கடலில் 134 அடியில் பேனா சின்னம்! கருணாநிதியின் கம்பீர நினைவிடத்துக்கு பெருமை சேர்க்கும் முயற்சி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கருணாநிதியின் கம்பீர நினைவிடத்துக்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில் கடலில் 134 அடி உயரத்தில் பிரம்மாண்ட பேனா சின்னம் அமைக்க அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கருணாநிதி நினைவிடத்தில் இருந்து 360 மீட்டர் தொலைவில், நடுக்கடலில் இந்த பிரம்மாண்ட பேனா சின்னம் அமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உலகத்தரத்தில் உருவாக்கப்படும் இந்த நினைவுச் சின்னமானது, இன்னும் எத்தனை ஆண்டுகள் கழித்தாலும் கருணாநிதியின் புகழை மங்கச் செய்யாதவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.

கருணாநிதி நினைவிடம்

கருணாநிதி நினைவிடம்

கருணாநிதியின் நினைவிடம் அமைந்துள்ள சென்னை மெரினா கடற்கரையில் ரூ.39 கோடி செலவில் அரசு சார்பில் நினைவிடம் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்காக 2.23 ஏக்கர் பரப்பளவில் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. கருணாநிதியையும் எழுத்தையும் பிரிக்கவே முடியாது என்பதற்கேற்ப வாழ்நாளின் இறுதிக்காலம் வரை எழுதிய பெருமைக்கு சொந்தக்காரர் அவர். அரசியல் பணி, ஆட்சிப்பணி, என இரண்டு பணிகளுக்கு மத்தியிலும் எழுத்துப்பணியை விடாதவர் கருணாநிதி.

காலத்தால் அழியாத

காலத்தால் அழியாத

இதனால் தான் அவரது அடையாளமாக சென்னை மெரினாவில் அமைக்கப்பட்டு வரும் நினைவிடத்தில் பிரம்மாண்ட பேனா சிலை நிறுவப்படவுள்ளது. இந்நிலையில் கருணாநிதி நினைவிடத்தில் இருந்து 360 மீட்டர் தொலைவில் நடுக்கடலில் 134 அடி உயரத்தில் பிரம்மாண்ட பேனா சின்னத்தை நிறுவவும் அரசு திட்டம் வகுத்துள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. காலத்தால் அழியாத வரலாற்றுச் சின்னமாக கருணாநிதி நினைவிடம் திகழ வேண்டும் என்பதால் இந்த புதிய திட்டம் தீட்டப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கண்ணாடி பாலம்

கண்ணாடி பாலம்

கருணாநிதி நினைவிடத்தின் பின் பக்கம் வழியாக பெரிய கேட் ஒன்று அமைத்து அதன் வழியாக பார்வையாளர்கள் கடல் மேல் கண்ணாடி பாலத்தில் நடந்து சென்று இந்த பேனா நினைவுச் சின்னத்தை கண்டு களிக்கும் வகையில் வடிவமைக்கப்பட உள்ளதாம். தமிழகத்திலேயே, ஏன் இந்தியாவிலேயே இல்லாத வகையில் புது விதமான முறையில் கருணாநிதியின் நினைவிடம் இருக்க வேண்டும் என்பதற்காக இத்தகைய முயற்சிகள் எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

 பணிகள் விறுவிறு

பணிகள் விறுவிறு

தற்போது கருணாநிதி நினைவிடத்தில் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. வரும் ஆகஸ்ட் 7-ஆம் தேதியன்று கருணாநிதியின் 4-ஆம் ஆண்டு நினைவுதினம் கடைபிடிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+