சென்னை கோயம்பேடு காவலர் உருக்கமான கடிதம்.. வீட்டிற்குள் மகன் கண்ட காட்சி.. நிலைகுலைந்த குடும்பம்
சென்னை: சென்னை கோயம்பேடு காவல் நிலையத்தில் 2-ம் நிலை நுண்ணறிவு காவலராக பணியாற்றி வந்த இசக்கிமுத்துகுமார், குடும்ப பிரச்சனை காரணமாக வீட்டில் தனியாக இருந்தபோது உயிரை மாய்த்துக் கொண்டார். பள்ளி முடிந்து வீடு திரும்பிய மூத்த மகன் தந்தை சடலமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து அக்கம்பக்கத்தினரை அழைத்துள்ளார். அதன்பின்னரே காவலர் உயிரிழந்த விவகாரம் தெரிய வந்துள்ளது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலைச் சேர்ந்தவர் இசக்கிமுத்துகுமார் (38 வயது). இவர் கடந்த 2008-ம் ஆண்டு தமிழ்நாடு காவல் துறையில் பணியில் சேர்ந்தார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி சங்கரி, மகன்கள் இளமாறன் (14) மற்றும் சஞ்சய் (11) ஆகியோருடன்
சென்னை விருகம்பாக்கம், பள்ளிக்கூட தெருவில் வசித்து வந்தார். காவலர் இசக்கிமுத்துகுமார், கோயம்பேடு போலீஸ் நிலையத்தில் 2-ம் நிலை நுண்ணறிவு போலீஸ்காரராக பணிபுரிந்து வந்தார். தினமும் விருகம்பாக்கத்தில் இருந்து கோயம்பேட்டிற்கு வேலைக்கு சென்று வந்துள்ளார்.

நேற்று மதியம் வேலை முடிந்து வீட்டுக்கு வந்த காவலர் இசக்கிமுத்துகுமார், சாப்பிட்டுவிட்டு தனது அறைக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டார்இந்தநிலையில் மாலையில் பள்ளி முடிந்து அவரது மூத்த மகன் இளமாறன் வீட்டுக்கு வந்தார். அப்போது அறைக்குள் தனது தந்தை இசக்கிமுத்துகுமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தந்தை சடலமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து அக்கம்பக்கத்தினரை அழைத்துள்ளார். அவர்கள் உடனடியாக போலீசுக்கு தகவல் தந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்து வந்த விருகம்பாக்கம் போலீசார், இசக்கி முத்துகுமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கே.கே.நகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து இசக்கி முத்துக்குமாரின் மனைவி உள்ளிட்டோரிடம் போலீசார் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணைக்க நடுவில் அவரது வீட்டில் காவலர் இசச்கிகுமார எழுதிய கடிதம் ஒன்று கிடைத்துள்ளது. அதில், தனது தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை எனவும் பிள்ளைகளை நன்றாக படிக்க வைக்குமாறு தற்கொலைக்கு முன்பு எழுதி வைத்துள்ளதாக கூறப்படுகிறது
குடும்ப தகராறு காரணமாக காவலர் தற்கொலை செய்திருப்பது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். எனினும் அவரது தற்கொலைக்கு வேறு ஏதும் காரணமா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகிறார்கள். இதனிடையே இசக்கி முத்துக்குமார் வெகு காலமாக பணியிட மாற்றம் கேட்டு வந்ததாகவும், அது கிடைக்காததால் மன உளைச்சலில் இருந்து வந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -2464000 (24 மணி நேரம்)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)
-
சென்னை அம்பத்தூரில் பரபரப்பு.. 2 சிறுமிகள் கடத்தப்பட்ட வழக்கில் வாலிபர்கள் இருவர் அதிரடி கைது -
சென்னையில் ரூ.7000-லிருந்து ரூ.0 ஆக மாறிய புதிய மெத்தை.. குப்பைக்கு வந்த ரியல் கதை -
காசிமேட்டில் நள்ளிரவு 12 மணிக்கு ஒலித்த சைரன்.. சென்னையில் வஞ்சிரம் மீன் பிரியர்களுக்கு பேரதிர்ச்சி? -
கும்மிடிப்பூண்டி சிறுமி உடலில் அதிக ரத்தப்போக்கு! மூச்சு பேச்சு இல்லை! ஸ்டான்லி மருத்துவர் விளக்கம் -
'அமரன்' மேஜர் முகுந்த் வரதராஜனுக்கு பெருமை சேர்த்த சென்னை! பிரதான சாலைக்கு பெயர் சூட்டி அதிரடி! -
3 லட்சம் சதுரடி! வருது 13 மினி மால்.. சென்னை மெட்ரோ 2ம் கட்ட ஸ்டேஷன்களில் சுவாரசியம்! தரமான பிளானிங் -
100 நாள் ஆச்சு.. இன்று மாலைக்குள் ஆகாஷ் உடலை வாங்குங்க.. பெற்றோருக்கு கெடு விதித்த ஐகோர்ட்! -
கும்மிடிப்பூண்டியில் 3 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை- காவல் துறை விளக்கம் -
இப்படியா நடக்கனும்.. பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 3 வயது சிறுமி! சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்! -
தமிழகம் முழுவதும் போலீசார் அதிரடி வேட்டை.. 202 போதைப்பொருள் குற்றவாளிகள் உட்பட 1,328 பேர் கைது! -
அண்ணி மீதான மோகம்.. இளைஞரை எரித்து கொன்ற வழக்கில் பெரிய ட்விஸ்ட்! ஷாக் காரணம் -
நடத்தையில் ஏற்பட்ட சந்தேகம்.. 22 வயது காதலிக்கு, காதலன் கொடுத்த கொடூர தண்டனை.. உயிரே போச்சே












Click it and Unblock the Notifications