ரயிலில் கிடைக்காத டிக்கெட்டுக்கு இவ்வளவு பணம் கழிப்பீர்களா.. கொதித்த நெட்டிசனுக்கு ஐஆர்சிடிசி பதில்
சென்னை: ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்வது என்பது எளிதானது அல்ல. கோடிக்கணக்கான மக்கள் சொந்த ஊருக்கு செல்லவும், வேலைக்கு செல்லும் ஊருக்கு செல்லவும் ரயில்களை பொதுவாக நம்பியிருக்கிறார்கள். அதில் ஸ்லீப்பர் பெட்டிகள் மற்றும் உட்காரும் வசதி கொண்ட இரண்டாம் வகுப்பு பெட்டியில் டிக்கெட் கிடைப்பது இல்லை.. இந்நிலையில் வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட்டுக்கு 100 ரூபாய் கழிக்கப்பட்டதால் பயணி ஒருவர் சரமாரியாக கேள்வி எழுப்பினார். அவருக்கு ஐஆர்சிடிசி அளித்த பதிலை பார்ப்போம்.
ரயில்களில் டிக்கெட் முன்பதிவு என்பது பலருக்கும் கனவாகவே இருக்கிறது. ஒரு வாரம், ஒரு மாதத்திற்கு முன்பு பயணத்தை திட்டமிடுவோர் ரயிலில் போவது என்பது அவ்வளவு எளிதல்ல.. இரண்டு மாதம் முன்பு திட்டமிட்டால் தான் ரயிலில் ஊருக்கு போக முடியும். அதுவும் வார இறுதிகளில் போய்விட்டு, வேலை செய்யும் ஊருக்கு திரும்ப வேண்டும் என்றால், முட்டி மோத வேண்டியதிருக்கும்.

வெள்ளிக்கிழமைகளில் சென்னை, டெல்லி, பெங்களூர், ஹைதராபாத், மும்பை போன்ற பெரிய நகரங்களில் இருந்தும்,. ஞாயிறுகளில் நாட்டின் பிறநகரங்களில் இருந்து முக்கிய நகரங்களுக்கும் ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்வது என்பது கடினமாகும். பெரும்பாலும் டிக்கெட் புக்கிங் தொடங்கிய கொஞ்ச நேரத்திலேயே வெயிட்டிங் லிஸ்ட் வந்துவிடும்.
இதேபோல் தட்கல் டிக்கெட் முன்பதிவினை பொறுத்தவரை , பல லட்சம் பேர் போட்டி போடுவார்கள் என்பதால் டிக்கெட் கிடைப்பது வாய்ப்பே இல்லை.. யாராவது சிலருக்கே லாட்டரியில் விழும் லக்கி பரிசு போல் தட்கலில் டிக்கெட் கிடைக்கும். மற்றவர்கள் வெயிட்டிங் லிஸ்ட்டில் தான் இருப்பார்கள். ரயிலில் பயணத்தை ரத்து செய்தால், அடுத்த நிலையில், வெயிட்டிங் லிஸ்டில் உள்ளவர்களுக்கு டிக்கெட் கிடைக்கும்.
வெயிட்டிங் லிஸ்டை பொறுத்தவரை ஒவ்வொரு ஊரையும் பொறுத்த வரை டிக்கெட் கிடைப்பதற்கான வாய்ப்புகள் மாறுபடும். பொதுவாக 25 முதல் 50 வெயிட்டிங் லிஸ்டில் உள்ளவர்களுக்கு டிக்கெட் கிடைக்க வாய்ப்பு உள்ளது. மற்றவர்களுக்கு கட்டணத்தில் குறிப்பிட்ட பணம் எடுத்துக் கொள்ளப்பட்ட மீதி பணம் திரும்ப தரப்படும்.

அந்த வகையில் வெயிட்டிங் லிஸ்டில் உள்ளவர்களுக்கு டிக்கெட் தானாகவே ரத்து செய்யப்படும். ஆனால் ரயில் புறப்படுவதற்கு 30 நிமிடத்திற்கு பிறகு ரத்து செய்தால், கட்டணங்கள் கிடைக்காது. 30 நிமிடத்திற்கு முன்பு ரத்து செய்தால் மட்டுமே 60 ரூபாய் கட்டணம் போக மீதி தொகை தரப்பபடும். அதேபோல் ஆர்ஏசி டிக்கெட்டை பொறுத்தவரை கடைசி நிமிடத்தில் கேன்சல் செய்ய முடியாது. அதுவே கேன்சல் ஆகும். அல்லது டிக்கெட் கிடைக்கும்.
இந்நிலையில் சமீர்கான் என்பவர் ரயில்வே அமைச்சரை டேக் செய்து வெளியிட்ட பதிவில், நான் டெல்லியிலிருந்து பிரயாக்ராஜுக்கு காத்திருப்புப் பட்டியலில் டிக்கெட்டை முன்பதிவு செய்திருந்தேன். ஆனால் சார்ட் தயாரிக்கப்பட்ட பிறகு டிக்கெட் கிடைக்கவில்லை. ஆனால் முழுத் தொகையைப் பெறுவதற்குப் பதிலாக 100 ரூபாய் குறைந்துள்ளது. ஏன் கழிக்கப்பட்டது என்பதை விளக்க முடியுமா? என்று கேள்வி எழுப்பி கொந்தளித்தார். அவருக்கு பதில் அளித்துள்ள ஐஆர்சிடிசி, இந்திய ரயில்வே விதிகளின்படி காத்திருப்போர் பட்டியல்/ஆர்ஏசி டிக்கெட் கட்டணம் என்பது ஒரு பயணிக்கு ஜிஎஸ்டியுடன் 60 ரூபாய் கட்டணம் விதிக்கப்படும். அந்த வகையில் தான் கட்டணம் கழிக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications