"சூத்திரன்".. ஆ.ராசா பேச்சால் சீறிய அமெரிக்கை! "அந்த" போட்டோ போட்டதும்! திமுக எம்பிக்கு வந்ததே கோபம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சூத்திரர்கள் பற்றி திமுக எம்.பி ஆ. ராசா பேசியது இணையம் முழுக்க தீயாக பரவி வருகிறது. இதை தற்போது திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அமெரிக்கை நாராயணன் எதிர்த்து உள்ளார்.

திமுக எம்பி ஆ. ராசா மிகவும் துணிச்சலாக பேச கூடியவர். இந்து மதத்தில் இருக்கும் ஏற்றத்தாழ்வுகளை அப்படியே புட்டு புட்டு ஆதாரங்களுடன் பேச கூடியவர்.

இதற்காக இந்து புனித நூல்களில் இருக்கும் ஆதாரங்களை கூட அவர் எடுத்துக்காட்டி பேசுவார். இந்த நிலையில்தான் அவர் இந்து மதத்தில் இருக்கும் ஏற்றத்தாழ்வுகள் பற்றி பேசிய வீடியோ ஒன்றை பாஜகவை சேர்ந்த அண்ணாமலை பகிர்ந்து இருந்தார்.

அண்ணாமலை

அண்ணாமலை

திமுக எம்பி ராசா ஒரு பிரிவினருக்கு எதிராக பேசுகிறார். தமிழ்நாடு அரசியல் செல்லும் திசை வருத்தம் அளிக்கிறது. சிலரை குஷிப்படுத்துவதற்காக ஒரு பிரிவினரை மோசமாக தாக்கி பேசுகிறார். இவர்கள் தமிழ்நாட்டிற்கு உரிமையாளர்கள் போல சொந்தம் கொண்டாடுகிறார்கள், என்று ஆ. ராசா வீடியோவை பகிர்ந்து அண்ணாமலை விமர்சனம் செய்து இருந்தார். ஆ. ராசா அந்த வீடியோவில், இந்துவாக இருக்கும் வரை நீ சூத்திரன்தான்.

சூத்திரன்

சூத்திரன்

உச்ச நீதிமன்றம் சொல்கிறது இந்து கிறிஸ்துவனாக இல்லை என்றால், நீ இஸ்லாமியனாக இல்லை என்றால், நீ பெர்சியனாக இல்லை என்றால் நீ இதுவாகத்தான் இருக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் சொல்கிறது;. இப்படிப்பட்ட கொடுமை வேறு எந்த நாட்டிலாவது இருக்கிறதா? இந்துவாக இருக்கும் வரை நாம் சூத்திரன்.. இந்துவாக இருக்கும் வரை நாம் பஞ்சமன்.. இந்துவாக இருக்கும் வரை தீண்டத்தகாதவர்கள்.. இந்துவாக இருக்கும் வரை நாம் விபச்சாரியின் மகன். இந்த அவலத்தை பற்றி நாம் கேள்வி எழுப்ப வேண்டும் என்று ஆ. ராசா காட்டமாக பேசி இருந்தார்.

காங்கிரஸ்

காங்கிரஸ்

இதை தற்போது திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அமெரிக்கை நாராயணன் எதிர்த்து உள்ளார். அதில், இந்துக்களை, இழிவாகப் பேசும் மாற்று மதத்தை சேர்ந்த ஆ. ராசா போன்றோரின், பிரிவினைவாத பேச்சை காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி, உரத்த குரலில் கண்டிக்காமல் இருப்பது தான் காங்கிரஸ் கட்சியின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணம். மதத்தின் பெயரால் ராசாவை முதல்வர் ஸ்டாலின் கைது செய்ய வேண்டுகிறேன், என்று குறிப்பிட்டு இருந்தார்.

போட்டோ

போட்டோ

அதோடு கிரிஸ்துவர் ஒருவரின் மரணத்திற்கும் ஆ. ராசா சென்ற புகைப்படத்தையும் அமெரிக்கை பகிர்ந்து இருந்தார். ஆ. ராசா கிரிஸ்துவர் என்பதை நிறுவும் வகையில் இப்படி பகிர்ந்து இருந்தார். இதை தற்போது திமுக எம்பி செந்தில் குமார் காட்டமாக விமர்சித்து உள்ளார். அதில், இரக்கமின்றி இறந்தவர்களை வைத்து #மலிவான_அரசியல் செய்வது என்ன மனநிலை என்று தெரியவில்லை. இதை உடனே டெலிட் செய்து மன்னிப்பு கேளுங்கள், என்று அவர் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+