செந்தில் பாலாஜி மீது புதிய புகார்! நேர்முக தேர்வில் பென்சிலில் எழுதப்பட்ட மார்க்? சிக்கலில் அமைச்சர்
சென்னை: போக்குவரத்துத் துறையில் நடத்தப்பட்ட நேர்முகத் தேர்வில் மதிப்பெண்கள் பென்சிலில் குறிக்கப்பட்டிருந்ததாக அமலாக்கத் துறை தகவல் தெரிவித்துள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜி எந்த நேரத்தில் அமைச்சராக பொறுப்பேற்றாரோ அடுத்தடுத்து அவருக்கு சிக்கல்கள் துரத்திக் கொண்டே வந்தன. இந்த நிலையில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் அவர் சிறைக்கே சென்றுவிட்டார்.

கடந்த ஜூன் 14 ஆம் தேதி அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டு அவருக்கு காவேரி மருத்துவமனையில் இதய பைபாஸ் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இதையடுத்து நீதிமன்ற உத்தரவின்படி அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அண்மையில் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரான செந்தில் பாலாஜிக்கு வரும் செப்டம்பர் 12 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அவர் ஜாமீன் கோரி சென்னை முதன்மை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். ஆனால் அந்த மனுவை நீதிபதி அல்லி எடுத்துக் கொள்ளவில்லை. அந்த ஜாமீன் மனுவை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார்.
சுமார் 2 மாதங்களாக சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜி எப்போது ஜாமீனில் வெளியே வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவரிடம் அமலாக்கத் துறை நடத்திய விசாரணையில் தனது தம்பிக்குத்தான் எல்லாமே தெரியும் என கூறிவிட்டார். செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமாருக்கு போக்குவரத்து துறை மோசடி புகாரில் விசாரணை நடத்த 4 முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை.
கரூரில் ரூ. 30 கோடி மதிப்பிலான நிலத்தை வெறும் ரூ 10 லட்சத்துக்கு வாங்கி அதில் வீடு கட்டி வந்தார். அந்த வீட்டை அமலாக்கத் துறை முடக்கியது. செந்தில் பாலாஜியின் பெயரை பயன்படுத்தி அசோக்குமார் நிறைய மோசடிகளை செய்திருக்கலாம் என்றும் அவர் கைது செய்யப்பட்டால்தான் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் தற்போது செந்தில் பாலாஜிக்கு புதிய சிக்கல் எழுந்துள்ளது. அதாவது அமலாக்கத் துறை நடத்திய விசாரணையில் போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாக செந்தில் பாலாஜி பணம் பெற்று மோசடி செய்தது விசாரணை மூலம் தெளிவாக தெரிகிறது. பணி நியமனங்கள் குறித்து செந்தில் பாலாஜியின் உதவியாளர்களுக்கும் போக்குவரத்துத் துறை அதிகாரிகளுக்கும் இடையே நடந்த மின்னஞ்சல் தகவல் பரிமாற்றங்கள் கிடைத்திருக்கின்றன.
நேர்முகத் தேர்வின்போது மதிப்பெண்கள் பென்சிலில் குறிக்கப்பட்டதும் பிறகு பணம் கொடுத்தவர்களின் மதிப்பெண்கள் திருத்தப்பட்டு பணியாணை வழங்கப்பட்டதும் தெரியவந்துள்ளதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது. இந்த புதிய புகாரால் அவருக்கு ஜாமீன் கிடைக்குமா இல்லாவிட்டால் அமலாக்கத் துறை கஸ்டடி கேட்குமா என தெரியவில்லை. ஆனால் நேற்று முன் தினம் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரான போது தனக்கு கால் மரத்து போவதாக செந்தில் பாலாஜி தெரிவித்திருந்தார் என அவருடைய வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications