சின்ன தூண்டிலை போட்டு.. திமிங்கலத்தையே பிடித்த திமுக.. "அந்த" கட்சியின் முகமே போகிறாராம்.. போச்சு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தல் 2024 முடிந்த நிலையில் முக்கியமான கட்சியின் நிர்வாகி ஒருவர் வேறு ஒரு கட்சிக்கு மாற போவதாக தகவல் வெளியாகி உள்ளது. தனது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு அந்த நிர்வாகி திமுகவிற்கு செல்ல முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தல் ஒரு வழியாக நடந்து முடிந்துள்ளது. வெறும் 1 மாதத்தில் மொத்த தேர்தல் பணிகளும் முடிந்து தமிழ்நாட்டில் தேர்தல் பரபரப்பு ஓய்ந்துள்ளது. தேர்தல் பரபரப்பு ஓய்ந்தாலும் தேர்தலின் போது நடந்த பல்வேறு மோதல்கள் பல்வேறு கட்சிகளில் பூகம்பத்தை கிளப்பி உள்ளது. தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தலில் இந்த முறை 4 முனை தேர்தல் நடந்தது. திமுக - அதிமுக - பாஜக - நாம் தமிழர் இடையே கடுமையான மோதல் நடந்தது. இந்த மோதலில் திமுக - அதிமுக - பாஜக தனி தனியாக கூட்டணி அமைத்து இருந்தன.

A senior leader to jump from BJP party to DMK in Tamil Nadu after the Lok Sabha election

அந்த வகையில்தான் முக்கிய கட்சி ஒன்றில் இருக்கும் பிரபல நிர்வாகி ஒருவர் கட்சி மாறும் முடிவை எடுத்துள்ளாராம்.

கட்சி மாற போவது ஏன்?: அந்த நிர்வாகி தற்போது இருக்கும் கட்சியின் அடையாளமாக இருப்பவர். கட்சியில் முக்கிய பதவியில் இருப்பவர். தேர்தல் ரீதியாகவும் வெற்றிகரமான தலைவர். ஆனால் லோக்சபா தேர்தலில் அவர் மீது கடுமையான அட்டாக்.

இந்த லோக்சபா தேர்தலில் கட்சியின் தலைமையே தனக்கு எதிராக செயல்பட்டதாக அவர் தனக்கு நெருக்கமானவர்களிடம் புகார் வைத்து வருகிறாராம். முக்கியமாக தேர்தல் பிரச்சாரத்தின் போது தனக்கு எதிராகவே தேர்தல் ஆணையத்தில் சில தகவல்களை தலைவர் கொடுத்து இருக்கலாம் என்று இவர் கருதுகிறாராம்.

சமீபத்தில் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அந்த நிர்வாகி.. எனக்கு எதிராக தலைவரே காய் நகர்த்தி இருப்பதை நான் எதிர்பார்க்கவில்லை. நான் வெற்றிபெற்றால் பிரச்சனை ஆகிவிடும் என்று அவர் எனக்கு எதிராகவே பணிகளை செய்துள்ளார்.

கட்சியின் வெற்றிக்கு எதிராக ஒரு தலைவரே செயல்படுவதை நான் எதிர்பார்க்கவில்லை. அந்த அளவுக்கு கட்சியின் நிலைமை மோசமாகி உள்ளது என்று நிர்வாகிகளிடம் அவர் புகார் அளித்துள்ளார்.

இந்த தேர்தலில் தமிழ்நாட்டை சேர்ந்த அந்த மூத்த அரசியல் நிர்வாகி பெரிய பிரச்சனை ஒன்றில் சிக்கினார். அந்த நிர்வாகிக்கு எதிராக வழக்கும் தொடுக்கப்பட்டு உள்ளது. அந்த நிர்வாகி தொடர்பாக தேர்தல் ஆணையமும் பல விசாரணைகளை நடத்தி வருகிறது. ஆனால் இதில் கட்சி நிர்வாகிகள் போதிய ஆதரவு கொடுக்கவில்லை.

திமுக கட்சி: அந்த வகையில் அந்த நிர்வாகியிடம் முக்கிய கட்சிகள் சில பேசி உள்ளன . எங்கள் கட்சிக்கு வந்துவிடுங்கள் என்று பேசி உள்ளன. தலைமை நேரடியாக இவரிடம் பேசி எங்கள் கட்சிக்கு வந்துவிடுங்கள் என்று பேசி உள்ளனர்.

இந்த நிலையில்தான் தனது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு அந்த நிர்வாகி திமுகவிற்கு செல்ல முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது தென்மண்டலத்தில் திமுகவிற்கு பெரிய அளவில் பலம் சேர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கட்சியின் முகத்தையே தென் மண்டலத்தில் திமுகவிற்கு இது மாற்றும் என்று திமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+