இந்திய ஒலிம்பிக் வீரர்களுக்கு ஏஆர் ரஹ்மான் இசையில்.. Lai Lai Lai Lai Lai Lai.. We’re Born To Win!

Subscribe to Oneindia Tamil

சென்னை: டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கவுள்ள இந்திய வீரர்களை ஊக்கப்படுத்துவதற்காக இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த பாடலை மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் வெளியிட்டுள்ளார்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோ நகரில் ஜூலை 23 ஆம் தேதி தொடங்க இருக்கிறது ஒலிம்பிக் போட்டிகள். இதில் இந்தியா சார்பில் 126 வீரர்கள் பங்கேற்கிறார்கள். இவர்களில் தமிழகத்து வீரர்களும் உள்ளனர்.

இந்த நிலையில் இந்திய வீரர்களை ஊக்கப்படுத்த ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு பாடலை இசையமைத்துள்ளார். இந்த பாடலை மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் காணொலி மூலம் வெளியிட்டார்.

கொரோனா நெருக்கடி

கொரோனா நெருக்கடி

கொரோனா நெருக்கடி காலத்தில் ஒன்றிணைந்து பணிபுரிவதற்கு ஊக்கப்படுத்தும் வகையில் ஒரு பாடலை ரஹ்மான் இசையமைத்துள்ளார். "இந்துஸ்தாணி வே" என பெயரிப்பட்டுள்ள அந்த பாடலை எழுதி அதை பாடியுள்ளார் பாடகி அனன்யா பிர்லா.

ஒலிம்பிக் போட்டிகள்

ஒலிம்பிக் போட்டிகள்


பல்வேறு ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற இந்திய விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் குறித்து அந்த பாடல் வீடியோவில் இடம்பெற்றுள்ளது. 1996 ஆம் ஆண்டு அட்லண்டா, 2004 ஏதென்ஸ், 2008 பெய்ஜிங், 2012 ஆம் ஆண்டு லண்டன், 2016 இல் ரியோ ஆகிய இடங்களில் நடந்த ஒலிம்பிக் போட்டிகள் குறித்த வீடியோக்களும் உள்ளன.

ஒலிம்பிக்கில் வென்றவர்கள்

ஒலிம்பிக்கில் வென்றவர்கள்

அதில் ஒலிம்பிக் போட்டிகளில் வென்ற லியாண்டர் பயஸ், விஜேந்திர சிங், அபினவ் பிந்த்ரா, மேரி கோம், ராஜ்யவர்தன் சிங் ரத்தோர், பிவி சிந்து மற்றும் சாக்ஷி மாலிக் உள்ளிட்டோரின் ஒலிம்பிக் வெற்றி காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்திய கொடியுடன் இந்த பாடல் தொடங்குகிறது.

இந்திய கொடியின் நிறம்

இந்திய கொடியின் நிறத்தினாலான விளக்குகளின் முன்பு அனன்யா பாடுகிறார். ஒலிம்பிக் போட்டிகள் 4 ஆண்டுகளுக்கு முன்பு நடத்தப்பட வேண்டியது. அந்த வகையில் இந்த போட்டிகள் 2020 ஆம் ஆண்டு நடத்தியிருக்க வேண்டியது. ஆனால் கொரோனா பெருந்தொற்று காரணமாக இந்த போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டு இந்த ஆண்டு நடக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+