Who is the Periyar என்று கேட்பார்கள்... நாங்க சொல்ற பதில் என்ன தெரியுமா? - ராமரை இழுத்துவிட்ட ஆ.ராசா!
சென்னை : நாடாளுமன்றத்தில் பாஜக எம்.பிகள் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் என்று கூச்சலிடும்போது நாங்கள் 'பெரியார் வாழ்க பெரியார் வாழ்க' என்று முழக்கமிடுவோம். பாஜகவினர் Who is the Periyar என்று கேட்பார்கள். ராமரை செருப்பால் அடிப்பேன் என்று கூறியவர் தான் பெரியார் என்று பதில் கூறுவோம் என ஆ.ராசா எம்.பி பேசியுள்ளார்.
Recommended Video
சென்னையில் தண்டையார்பேட்டையில் நடைபெற்ற திராவிட மாடல் பயிற்சிப் பாசறையில் பேசிய தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா, திராவிட மாடல் பற்றி விளக்கினார்.
மேலும், தாழ்த்தப்பட்டவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு, அனைத்திலும் சம உரிமை ஆகியவற்றை முழுமையாக பெற்றுத் தருவதுதான் திராவிட மாடல் ஆட்சி எனப் பேசினார்.

பயிற்சி பாசறை
சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தி.மு.க இளைஞரணி சார்பில் திராவிட மாடல் பயிற்சி பாசறைக் கூட்டம் நடைபெற்றது. இதில் தி.மு.க துணைப் பொதுச் செயலாளரும் நீலகிரி எம்.பியுமான ஆ.ராசா மற்றும் வடசென்னை எம்.பி கலாநிதி வீராசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். வடசென்னை இளைஞரணி சார்பாக ஏராளமான இளைஞர்கள் இந்த பயிற்சி பாசறையில் கலந்துகொண்டனர். இந்த திராவிட மாடல் பயிற்சிப் பாசறையில் பேசிய ஆ.ராசா எம்.பி., இளைஞர்கள் திராவிட மாடல் என்றால் என்ன என்பதை புரிந்து கொள்ள வேண்டும் எனக் கூறி திராவிடர் குறொத்த வரலாற்றை விரிவாக விளக்கிக் கூறினார்.

இந்தி
தொடர்ந்து பேசிய ஆ.ராசா, "நாடாளுமன்றத்திற்குச் சென்ற அண்ணாவைப் பார்த்து இந்தி கற்றுக் கொள்ள வேண்டியதுதானே என்று கேட்டார்கள். அப்போது அவர்களே, 60 நாட்களில் எளிதாக இந்தியை கற்றுக் கொள்ளலாம். கற்றுக் கொள்ளுங்கள் என்று கூறியதற்கு, அண்ணா பதில் சொன்னார். ஆம், வெறும் 60 நாட்களிலேயே இந்தியை கற்றுக் கொள்ளலாம் அதில் கற்றுக்கொள்ள வேறு ஒன்றும் இல்லை, ஆனால் தமிழ் அப்படி அல்ல என்று கூறினார்" என்று பெருமிதத்தோடு குறிப்பிட்டார்.

சம உரிமை
மேலும், பெண்களுக்கு சம உரிமை வழங்க வேண்டும் என்று பெரியார் கூறியதை தொடர்ந்து சொத்தில் பெண்களுக்கும் சம உரிமை உண்டு என்று அண்ணல் அம்பேத்கர் போராடிய நிலையில் கருணாநிதி பெண்களுக்கு சொத்தில் சம உரிமை உண்டு என்ற சட்டத்தை கொண்டு வந்தார். தாழ்த்தப்பட்டவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு, அனைத்திலும் சம உரிமை ஆகியவற்றை முழுமையாக பெற்றுத் தருவதுதான் திராவிட மாடல் ஆட்சி எனப் பேசினார்.

அண்ணாமலை
மேலும் பேசிய ஆ.ராசா எம்.பி, "பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை , கலைஞர் வாழ்க பெரியார் வாழ்க என்று கூறுவது தவறு என்று கூறுகிறார். 95 ஆண்டுகள் நாட்டிற்காக பாடுபட்ட பெரியாரை வாழ்க என்று கூறுவதில் என்ன தவறு? நாடாளுமன்றத்தில் சபாநாயகர் உள்ளே வரும்போது அனைத்து பாஜக எம்.பிகளும் எழுந்து ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் என்று கூச்சலிடும்போது நாங்கள் ‘பெரியார் வாழ்க பெரியார் வாழ்க' என்று கூச்சலிடுவோம். அதற்கு பாஜகவினர் 'Who is the Periyar?' என்று கேட்பார்கள். ராமரை செருப்பால் அடிப்பேன் என்று கூறியவர் தான் பெரியார் என்று பதில் கூறுவோம்" எனப் பேசினார்.












Click it and Unblock the Notifications