சென்னையில் வீட்டு மனை வாங்கியவர்.. பத்திரப்பதிவுக்கு முன் கவனிக்க மறந்த சிறு தவறு.. 92 லட்சம் காலி
சென்னை: சென்னையில் வீட்டு மனை வாங்கி போட்டு இருப்பவர்கள், நிலம் வாங்கி போட்டு இருப்பவர்கள், அவர்கள் பெயரில் தான் நிலம் இன்னமும் இருக்கிறதா..இல்லை என்றால் வேறு பெயரில் மாறி இருக்கிறதா என்பதை அவ்வப்போது பார்த்துக் கொள்வது நல்லது. அதேபோல் புதிதாக வீட்டு மனை வாங்குவோர், நிலத்தின் ஆவணங்களை கவனமாக பார்ப்பது நல்லது. ஏனெனில் போலி ஆவணங்கள் தயாரித்து வீட்டு மனைகளை உங்கள் தலையில் கட்ட வாய்ப்பு உள்ளது. சென்னையில் போலி ஆவணங்கள் மூலம் ரூ.92 லட்சம் நிலம் மோசடி செய்த வழக்கில் 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இன்றைக்கு சென்னையில் வீடு,இடம் வாங்குவது என்பது கடலில் முத்து எடுப்பதை விடவும் சவாலானது. பெரும் பணக்காரர்களே வாங்க முடியும். ஏழைகள், நடுத்தர வர்க்கம் நினைத்தே பார்க்க முடியாது. சென்னையின் புறநகரில் நடுத்தர வர்க்கத்தினர் வாங்கி போட்டு வருகிறார்கள். என்றாவது ஒரு நாள் தனது குழந்தையின் உயர் கல்விக்கு, திருமணத்திற்கு, மருத்துவ செலவிற்கு, பின்னாளில் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு என வாங்கி போடுகிறார்கள்.

போலி ஆவணங்கள்
அப்படி வாங்கிபோடும் வீட்டு மனையை எளிதாக சிலர், ஆள்மாறாட்டம் செய்து நில ஆவணங்களை மோசடி செய்து தங்கள் பெயரில் மாற்றினால் எப்படி இருக்கும். இப்படி செய்த கடினம் என்றாலும், சில நேரங்களில் மோசடிகள் நடக்கத்தான் செய்கிறது. அதேபோல் வேறு ஒருவரின் நிலத்தை ஏமாற்றி ஏமாந்தவர்களுக்கு விற்பதும் நடக்கிறது. சென்னையில் 92 லட்சம் மதிப்புள்ள நிலம் மோசடி அப்படித்தான் செய்யப்பட்டிருக்கிறது. எப்படி என்பதை பார்ப்போம்.
பேஸ்புக்கில் விளம்பரம்
சென்னை கொளத்தூர் பெரியார் நகர் 5-வது தெருவை சேர்ந்த 44 வயதாகும் நந்தகுமார் என்பவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர், பேஸ்புக் மூலம் நிலம் விற்பனைக்கு என்ற விளம்பரத்தை பார்த்து அதில் இருந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார்.
92 லட்சம் இழப்பு
அப்போது கொளத்தூர் பூம்புகார் நகரில் 1,200 சதுர அடி இடம் விற்பனைக்கு உள்ளதாக போனில் பேசியவர்கள் தெரிவித்தனர். இதை நம்பிய நந்தகுமார், அந்த இடத்தை வாங்குவதற்காக 3 தவணைகளாக ரூ.92 லட்சத்தை அவர்களிடம் கொடுத்திருக்கிறார். இதையடுத்து அவருக்கு செம்பியம் சார்பதிவாளர் அலுவலகத்தில் அந்த இடத்தை பத்திரப்பதிவு செய்து கொடுத்துள்ளார்கள்.
ஏற்கனவே வேறு ஒருவருக்கு சொந்தம்
இந்நிலையில் நந்தகுமார் அந்த இடத்தை சென்று பார்த்தபோது, அந்த இடம் சென்னையைச் சேர்ந்த செல்வக்குமார் என்பவருக்கு சொந்தமானது என்பதும், தன்னிடம் போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை விற்று மோசடி செய்து விட்டதையும் அறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.
5 பேர் கைது
இதுபற்றி நந்தகுமார் அளித்த புகாரின்பேரில் கொளத்தூர் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து நில மோசடியில் ஈடுபட்டதாக மணலி புதுநகர் பகுதியைச் சேர்ந்த சையது சலாவுதீன் (42), எருக்கஞ்சேரி நேரு நகரை சேர்ந்த அபூபக்கர் (51), திருநின்றவூர் கோமதிபுரத்தைச் சேர்ந்த வெங்கடேசன் (55), அம்பத்தூர் பாலாஜி நகரை சேர்ந்த கலீல் ரகுமான்(50), கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்த அப்துல் ரசாக்(74) ஆகிய 5 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
பத்திரப்பதிவுக்கு முன்பு கவனிக்க வேண்டியவை
சென்னையில் வீட்டு மனை வாங்க விரும்புவோர் நம்பகமான நிறுவனங்களை தேர்வு செய்வது நல்லது. அதேபோல் தனிநபர் நிலம் என்றால், பட்டா, பத்திரங்கள் உள்ளிட்ட ஆவணங்களை கவனமாக பார்க்க வேண்டும். மோசடி ஆவணங்களை காட்டி விற்க வாய்ப்பு உள்ளதால், ஈசி போட்டு பார்க்க வேண்டும். அதேபோல் வில்லங்கம் பற்றி தெரியவில்லை என்றால், வழக்கறிஞர் உதவியுடன் நில ஆவணங்களை ஆய்வு செய்யுங்கள். சரியான சட்ட ஆலோசனை இல்லாமல் நிலம் வாங்கி ஏமாந்து விட வேண்டாம். இல்லாவிட்டால் பத்திரப்பதிவு செய்த பின்னரே உங்களுக்கு மோசடி நிலம் என்பது தெரியவரும். ஏனெனில் மோசடி நிலத்திற்கு பட்டா வாங்கவே முடியாது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications