ப சிதம்பரம், முதல்வர் ஸ்டாலின் சந்திப்பின் பின்னணி.. திமுக ஆதரவாளர் வெளியிட்ட பதிவு
சென்னை: எந்த டேட்டாவுமில்லாமல் பேச்சுவார்த்தைக்கு வந்து, விஜயை காட்டி பேரம் பேச நினைக்கிறது! இது மிகமிக மோசமான உத்தி! விஜயோடு சேர்வதென்றால் திமுகவோடு பேச்சுவார்த்தை நடத்தவே வந்திருக்கக்கூடாது... எங்ககிட்ட தவெக பேக்கப் இருக்கிறது எனச்சொல்லி பேச்சுவார்த்தைக்கு வருவது தவறான உத்தி. இப்படியான உத்தி காங்கிரஸை வளர்க்க உதவாது என திமுக ஆதரவாளர் பதிவிட்டு உள்ளார்.
வத்திராயிருப்பு தெ.சு.கவுதமன் என்ற திமுக ஆதரவாளர் வெளியிட்ட பதிவினை பல்வேறு திமுக ஆதரவாளர்கள் சமுக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அந்த பதிவில் கூறுகையில், "முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் முதல்வரை சந்திக்கிறார்... இங்கே தமிழ்நாட்டில் ப.சிதம்பரம், திருநாவுக்கரசர், கோபண்ணா உட்பட எண்ணற்ற அனுபவம் வாய்ந்த காங்கிரஸ்காரர்கள் இருக்கும் நிலையில், கிரீஸ் ஷோடங்கர் என்பவரையெல்லாம் கூட்டணிப் பேச்சுவார்த்தைக்கு உள்ளே நுழைப்பது இங்குள்ள தலைவர்களை அவமானப்படுத்துவது போலாகும். தற்போதாவது தங்களை மாற்றிக்கொண்டது நல்லது...
ப.சிதம்பரத்தை இதில் ஈடுபடுத்துவது சோனியா காந்தியின் அறிவுரையாகத்தான் இருக்கும்...

அந்த கிரீஸ் ஷோடங்கரிடம் திமுக தங்களிடமுள்ள டேட்டா விவரங்களை வைத்து பேச்சுவார்த்தையில் இறங்க, அவர் பதறியிருப்பதாகத் தெரிகிறது. கடந்த பத்து, பதினைந்து ஆண்டுகளாக டேட்டாவை வைத்துதான் இந்திய அளவில் அரசியலே நடக்கிறது... ஜீயின் தொடர் வெற்றிக்கு காரணமே மிகவும் துல்லியமாக டேட்டாக்களை சேகரிப்பது தான்... இதுபோல் டேட்டாக்களை வைத்துத்தானே எஸ்.ஐ.ஆரில் கோல்மால் வேலைகளை செய்கிறார்கள்! அவ்வளவு ஏன், எத்தனையோ முறை தமிழ்நாட்டுக்கு வந்தபோதும், இப்போது திடீரென ஜீ திருப்பரங்குன்றத்துக்கு செல்வதேன்? அங்குள்ள முருகன் முன்பாக நெடுஞ்சாண்கிடையாக விழுவதேன்? எல்லாம் அவர்களது டேட்டா சொல்லும் தகவல் தான்! கடந்த ஓராண்டாக திருப்பரங்குன்றத்தை மையப்படுத்தி அதைச்சுற்றியுள்ள தொகுதிகளை குறிவைத்து, விவகாரத்தை தீவிரமாகக் கிளப்பிவருகிறார்கள்... அதற்கேற்ப நீதிமன்றம் வரை ட்யூன் செய்துவைத்திருக்கிறார்கள்... வரும் தேர்தலில் இதைவைத்து சில தொகுதிகளைக் கைப்பற்றும் திட்டமிருக்கிறது... எல்லாமே டேட்டாக்களை வைத்து முடிவெடுப்பது தான்!
இந்த டேட்டா விஷயத்தில் கடந்த ஏழெட்டு ஆண்டுகளாக திமுகவும் தீவிரம் காட்டுவதால் தான் தொடர்ச்சியான வெற்றி சாத்தியமாகிறது... காங்கிரஸ் கட்சி தற்போதுள்ள பலத்துக்கு 25 தொகுதிகள் என்பதே அதிகம் தான்... இருந்தாலும், ஒரு தேசியக்கட்சியின் நட்பு வேண்டுமென்பதற்காகவே காங்கிரஸ் விஷயத்தில் சற்று தாராளமாக நடந்துகொள்கிறது திமுக... அந்த அடிப்படையில் தான் பாராளுமன்றத் தேர்தலுக்கும் அவர்களுக்கு 9 சீட்டுகளை திமுக ஒதுக்கியது. இதிலும் 8 தொகுதிகளுக்கு ஆட்களை தேர்ந்தெடுத்த காங்கிரஸால் மயிலாடுதுறைக்கு வேட்பாளரை தேர்வுசெய்ய முடியவில்லை...
மார்ச் 27, புதன்கிழமை வேட்புமனுத்தாக்கலுக்கு இறுதி நாள்... அப்படியான நெருக்கடியில், செவ்வாய்க்கிழமை இரவில் சுதா என்பவரை அறிவித்தது காங்கிரஸ்! இதுதான் காங்கிரஸின் எதார்த்த சூழல்! காங்கிரஸுக்கு அவர்கள் கேட்பதையெல்லாம் ஒதுக்கினால் அது அதிமுக கூட்டணியின் வெற்றிக்கு தான் வழிவகுக்கும்.
ஆனால் காங்கிரஸ் என்ன செய்கிறது? எந்த டேட்டாவுமில்லாமல் பேச்சுவார்த்தைக்கு வந்து, விஜயை காட்டி பேரம் பேச நினைக்கிறது! இது மிகமிக மோசமான உத்தி! விஜயோடு சேர்வதென்றால் திமுகவோடு பேச்சுவார்த்தை நடத்தவே வந்திருக்கக்கூடாது... எங்ககிட்ட தவெக பேக்கப் இருக்கிறது எனச்சொல்லி பேச்சுவார்த்தைக்கு வருவது தவறான உத்தி. இப்படியான உத்தி காங்கிரஸை வளர்க்க உதவாது... இதை காலம் தான் காங்கிரஸுக்கு உணர்த்தும்!
ஆக, திமுக தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதே நல்லது... காங்கிரஸ் ஒத்துவராத நிலையில், அதை ஒதுக்கிவிட்டு அடுத்தகட்ட வேலைகளில் இறங்கவேண்டியது தான்! வெற்றி ஒன்றும் கடினமில்லை!" இவ்வாறு கூறியுள்ளார்.
-
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
"டெல்லி என்ன.. அமெரிக்காவே மிரட்டினாலும்..” டிடிவி தினகரனுக்கு ஓபிஎஸ் கொடுத்த பதில்! -
Election Exclusive: வேடசந்தூரில் வென்றால் கோட்டையில் கொடி! மீண்டும் களத்தில் திமுக சிட்டிங் சீனியர்! ஜூனியர்கள் பாவம்! -
கண் சிவந்த ஸ்டாலின்.. அறிவாலயத்தில் இருந்து பறந்த உத்தரவு.. அதிர்ச்சியில் திமுக நிர்வாகிகள் -
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
சிபிஎம் கட்சிக்கு 5 தொகுதிகள்தான்! கட் அன்ட் ரைட்டாக சொன்ன ஸ்டாலின்! பெ.சண்முகம் வைத்த டிமாண்ட் -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்?












Click it and Unblock the Notifications