சம்பவக்காரர்.. இங்கிருந்து அப்படியே அந்த கட்சிக்கே தாவி குதிக்கும் புள்ளி.. தலைவருக்கே அதிர்ச்சியாமே
சென்னை: 2024 லோக்சபா தேர்தலில் வேட்பாளராக களமிறங்கிய முக்கிய தலைவர் ஒருவர் தேர்தல் முடிவுகள் வந்ததும் கட்சி மாற உள்ளதாக தகவல்கள் வருகின்றன.
தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தல் முடிந்துவிட்டது. லோக்சபா தேர்தல் மற்ற மாநிலங்களில் இன்னும் 4 கட்டங்களில் நடக்க உள்ளன. கேரளா, கர்நாடகாவிலும் தேர்தல் முடிந்துவிட்டது.

இந்த தேர்தலுக்கு இடையில் தமிழ்நாட்டில் உள்ள அரசியல் தலைவர்கள் பலர் வடஇந்தியாவில் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். முதல்வர் ஸ்டாலினும் கூட வடக்கில் சென்று விரைவில் பிரச்சாரம் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கட்சி மாறும் தலைவர்: இப்படிப்பட்ட நிலையில்தான் 2024 லோக்சபா தேர்தலில் வேட்பாளராக களமிறங்கிய முக்கிய தலைவர் ஒருவர் தேர்தல் முடிவுகள் வந்ததும் கட்சி மாற உள்ளதாக தகவல்கள் வருகின்றன.
அதன்படி தென் மண்டலத்தை சேர்ந்த அந்த தலைவர் லோக்சபா தேர்தலில் களமிறங்கினார். ஆனால் அவர் தேர்தலுக்கு பின் 3 முக்கியமான விஷயங்களை தனது கட்சி நிர்வாகிகளிடம் கூறியுள்ளார்.
1. எனக்கு கட்சி தலைமை சரியாக உதவி செய்யவில்லை. கட்சி தலைமை எனக்கே எதிராக தேர்தல் பணிகளை செய்தது. நான் தோல்வி அடைய வேண்டும் என்று பணிகளை செய்தது.
2. மேலிடம் கொடுத்த ரூ. 1000 கோடியை தலைமை சுருட்டிவிட்டது. மற்ற மாவட்டங்களுக்கு சென்ற பணம் கூட எனக்கு வரவில்லை. எனக்கு எதிராக கடுமையாக பணிகளை செய்து உள்ளனர். அதை ஏற்றுக்கொள்ளவே முடியாது.
3. தலைவர் நான் தோல்வி அடைய வேண்டும் என்று காய் நகர்த்தி உள்ளார். கட்சியின் முகமாக நான் மாற கூடாது என்பதால் இப்படி எல்லாம் அவர் செய்கிறார், என்று கூறியுள்ளார்.
கட்சி மாறுகிறார்: இந்த நிலையில்தான் அந்த கட்சி நிர்வாகி மாற போவதாக தகவல்கள் வருகின்றன.
தென் மாவட்டத்து சம்பவக்காரரான அவர் தான் முன்பு இருந்த பழைய கட்சிக்கே செல்ல திட்டமிட்டு இருந்தார். அதன்படி அந்த கட்சியுடன் பேசி வந்துள்ளார். அவர்களும் எங்க கட்சிக்கு வந்துடுங்க. நாங்க உங்களை எடுத்துக்கொள்கிறோம் என்று கூறியுள்ளனர். ஆனால் அவர் கொஞ்சம் யோசித்து இருக்கிறார்.
ஏனென்றால் அவர் முன்பு இருந்த கட்சி தோல்விக்கு அருகில் இருக்கிறது. தோல்வியை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. முக்கியமாக கட்சிக்கே எதிர்காலம் இல்லை. அதனால் அங்கே போக வேண்டாம் என்று முடிவு செய்துள்ளாராம்.
முக்கிய கட்சி: இந்த நிலையில் தமிழ்நாட்டில் இருக்கும் முக்கிய கட்சி ஒன்று அந்த நபரை தங்கள் கட்சிக்கு அழைத்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி எங்கள் கட்சி தென் மண்டலத்தில் பலமாக இருந்தாலும் நீங்கள் வந்தால் இன்னும் நன்றாக இருக்கும். உங்களின் வருகை எங்களுக்கு மேலும் பலம் சேர்க்கும் . நீங்கள் எங்கள் கட்சிக்கு வந்தால் கட்சிக்கு ஜாதி ரீதியாக மிகப்பெரிய இமேஜ் கிடைக்கும்.
ஜாதி ரீதியாக ஒரு குறிப்பிட்ட பிரிவினர் எங்கள் மீது அப்செட்டில் உள்ளனர். நீங்கள் வந்துவிட்டால் அந்த பிரச்சனை சரியாகிவிடும். பெரிய போஸ்டிங் தருகிறோம். எங்களிடம் வந்துவிடுங்கள் என்று அந்த தலைவரை கட்சி மேலிடம் அழைத்து உள்ளதாம். இதனால் அந்த கட்சிக்கே போய் விடலாமா என்று அந்த சம்பவக்காரர் யோசித்துக்கொண்டு இருக்கிறாராம்.












Click it and Unblock the Notifications