இதுக்குத்தான் காத்திருந்தேன்.. “வா மவனே நீ கேஸ் போடு".. பாஜகவிற்கு சவால் விட்ட ஆ.ராசா.. பரபர பேச்சு
சென்னை: முடிந்தால் என் மீது கேஸ் போடுங்கள்.. சனாதனம் பற்றி பேசுவதற்கு எனக்கும் வசதியாக இருக்கும் என்று திமுக எம்பி ஆ. ராசா சவால் விடுத்துள்ளார்.
சனாதனம் பற்றி திமுக எம்பி ஆ. ராசா பேசியதில் இருந்தே தமிழ்நாடு அரசியலில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது. இந்து மதத்தில் ஏற்றத்தாழ்வுகள், வேறுபாடுகள், மனுதர்மத்தில் இருக்கும் ஜாதி ஏற்றத்தாழ்வுகள், ஒடுக்குமுறைகள் இருப்பதாக திமுக எம்பி ஆ. ராசா சமீபத்தில் பேசி இருந்தார்.
ஆ. ராசா தனது பேச்சில், இந்துவாக இருக்கும் வரை நீ சூத்திரன்தான். உச்ச நீதிமன்றம் சொல்கிறது இந்து கிறிஸ்துவனாக இல்லை என்றால், நீ இஸ்லாமியனாக இல்லை என்றால், நீ பெர்சியனாக இல்லை என்றால் நீ இதுவாகத்தான் இருக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் சொல்கிறது.

என்ன சொன்னார்?
இப்படிப்பட்ட கொடுமை வேறு எந்த நாட்டிலாவது இருக்கிறதா? இந்துவாக இருக்கும் வரை நாம் சூத்திரன்.. இந்துவாக இருக்கும் வரை நாம் பஞ்சமன். இந்துவாக இருக்கும் வரை தீண்டத்தகாதவர்கள்.. இந்துவாக இருக்கும் வரை நாம் விபச்சாரியின் மகன். இந்த அவலத்தை பற்றி நாம் கேள்வி எழுப்ப வேண்டும் என்று ஆ. ராசா காட்டமாக பேசி இருந்தார். ஆ. ராசாவின் இந்த பேச்சை தமிழ்நாடு பாஜகவினர், இந்து முன்னணியினர் கடுமையாக விமர்சனம் செய்து இருந்தனர்.

கூட்டம்
இந்த நிலையில் திமுக சார்பாக நேற்று சமூக நீதி நாள் கூட்டம் சென்னை திருவிக நகரில் நடைபெற்றது. இதில் திமுக அமைச்சர்கள், எம்பிக்கள் பலர் கலந்துகொண்டனர். ஆ. ராசா கலந்து கொண்டு இதில் பெரியார் பற்றி பேசினார். முன்னதாக அவர் மேடையில் ஏறும் போது பெரிய மேஜை போடப்பட்டு அதில் ஏறி நின்று பேசும்படி நிர்வாகிகள் கூறினார்கள். அதற்கு ஆ. ராசா.. என்னங்க நீங்களே எனக்கு தண்டனை கொடுத்துடுவீங்க போல.. பென்ச் மேல எல்லாம் ஏற சொல்றீங்க. ஸ்கூல் மாதிரி என்று கிண்டலாககேட்டார் .

ராசா என்ன சொன்னார்?
இதை தொடர்ந்து பேசிய ஆ. ராசா, நான் பேசியதில் என்ன தவறு. எது தவறு என்று சொல்லுங்கள். நான் இல்லாத விஷயத்தையா பேசிவிட்டேன். யார் கிட்ட கதை விடுற. இதுல வேற பூச்சாண்டி. ராஜா மீது வழக்கு போடுவேன் என்று மிரட்டுகிறார்கள். நான் அவதூறாக பேசிவிட்டதாக மிரட்டுகிறார்கள். கேஸ் போடு. நான் அந்த நாளுக்காகத்தான் காத்துகொண்டு இருக்கிறேன். என் மீது கேஸ் போடு.

வா மவனே வா
வா மவனே போடு.. நீ கேஸ் போடு.. உன்னுடைய மனு நீதியை நான் படித்துக்காட்டுகிறேன். அதில் இருக்கும் குப்பைகளை நான் படித்து காட்டுகிறேன். உன் பகவத் கீதையை நான் படித்துக்காட்டுகிறேன். அதில் இருக்கும் அவலங்களை தோல் உரிப்பேன். அதை மட்டும் செய்யவில்லை என்றால் நான் கலைஞர் பிள்ளை இல்லை பார்த்துக்கோ, என்று ஆ. ராசா நேரடியாக சவால் விட்டுள்ளார்.
-
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
அண்ணாமலை கைகளை பிடித்த அஜித், ரஜினி.. மதுரையில் பரபரக்கும் போஸ்டர்களால் அதிரும் அரசியல் களம்! -
அமித் ஷாவிடம் நேரடியாக அண்ணாமலை சொன்ன மேட்டர்.. அடுத்த நொடி அலறிய சென்னை பாஜக அலுவலகம்! என்ன நடந்தது -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா?












Click it and Unblock the Notifications