ஜோசியமே பார்த்துட்டாரு.. எஸ்பி வேலுமணி குறித்து எடப்பாடியிடம் சரமாரியாக போட்டு தந்த 'சர்க்கரை'?
சென்னை: அதிமுகவின் ஏக்நாத் ஷிண்டே தாம் இல்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார். இருந்தாலும் இந்த விவகாரத்தைதான் அதிமுகவினர் இப்போதும் பேசி வருகின்றனர்.
அதிமுகவின் ஏக்நாத் ஷிண்டே என தம் மீது திமுகவினர்தான் அவதூறாக பிரசாரம் செய்து வருகின்றனர்; திமுக ஆதரவு பத்திரிகைகள்தான் இப்படி எழுதுகின்றன என அழுத்தம் திருத்தமாக கோவை செய்தியாளர்கள் சந்திப்பில் எஸ்.பி.வேலுமணி விவரித்திருந்தார். இந்த விளக்கத்தைத் தொடர்ந்து கோவையில் நடைபெற்ற எஸ்.பி.வேலுமணி இல்ல திருமண விழாவில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று கலந்து கொண்டார். அதேபோல் அதிமுக முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

சரமாரியாக போட்டு கொடுத்த சர்க்கரை: இதுஒருபுறம் இருக்க எஸ்பி வேலுமணி- எடப்பாடி பழனிசாமி தொடர்பான விவகாரங்களையே திருமண வீடு என்றும் பார்க்காமல் அதிமுகவினர் கிசுகிசுத்திருக்கின்றனர். முக்கியமாக எஸ்பி வேலுமணி குறித்த பல்வேறு தகவல்களை தென்மாவட்டத்தைச் சேர்ந்த சர்க்கரையான நபர்தான் எடப்பாடி பழனிசாமியிடம் அதிகமாக ஓதியிருக்கிறார் என பகிரங்கமாக அதிமுக 'தலைகள்' ஷேர் செய்து கொண்டிருக்கின்றனராம். குறிப்பாக எஸ்பி வேலுமணி ஜோசியம் பார்த்தார்.. அவரோடு பேசினார்.. இவரோடு பேசினார்.. அவரை ரகசியமாக போய் பார்த்தார் என்றெல்லாம் ஏகப்பட்ட 'ஸ்கூப்' செய்திகளாகவே எடப்பாடி தரப்புக்கு பாஸ் செய்து கொண்டே இருந்தாராம் சர்க்கரையான நபர். இதன் உண்மைதன்மை குறித்து நேருக்கு நேராக எடப்பாடி பழனிசாமியும் கேட்டும் தெரிந்து கொண்டாராம்.
அப்படி என்ன கோபம்?: அப்படி என்ன சர்க்கரையான நபருக்கு எஸ்பி வேலுமணி கோபம் என விசாரித்த போது, கட்சியில் ரொம்பவே சீனியர்தான் சர்க்கரையானவர். என்ன கொஞ்சம் வாய் துடுக்கு அதிகம். ஜெயலலிதா காலத்திலேயே ஒடுக்கப்பட்டிருந்தவர்தான். எடப்பாடி பழனிசாமி புண்ணியத்தால் மீண்டும் தலையெடுத்தார். அவருக்கு தலைவலியாக இன்னொரு அதிமுக தலையும் இருக்கிறார். அதேபோல அவருக்கு இன்னொரு பிரமுகரின் வளர்ச்சியும் அச்சுறுத்துகிறதாம். இவர்களை விட தாம் ரேஸில் முந்துவதற்கு சரக்கரையான நபர் கண்டுபிடித்ததுதான் 'போட்டுக் கொடுத்து முன்னேறு' எனும் பாலிசிதான். போட்டு கொடுக்கலாம்.. இவ்வளவு ஓவர் டோஸா இருந்தா.. அதுவும் எடப்பாடியே போதுமண்ணே என முகம் சுளிக்கும் அளவுக்கு போறதா? என பகிரங்கமாகவே பேச தொடங்கிவிட்டனராம். அப்புறம் இந்த தகவல் வேண்டியவர்களுக்கும் போகாமலா இருக்கும்? அவங்களும் நேரம் வரட்டும்.. பார்க்கலாம் என காத்திருக்கிறார்களாம். அவருக்கு வாயில்தான் எல்லாமே என நமட்டு சிரிப்பு சிரிக்கின்றனர் அதிமுக நிர்வாகிகள்.
-
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications