"விருந்து" ரெடி.. உங்க கட்சிக்கே வந்துடுறேன்! பாஜகவை உதறிய "புள்ளி".. திமுகவில் "திடீர்" ஐக்கியம்?
சென்னை: திமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்து இருந்த அந்த நிர்வாகி தற்போது மீண்டும் திமுகவில் இணைவதற்காக தீவிரமாக முயன்று வருகிறாராம். இதற்காக திமுக டாப் நிர்வாகிகள் சிலரை சந்தித்து தீவிரமாக ஆலோசனை செய்து வருகிறாராம்.
உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழ்நாடு வந்த நிலையில், அவர் பாஜக தலைவர்களுக்கு முக்கியமான இரண்டு அசைன்மெண்டுகளை கொடுத்து இருக்கிறாராம். ஒன்று பாஜகவின் பூத் கமிட்டியை வலுப்படுத்துவது.
பாஜக என்றாலே பூத் ரீதியாக அவர்களுக்கு இருக்கும் வலிமைதான். பூத் கமிட்டியை அமைத்து அதன் மூலம் ஆட்களை பிடிப்பதுதான் பாஜகவின் தேர்தல் வியூகம்.

அமித் ஷா
பாஜக வெற்றிக்கான ரகசியம் எது என்றால் அதில் முதலில் பூத்தான் இருக்கும். அதேபோல் வாக்காளர் பட்டியலில் ஒவ்வொரு பக்கத்திலும் குறைந்தது 4 - 5 பேராவது தனது கட்சி ஆட்கள் இருக்கும் வகையில் பார்த்துக்கொள்வதுதான் பாஜகவின் பிளான். பல மாநிலங்களில் பாஜகவிற்கு இது சாதகமான முடிவை கொடுத்து உள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் பாஜக பூத் வாரியாக இன்னும் வலிமை அடையவில்லை. இதையடுத்தே தமிழ்நாட்டில் பூத் கமிட்டியை வலுப்படுத்த அமித் ஷா உத்தரவிட்டுள்ளார்.

முக்கிய நிர்வாகி
அது மட்டுமின்றி தமிழ்நாட்டில் பாஜகவில் புதிய நிர்வாகிகளை சேர்க்க வேண்டும் என்றும் உத்தரவிட்டு இருக்கிறாராம். அதிமுகவில் உள்ள சில தலைகளையும் , திமுகவில் உள்ள சில தலைகளையும் பாஜக பக்கம் கொண்டு வர வேண்டும். அரசியல் சாராமல் தமிழ்நாட்டில் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் சில பிரபலங்களையும், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரிகளையும் பாஜக பக்கம் கொண்டு வர வேண்டும் என்று அமித் ஷா உத்தரவிட்டு இருக்கிறாராம்.

என்ன நடந்தது?
அமித் ஷா ஒரு பக்கம் இப்படி உத்தரவிட்டு உள்ள நிலையில்தான் திமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்து இருந்த அந்த நிர்வாகி தற்போது மீண்டும் திமுகவில் இணைவதற்காக தீவிரமாக முயன்று வருகிறாராம். முன்பு திமுகவில் அந்த நிர்வாகி எம்எல்ஏவாக இருந்தார். ஆனால் திமுகவில் தன்னை மதிக்கவில்லை என்று கூறிவிட்டு பாஜகவிற்கு சென்றார். சட்டசபை தேர்தலில் போட்டியிட்டவர் தோல்வியும் அடைந்தார்.

விருந்து
சமீபத்தில் திமுக அமைச்சர் ஒருவரை பாஜக நிர்வாகிகள் அவமதித்த விவகாரத்தில் பாஜகவில் இருந்து விலகினார். அப்போதே இவர் திமுகவில் இணைவார் என்று செய்திகள் வந்தன. திமுகவில் இணைய போவதாக அந்த நிர்வாகியும் சூசகமாக சொன்னார். ஆனால் அந்த அமைச்சரும், சில நிர்வாகிகளும் இவர் இப்போது திமுகவில் இணைய வேண்டாம் என்று அட்வைஸ் சொன்னதாக தெரிகிறது. இதற்காக திமுக டாப் நிர்வாகிகள் சிலரை சந்தித்து தீவிரமாக ஆலோசனை செய்து வருகிறாராம்.

தலைவலி
பின்னர் பார்த்துக்கொள்ளலாம் என்று மேலிட நிர்வாகிகள் தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில்தான் இன்னும் சில நாட்களில் அந்த நிர்வாகி மீண்டும் திமுகவில் இணைய போவதாக உறுதிப்படுத்தப்படாத செய்திகள் வந்துள்ளன. தனது வீட்டில் நடக்கும் சுப நிகழ்ச்சி ஒன்றிற்காக பத்திரிக்கை வைத்து வரும், திமுக நிர்வாகிகளை அழைத்து இருக்கிறார். வீட்டில் விருந்து கொடுக்க போகும் அவர், அதே நாள் திமுகவில் இணையவும் இருக்கிறார் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். ஒரு பக்கம் திமுக ஆட்களை தூக்க அமித் ஷா உத்தரவிட்டு நிலையில் பாஜகவில் இருந்தே ஆட்கள் கழன்று கொண்டு செல்வது அக்கட்சி நிர்வாகிகளுக்கு தலைவலியை கொடுத்துள்ளது.
-
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications