சென்னையில் புதிய வகையான வாடகை மோசடி .. வீட்டு உரிமையாளர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரம் இது
சென்னை: வாடகைக்கு வீடு கொடுக்க விரும்பும் வீட்டு உரிமையாளர்களை இலக்காகக் கொண்டு புதிய மோசடி நடந்து வருகிறது. வீடு வாடகைக்கு வருபவர்கள் நம்பிக்கைக்குரிய குத்தகைதாரர்களாக நடிக்கிறார்கள். அவர்கள் சட்டபூர்வமாக வாடகை ஒப்பந்தத்தை உருவாக்குகிறார்கள். அதோடு, அவர்கள் பாதுகாப்பு தொகையாக 1 அல்லது 2 மாத வாடகையை முன்கூட்டியே செலுத்துகிறார்கள். ஆனால் வீட்டின் முகவரியை போலி ஜிஎஸ்டி முகவரிக்கு பயன்படுத்துகிறார்கள் என்று தமிழ்நாடு ஜிஎஸ்டி நிபுணர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.
தமிழ்நாடு ஜிஎஸ்டி நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் முகமது அஸ்கார் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறுகையில், "நாம் அனைவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டிய ஒரு முக்கியமான விஷயம் சமீபத்தில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இது ஒரு புதிய வகையான 'வாடகை மோசடி'. இதுவரை வாடகை மோசடிகள் என்றால், ஒருவரால் வாடகை தொகை செலுத்தப்படாமலும், பாதுகாப்பு தொகையை திருப்பிக் கொடுக்காமலும், வீட்டை காலி செய்யாமலும் ஏற்பட்ட பிரச்சனைகளாக இருந்தது. ஆனால் இப்போது, அது ஒரு புதிய அளவுக்கு சென்றுள்ளது. இப்போது வாடகை மோசடியில், ஜிஎஸ்டி பதிவு மற்றும் வரி மோசடி என அரசு சட்டங்களைச் சார்ந்த முறைகளும் பயன்படுத்தப்படுகின்றன.

வாடகை வீடு
இப்போது என்ன நடக்கிறது என்பதைக் கவனியுங்கள். வாடகைக்கு வீடு கொடுக்க விரும்பும் வீட்டு உரிமையாளர்களை இலக்காகக் கொண்ட இந்த மோசடியில், மோசடிக்காரர்கள் மிகவும் நம்பிக்கைக்குரிய குத்தகைதாரர்களாக நடிக்கிறார்கள். அவர்கள் சட்டபூர்வமாக வாடகை ஒப்பந்தத்தை உருவாக்குகிறார்கள். அதோடு, அவர்கள் பாதுகாப்பு தொகையாக 1 அல்லது 2 மாத வாடகையை முன்கூட்டியே செலுத்துகிறார்கள். இதைத் தான் நாம் பொதுவாக ஒரு நல்ல குத்தகைதாரர் என்று நினைத்துப் போகிறோம்.
வீடு காலியாகும்
இதற்குப் பிறகு சில நாட்களில், அவர்கள் வீட்டை அமைதியாக காலி செய்து விடுகிறார்கள். வீட்டு உரிமையாளருக்கு எந்த சந்தேகமும் ஏற்படாது. ஏனெனில், அவர்கள் வாடகை கட்டி விட்டனர், எந்த பிரச்சனையும் இல்லாமல் வீட்டை காலி செய்துவிட்டார்கள் என்பதாலே உரிமையாளர் தன்னிச்சையாக யாரிடமும் புகாரும் செய்யாமல் இருக்கிறார். ஆனால் உண்மையான பிரச்சனை அதன் பின் தான் தொடங்குகிறது.
போலி ஜிஎஸ்டி
இந்தக் குத்தகைதாரர்கள், வீட்டின் முகவரியை வைத்து போலி ஜிஎஸ்டி பதிவு செய்கிறார்கள். அதாவது, அந்த முகவரியில் ஒரு வணிக நிறுவனம் உள்ளது என காட்டி, அதற்கான ஜிஎஸ்டி எண்ணை பெறுகிறார்கள். பின்னர், அந்த முகவரியில் இருந்து அவர்கள் பெரிய அளவில் வாடகை வருமானம் உள்ளதுபோல, ஆனால் ஜிஎஸ்டி செலுத்தாமல் செயற்படுகிறார்கள். சில நேரங்களில், அவர்கள் அதே முகவரியில் இருந்து போலி பில்லுகள் தயாரித்து, சட்ட விரோத வரிவிலக்கு (ITC) பெற்றுக் கொள்கிறார்கள்.
ஜிஎஸ்டி சோதனை
இந்நிலையில், ஜிஎஸ்டி அதிகாரிகள் அந்த முகவரிக்குச் சென்று சரிபார்த்தால், வீட்டு உரிமையாளருக்கு நோட்டீஸ் வரும். அவர் "எனக்கு தெரியாது", "அது போலி நிறுவனம்" என்று சொன்னாலும், தன்னிடம் இருந்து சரியான ஆவணங்கள் இல்லையெனில் பிரச்சனை பெரிதாகும். அவருக்கு ஜிஎஸ்டி பொறுப்பேற்றம் செய்யப்படும் வாய்ப்பும் உள்ளது. அந்த முகவரியை மோசடிக்காரர் பதிவு செய்தது என்பது நிரூபிக்க, உரிமையாளர் நெருக்கடியில் சிக்கக்கூடும்.
போலி வாடகைதாரர்கள்
இந்தப் புதிய மோசடியில் நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால், இது ஒரு நேரடி வரி மோசடியாக இருப்பதால், வீட்டு உரிமையாளர்கள் அரசாங்க சட்டங்களுடன் சிக்கி கொள்ளும் அபாயம் அதிகம். மேலும், போலி வாடகைதாரரை பிடிப்பதும் மிகவும் கடினம். அவர்கள் போலி ஆவணங்களையும், எளிதில் அணுக முடியாத மொபைல் எண்களையும் பயன்படுத்துவதால், அவர்களைக் கண்டுபிடிக்க முடியாமல் போகலாம்.
வீட்டு ஒப்பந்தம்
இந்த வகையான மோசடிகளைத் தவிர்க்க, வீட்டு உரிமையாளர்கள் எளிய ஆனால் முக்கியமான சில முன்னெச்சரிக்கைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். முதலில், வாடகை ஒப்பந்தம் எழுத்துப்பூர்வமாக இருக்க வேண்டும். இது சட்டப்படி நியாயமான முறையில் பதிவு செய்யப்பட்டதாக இருக்க வேண்டும். ஒப்பந்தத்தில், "இந்த வீடு குடியிருப்பிற்காக மட்டுமே பயன்படுத்தப்படும்" என்பதையும், "இந்த முகவரியில் எந்தவிதமான வணிக நடவடிக்கைகளும் செய்ய அனுமதி இல்லை" என்பதையும் தெளிவாக எழுத வேண்டும்.
ஜிஎஸ்டி நோக்கம் செல்லாது
மேலும், "இந்த முகவரியை ஜிஎஸ்டி பதிவு செய்யும் நோக்கத்திற்காக பயன்படுத்த அனுமதி இல்லை" என்பதையும் ஒப்பந்தத்தில் சேர்க்க வேண்டும். இந்த நிபந்தனைகள் ஒவ்வொன்றும் தனி உரைபிரிவாக எழுதப்பட வேண்டும். முக்கியமாக, இந்த ஒப்பந்தத்தில் வாடகையாளர் தனது கையெழுத்தையும், தேதியையும் பதிவு செய்ய வேண்டும். இது ஒரு சட்ட ஆதாரமாக later-stage-இல் பயன்படும்.
ஆதார் பான் கார்டு
இவை தவிர, வாடகையாளரின் ஆதார் அட்டை, பான் கார்ட், வேலைக்குச் செல்வது பற்றி விவரங்கள் மற்றும் நிலையான முகவரி பற்றிய தகவல்களும் பெறப்பட வேண்டும். அவற்றின் நகல்களையும் ஒப்பந்தத்துடன் சேர்த்து வைத்துக் கொள்ள வேண்டும்.
வீட்டை பாதுகாக்கலாம்
இந்த முறைகள் அனைத்தும் சாதாரணமாக தோன்றினாலும், இவை உங்கள் வீட்டையும், உங்கள் சட்டபூர்வ நிலையும் பாதுகாக்கும் ஒரு கோட்டை சுவராக இருக்கும். சமூகத்தில் வளர்ந்து வரும் இந்த வகையான வாடகை மோசடியை நாம் எல்லோரும் அறிந்து, விழிப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும். இது போன்ற கட்டுரைகள் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், வீட்டை வாடகைக்கு விடும் உரிமையாளர்களும் அவர்களது சொத்துக்களையும் சட்ட ரீதியாக பாதுகாப்பது எளிதாகும்." இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
-
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
சென்னை ஈசிஆர் சாலையில் அதிவேகமாக சென்ற கார்.. டிரைவரின் முட்டாள்தனம்.. மறக்க முடியாத சம்பவம் -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
பிளஸ் 2 முடிச்சிருக்கீங்களா! Apprentice training -ல் சேருங்க! மாதம் ரூ 18 ஆயிரம் ஊக்கத்தொகை பெறுங்க! -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ!












Click it and Unblock the Notifications