சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மோடி பங்கேற்ற ஐஐடி பட்டமளிப்பு விழா..வேஷ்டி, சட்டை, அங்கவஸ்திரம் சகிதமாக வரவழைக்கப்பட்ட மாணவர்கள்!

Google Oneindia Tamil News

Recommended Video

    மோடி பங்கேற்ற ஐஐடி பட்டமளிப்பு விழா..வேஷ்டி, சட்டை, அங்கவஸ்திரம் சகிதமாக வரவழைக்கப்பட்ட மாணவர்கள்!-

    சென்னை: பிரதமர் மோடி பங்கேற்ற சென்னை ஐஐடி பட்டமளிப்பு விழாவில் மாணவர்கள் மரபுகளை மீறி வேஷ்டி, சட்டை மற்றும் அங்கவஸ்திரம் சகிதமாக உட்காரவைக்கப்பட்டிருந்தது சர்ச்சையாகி உள்ளது..

    சென்னை ஐஐடியில் 56-வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி இந்த பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றார்.

    A new controversy erupts over IIT Madras Convocation

    இப்பட்டமளிப்பு விழாவில் வழக்கமாக கடைபிடிக்கும் மாணவர்களுக்கான உடை கட்டுப்பாடு மாற்றப்பட்டிருந்தது. மாணவர்கள் வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை அணிந்து உட்காரவைக்கப்பட்டனர். மாணவிகளும் வெள்ளை சல்வார் கமீஸ் மற்றும் சேலைகளில் வர வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது.

    கரைவேட்டி அசிங்கம்.. மாணவர்கள் நினைத்ததால் அரசியலில் கறை.. கமல்ஹாசன்கரைவேட்டி அசிங்கம்.. மாணவர்கள் நினைத்ததால் அரசியலில் கறை.. கமல்ஹாசன்

    அத்துடன் ஐஐடி நிர்வாகமே ரூ350 மதிப்பிலான அங்கவஸ்திரத்தையும் மாணவர்களுக்கு கொடுத்தது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த மாணவர்கள், இந்திய கலாசார உடை அணிவது எங்களுக்கு மகிழ்ச்சி தருகிறது. பி.டெக் பட்டமளிப்பு விழாவின் போது மேற்கத்திய கலாசார உடை அணிந்திருந்தோம் என்றனர். இருப்பினும் பல மாணவர்கள் இந்த திடீர் உடை மாற்றத்துக்கு அதிருப்தியையும் வெளிப்படுத்தினர்.

    இதே பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி விழா அரங்குக்கு வந்த போது மரபுகளை மீறி மோடிக்கு வாழ்த்து தெரிவித்து முழக்கங்களும் எழுப்பப்பட்டன.

    English summary
    A new controversy erupted over the IIT Madras Convocation.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X