த நடிகர்கள். சிறந்த இசை, கச்சிதமான படத்தொகுப்பு எனப் படம் நன்றாக உருவாக்கப்பட்டுள்ளது. நல்லதொரு படத்தை உருவாக்கிய தயாரிப்பாளர் டிரைடன்ட் ரவீந்திரனை மனம் நிறைந்து பாராட்டுகிறேன். இன்று அந்த மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளச் சசிகுமார் வந்திருந்தார். அவருடன் இணைந்து இன்னொரு திரைப்படம் எழுதுகிறேன். புதிய படத்திற்கான கதை குறித்துப் பேசினோம். இவ்வாறு எஸ்.ரா. பதிவிட்டிருந்தார்.

ஆனால் எழுத்தாளர் மாதவராஜ் தமது சமூக வலைதளப் பக்கத்தில் எழுதி இருப்பதாவது: அயோத்தி படத்தின் விமர்சனத்தை இன்று இந்து தமிழ் பத்திரிகையில் படித்தேன். அப்போதுதான் அந்தக் கதையை அறிய முடிந்தது.

தீராத பக்கங்கள் வலைப்பக்கத்தில் 2011 செப்டம்பர் 3 ம்தேதி நான் எழுதிய 'அழக்கூட திராணியற்றவர்கள்' என்னும் பதிவின் அப்பட்டமான காப்பியாகத் தெரிகிறது. அதன் லிங்க்கை முதல் கமெண்ட்டில் தருகிறேன். படம் பார்த்தவர்கள் சொல்லுங்கள். எங்கள் சங்கத் தோழர்கள் சாமுவேல் ஜோதிக்குமாரும், சுரேஷ் பாபுவும் பெற்ற நேரடி அனுபவத்தை நான் பதிவு செய்திருந்தேன். ராமேஸ்வரம் வந்த வட இந்தியக் குடும்பம் ஒன்று விபத்தில் சிக்கி தவித்துப் போய் நின்றபோது எங்கள் தோழர்கள் செய்த மனிதாபிமான உதவி அது. 2021ல் வெளி வந்த எனது 'இரண்டாம் இதயம்' புத்தகத்திலும் இந்த பதிவு இடம் பெற்றிருந்தது. இவ்வாறு மாதவராஜ் எழுதியுள்ளார். இருவரது கருத்துகளை முன்வைத்து சமூக வலைதளங்களில் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

முன்னதாக Mugil Siva தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டதாவது: ழுத்தாளர் மற்றும் நண்பர் நரனின் கதை திருடப்பட்டிருக்கிறது. அவரது சரீரம் சிறுகதைத் தொகுப்பின் வாரணாசி என்ற கதை, 'அயோத்தி' என்ற திரைப்படமாக்கப்பட்டிருக்கிறதாக அறிகிறேன். படத்தின் டிரைலர் இப்படி ஒரு வசனத்துடன் ஆரம்பமாகிறது. 'இந்த உலகத்துல இருக்குற ஜீவராசிகள்லயே ரொம்ப மோசமானவன் மனுசந்தான்.'
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications