படிக்கும் போதே வருமானம் தரும் வகையில் புதிய டிப்ளமோ.. 8 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் அறிமுகம்
சென்னை: தமிழக அரசின் உயர்கல்வித்துறையின் தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தின் கீழ் 54 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. கடந்த சில ஆண்டுகளாகவே, மாணவர்கள் மத்தியில் டிப்ளமோ படிப்பின் மீதான ஆர்வம் குறைந்து வருகிறது. எல்லாரும் பிஇ படிக்க விரும்புவது தான் இதற்கு காரணம் ஆகும். இதையடுத்து படிக்கும் போதே வருமானம் ஈட்டும் வகையிலான புதிய டிப்ளமோ படிப்பு, நடப்பு கல்வியாண்டு முதல் 8 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.
இன்றைக்கு தமிழ்நாட்டில் ஐடிஐ, டிப்ளமோ படிப்பின் மீது இளைஞர்களுக்கு ஆர்வம் குறைந்து விட்டது. முன்பு பிட்டர், வெல்டர், மெக்கானிக், எலக்ட்ரீசியன் உள்ளிட்ட பல்வேறு ஐடிஐ படிப்புகளுக்கு பெரிய கிராக்கி இருந்தது.

அதேபோல் டிப்ளமோ மெக்கானிக்கல் இன்ஜினியரிங், டிப்ளமோ கம்ப்யூட்டர் சயின்ஸ், டிப்ளமோ சிவில், டிப்ளமோ எலக்ட்ரானிக்ஸ், டிப்ளமோ எலக்ட்ரிக்கல், டிப்ளமோ எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ், டிப்ளமோ நர்சிங், டிப்ளமோ கேட்டரிங் என பல்வேறு டிப்ளமோ படிப்புகளை படிக்கவே 10ம் வகுப்பு முடித்த மாணவர்கள் ஆர்வம் காட்டுவார்கள். ஆனால் இன்றைக்கு டிப்ளமோ படிப்பதற்கு பதில் பிளஸ் 2 முடித்துவிட்டு டிகிரி படிப்பதையே அதிகம் விரும்புகிறார்கள். வேலைவாய்ப்பு பெறுவதில் உள்ள நடைமுறை சிக்கல்கள் காரணமாக ஆர்வம் குறைந்து வருகிறது.
தமிழக அரசின் உயர்கல்வித்துறையின் தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தின் கீழ் 54 அரசு பாலிக்டெக்னிக் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. மாணவர்கள் மத்தியில் டிப்ளமோ படிப்பின் மீதான ஆர்வம் குறைந்து வரும் நிலையில், மாணவர்களிடம் ஆர்வத்தை அதிகரிக்க செய்ய தொழில்நுட்ப கல்வி இயக்ககம் பல்வேறு முன்னெடுப்புகளை செய்து வருகிறது. புதிய பாடப்பிரிவுகள் தொடக்கம் உள்பட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில், தொழில் துறையின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காகவும், மக்கள் தங்களின் தகுதியை வேலை செய்துக் கொண்டே ஒரே நேரத்தில் மேம்படுத்துவதற்காகவும், கடந்த 2023-24-ம் ஆண்டில் 5 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் டிஜிட்டல் உற்பத்தி சார்ந்த டிப்ளமோ படிப்பு அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.
மேலும், மாணவர்கள் படிக்கும் போது வருமானம் ஈட்டும் வகையில், 2025-26-ம் கல்வியாண்டு முதல் 8 கல்லூரிகளில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி டிப்ளமோ படிப்பை அறிமுகம் செய்ய தொழில்நுட்ப கல்வி இயக்ககம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
முதற்கட்டமாக, தூத்துக்குடி, நாகர்கோவில், ஆண்டிப்பட்டி, செக்கானூரணி, உசிலம்பட்டி, நெல்லை, மதுரை, எட்டயபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி டிப்ளமோ படிப்பு அறிமுகம் செய்யப்பட இருக்கிறதாம். ஒவ்வொரு கல்லூரிகளிலும் 2025-26-ம் கல்வியாண்டில் தலா 30 மாணவர்கள் இந்த புதிய படிப்பில் சேர்க்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கில், இந்த புதிய முயற்சிக்கு மாணவர்களிடையே வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications