இவர் சரிப்பட்டு வரமாட்டாரு! மகாராஷ்டிராவிற்கு அனுப்புங்க! முக்கிய தலையை தூக்கி அடித்த டெல்லி மேலிடம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் இருக்கும் பிரபல கட்சி ஒன்றின் நிர்வாகியை டெல்லிக்கு அனுப்ப அந்த கட்சியின் டெல்லி தலைமை முடிவு செய்துள்ளதாம்.

தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தலில் இந்த முறை 4 முனை தேர்தல் நடந்தது. திமுக - அதிமுக - பாஜக - நாம் தமிழர் இடையே கடுமையான மோதல் நடந்தது. இந்த மோதலில் திமுக - அதிமுக - பாஜக தனி தனியாக கூட்டணி அமைத்து இருந்தன.

A senior party leader will be moved to Maharashtra from Tamil Nadu after the Lok Sabha election Results

இந்த நிலையில் தேர்தல் முடிவுகள் எப்படி வரும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளன. தமிழ்நாட்டில் காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட தேசிய கட்சிகள் போட்டியிட்டன. இதில் காங்கிரஸ் திமுக கூட்டணியிலும், பாஜக தனியாக கூட்டணி அமைத்து போட்டியிட்டது.

இந்த நிலையில்தான் தமிழ்நாட்டில் இருக்கும் பிரபல கட்சி ஒன்றின் நிர்வாகியை டெல்லிக்கு அனுப்ப அந்த கட்சியின் டெல்லி தலைமை முடிவு செய்துள்ளதாம்.

ரிப்போர்ட்: லோக்சபா தேர்தல் முடிந்த நிலையில் அந்த கட்சி குறித்த ரிப்போர்ட் மேலிடத்திற்கு சென்றுள்ளதாம். அந்த கட்சி மோசமாக செயல்படுகிறது. கட்சியின் நிர்வாகிகள் சரியில்லை. நாம் எதிர்பார்த்த அளவிற்கு வாக்கு வங்கியை பெறாது என்று ரிப்போர்ட் சென்றுள்ளதாம். முக்கியமாக கட்சிக்கு படுதோல்வி மிச்சம். நாம் எதிர்பார்த்த எந்த மாற்றமும் நடக்கவில்லை. அதனால் தமிழ்நாட்டில் நமக்கு தோல்வியே என்று ரிப்போர்ட் தெரிவித்து உள்ளதாம்.

இதனால் அந்த கட்சியில் வரும் நாட்களில் பெரிய அளவில் நிர்வாக ரீதியான மாற்றங்கள் இருக்கும் என்று கூறப்படுகிறது. அதோடு கட்சியில் இருந்து சிலர் வெளியேறலாம் என்றும் கூறப்படுகிறது.

அந்த வகையில்தான் அந்த கட்சியில் இருக்கும் முக்கிய நிர்வாகி ஒருவரை மகாராஷ்டிரா அரசியலுக்கு செல்லும்படி உத்தரவு வந்துள்ளதாம். அவர் கட்சியின் தலைவர் இல்லை. மாறாக கட்சியின் முக்கிய பொறுப்பில் இருக்கும் ஒருவர். அவரை மகாராஷ்டிரா அரசியலுக்கு மாறும்படி உத்தரவு வந்துள்ளதாம்.

அவர் காரணமாக கட்சிக்கு கடுமையான கெட்ட பெயர் ஏற்பட்டதாக புகார்கள் வைக்கப்பட்டதால் அவரை மகாராஷ்டிரா அரசியலுக்கு மாற்ற முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாம்.

மாறும் நிர்வாகி; இது போக பிரபல கட்சியில் இருக்கும் நிர்வாகி ஒருவர் வேறு கட்சிக்கு மாறலாம் என்றும் கூறப்படுகிறது. தனது மாவட்ட நிர்வாகிகள் மட்டுமின்றி பிற மாவட்ட நிர்வாகிகளையும் அழைத்துக்கொண்டு வேறு கட்சிக்கு செல்லும் திட்டத்தில் உள்ளாராம். தனக்கு எதிராக கட்சி தலைமை செயல்பட்ட காரணத்தால் கட்சியை விட்டு வெளியேறும் எண்ணத்தில் இருக்கிறார் என்று கூறப்படுகிறது.

முக்கியமான பொறுப்பில் உள்ள அவர் கட்சியை உடைத்துக்கொண்டு செல்லும் முடிவில் உள்ளாராம். இதனால் சில கசப்பான விஷயங்களை எதிர்கொள்ள நேரிட்டாலும் கூட.. மேலிடத்திற்கு பாடம் கற்பிக்க வேண்டும் என்று இவர் கட்சியை விட்டு செல்லும்.. அல்லது கட்சியை மொத்தமாக உடைக்கும் முடிவிற்கு வந்துவிட்டார் என்கிறார்கள்.

மேல்மட்ட நிர்வாகிகளோ அவர் செல்வது ஓகே.. ஆனால் கட்சியை எல்லாம் உடைக்க முடியாது. பல நிர்வாகிகளை அழைத்துக்கொண்டு செல்ல வாய்ப்பு உள்ளது. அதற்கு மேல் ஏதும் நடக்க வாய்ப்பு இல்லை என்கிறார்கள். இந்த நிர்வாகி வெளியேறவும் மேற்கண்ட அந்த மூத்த தலையின் அரசியல்தான் காரணம் என்றும் கட்சி வட்டாரங்களில் பேசப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+