சென்னை அண்ணா நகரில் ரேஸ்.. மின்னல் வேகத்தில் வந்த கார்!.. சூப்பர் மார்க்கெட்டில் புகுந்து விபத்து
சென்னை: சென்னை அண்ணா நகரில் மின்னல் வேகத்தில் கார் ஒன்று சூப்பர் மார்க்கெட் உள்ளே புகுந்து விபத்து ஏற்பட்டது. இதில் ஒருவர் காயமடைந்தார்.

சென்னை அண்ணா நகர் இரண்டாவது அவென்யூவில் நேற்று நள்ளிரவு மின்னல் வேகத்தில் 2 சொகுசு கார்கள் ரேஸில் சென்று கொண்டிருந்தது. அப்போது அதில் ஒரு கார் எதிர்பாராதவிதமாக மின்சார டிரான்ஸ்பார்மரில் மோதி அங்கிருந்த சூப்பர் மார்க்கெட்டுக்குள் புகுந்தது.

இதில் வெளியே இருந்த அந்த சூப்பர் மார்க்கெட்டின் காவலாளி ஒசிம் காயமடைந்தார். காரில் 2-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றொரு காரில் சட்டென்று தப்பிச் சென்றனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

Recommended Video
சென்னை அண்ணா நகர் மேற்கு பகுதியை சேர்ந்த சாமிநாதன் என்பவருக்கு சொந்தமான கார் என்றும் அந்த காரை அவரது மகன் ராஜேஷ் தன்னுடைய நண்பர்களோடு சேர்ந்து காரை ரேஸில் ஓட்டியதும் தெரியவந்தது. தப்பியோடியவர்களை போலீஸார் தேடி வருகிறார்கள்.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications