துணை முதல்வராக்க ஆதரித்தோம்.. எங்க வாரிசுகளுக்கு மா.செ.பதவி வேணும்... சீனியர்களால் அதிரும் அறிவாலயம்
சென்னை: கட்சியிலேயே இத்தனை ஆண்டுகாலம் நீடித்து சீனியர் அமைச்சர்களாக இருந்த போதும் துணை முதல்வராவதற்கு வழிவிட்டு அமைதிகாத்தோம்; அதற்கு வெகுமதியாக எங்கள் வாரிசுகளுக்கும் மாவட்ட செயலாளர் பதவி கொடுத்துவிடலாம்தானே என சீனியர் அமைச்சர்கள் சிலர் நெருக்கடி கொடுக்க அண்ணா அறிவாலயத் தலைமை ரொம்பவே அதிர்ந்து போய்விட்டதாம்.
அண்ணா அறிவாலய கட்சியில் அதிரடி மாற்றங்கள் அரங்கேற்றப்பட்டு வருகின்றன. திடீரென பத்து பதினைந்து மாவட்டங்களுக்கு புதிய மா.செக்கள், பொறுப்பாளர், திடீரென ஒரே மாவட்டத்துக்கு மட்டுமான அறிவிப்பு என தினமும் கண்கொத்தி பாம்பாக கவனிக்க வைக்கிறது அறிவாலயத் தலைமை.

நினைத்து கூட பார்க்காத வகையில் எல்லாம் மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு புதியவர்கள் களமிறக்கப்படுகின்றனர்; இதில் குறுநில மன்னர்களாக கோலோச்சிக் கொண்டிருந்த சீனியர்கள்தான் மிகவும் குமுறிக் கொண்டிருக்கின்றனர். அதுவும் கிடைத்தவரை லாபம்யா என ஒதுங்கிக் கொண்ட சீனியர்களும் இருக்கின்றனராம்.
அறிவாலயக் கட்சியில் அனைத்து அதிகாரத்தையும் பெயரளவுக்கு வைத்திருக்கும் ரொம்பவே சீனியரான அமைச்சரோ சற்று உரிமையுடன் தலைமையிடம் பேசியிருக்கிறார். அத்தனைக்கும் ஒத்துழைப்பு தந்தோம்.. துணை முதல்வர் பிரச்சனையில்கூட அவ்வளவு அமைதியாக, அழகாகவே வழிவிட்டோம்.. அதனால் எங்க வாரிசுக்கும் கூட ஒரு மா.செ. கொடுத்துவிட்டால் ஓகேவாகிடுவோமே.. என துண்டை விரித்துள்ளார். இதனை எதிர்பார்த்திருந்த அறிவாலயத் தலைமை, இதற்குதான் அப்போது அமைதி காத்தீங்க.. அதற்கு வெகுமானம் கேட்கிறீங்களா என சிவந்த முகத்துடன் கேட்க, உள்ளது போய்விடுமோ என அலறியபடியே வெளியேறினாராம் சீனியர்... அவருக்கே இந்த நிலைமை என்றால் நாம எப்படி கேட்பது? எனவும் சில சீனியர்கள் விழிபிதுங்கி 'தலைமை அருள்' கிடைக்க காத்திருக்கின்றனராம்.
-
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
2016 சட்டமன்ற தேர்தலில்.. அதிமுகவின் இன்பதுரை வெற்றி செல்லாது.. உயர்நீதிமன்றம் அதிரடி! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
நீங்க போயிட்டு வாங்க அண்ணாமலை.. அமித் ஷா ஓகே சொல்லிட்டாராம்.. தொடங்கிய ஆபரேஷன் துரந்தர்! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல்












Click it and Unblock the Notifications