எடப்பாடியை எப்படி கூப்பிடலாம்? யார் செஞ்ச வேலை? டெல்லி மீது சீறிய "சாணக்கிய" புள்ளி! குமுறிய ஓபிஎஸ்
சென்னை: எடப்பாடி பழனிசாமியை அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் என்ற பெயருடன் டெல்லிக்கு அழைத்ததை தமிழ்நாட்டில் இருக்கும் ஒரு அரசியல் "சாணக்கிய" பிரமுகர் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.
அதிமுக உட்கட்சி விவகாரத்தில் கடந்த சில வருடங்களாகவே தீவிர ஈடுபாடு காட்டி வருபவர் அந்த அரசியல் பிரமுகர். நேரடி அரசியலில் ஈடுபடவில்லை என்றாலும் அதிமுக என்ன மோதல் வந்தாலும் அந்த புள்ளிதான் முக்கியமான முடிவுகளை எடுத்து வருகிறார்.
முக்கியமாக அதிமுகவில் ஜெயலலிதா மறைவிற்கு பின்பாக முக்கியமான பெரும்பாலான முடிவுகளை அவர்தான் எடுத்து இருக்கிறார். சசிகலாவுக்கு எதிராக ஒரு காலத்தில் தீவிரமாக களமாடியவர் தற்போது சசிகலாவுடன் மறைமுகமாக நட்பாக சென்று கொண்டு இருப்பதாக கூறப்படுகிறது.

சாணக்கியர்
கடந்த சட்டசபை தேர்தலில் அதிமுக எடப்பாடி தலைமையின் கீழ் தோல்வி அடைந்ததை இந்த புள்ளி விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. அதிமுகவில் எல்லா தலைவர்களும் ஒன்றாக இருந்திருந்தால் அதிமுக வென்று இருக்கும் என்று இவர் நினைக்கிறாராம். இதனால் சசிகலாவிடம் கூட சமாதானமாகி செல்ல இவர் முடிவு செய்துவிட்டாராம். ஆனால் எடப்பாடி பழனிசாமி மட்டும் ஒற்றை தலைமை என்று மீண்டும் மீண்டும் சொல்வதை இவர் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. எடப்பாடி பழனிசாமி ஒற்றை தலைமைக்காக சட்ட போராட்டம் செய்வதையும் இவர் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.

எடப்பாடி பழனிசாமி
இன்னொரு பக்கம் இவருடன் ஓ பன்னீர்செல்வம் மிகவும் நெருக்கமாக இருக்கிறாராம். ஜெயலலிதா போன பின் பெரும்பாலும் இவரின் சொல் பேச்சை ஓ பன்னீர்செல்வம் தட்டுவதே இல்லை. இவர் சொல்படிதான் ஓ பன்னீர்செல்வம் செயல்பட்டுக்கொண்டு இருக்கிறார். இதனால் ஓ பன்னீர்செல்வம் இவரைத்தான் இப்போதும் நாடி இருக்கிறாராம். எடப்பாடி பாருங்கள் பிடிவாதமாக இருக்கிறார். அவருக்கு எதிராக டெல்லியில் காய் நகர்த்துங்கள். டெல்லி வழியாக பிரஷர் போட சொல்லுங்கள் என்று கோரிக்கை வைத்து வருகிறாராம். இதற்கு அந்த பிரமுகரும் டெல்லியில் சில முயற்சிகளை எடுத்ததாக கூறப்படுகிறது.

அதிமுக
அதன்படி அதிமுக உடைந்து இருந்தால் பாஜக கூட்டணிக்குத்தான் சிக்கல். எடப்படியால் திமுகவை தனியாக எதிர்கொள்ளமுடியாது . அவருக்கு எதிராக நடவடிக்கை எடுங்கள். அவரை அடக்கி வையுங்கள். அதிமுகவில் சசிகலா உட்பட எல்லா தலைவர்களும் ஒற்றுமையாக இருந்தால்தான் முக்குலத்தோர் சப்போர்ட் உட்பட எல்லோரின் சப்போர்ட்டும் கிடைக்கும். இதனால் எடப்பாடியின் ஒற்றை தலைமைக்கு டெல்லிக்கு தரப்பு கிரீன் சிக்னல் கொடுக்க கூடாது என்று கூறி வருகிறாராம். இதன் காரணமாகவே எடப்பாடி - ஓ பன்னீர்செல்வம் இருவரையும் டெல்லி சமமாக நடத்தி வந்தது.

ஓ பன்னீர்செல்வம்
பிரதமர் மோடி எடப்பாடி பழனிசாமியையும், ஓ பன்னீர்செல்வத்தையும் ஒன்றாக சந்தித்தார். இந்த சந்திப்புதான் அதிமுகவில் புயலை கிளப்பி உள்ளது. மோடியை தனியாக சந்தித்து பேசி இரண்டு பேருமே தனி தனியாக நேரம் கேட்டு இருந்தனர். ஆனால் இரண்டு பேருக்குமே தனியாக நேரம் கொடுக்கப்படவில்லை. மாறாக இரண்டு பேருமே விமான நிலையம் வாருங்கள், பிரதமர் மோடியை வரவேற்கலாம் என்று மட்டுமே இரண்டு பேருக்கும் அனுமதி கொடுக்கப்பட்டு உள்ளது. இதனால் எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர்செல்வம் இரண்டு பேரும் விமான நிலையத்தில் பிரதமர் மோடியை வரவேற்று பின்னர் மாலை வரை காத்திருந்து அவரை வழியனுப்பி வைத்தனர். இருவரும் எங்களுக்கு ஒன்று என்று நிரூபிக்கவே இப்படி செய்ததாக கூறப்படுகிறது.

மோதல்
இந்த நிலையில்தான் திடீர் திருப்பமாக எடப்பாடியை பிரதமர் மோடி அலுவலகம் டெல்லிக்கு அழைத்தது. ஜி 20 தலைமை பொறுப்பு தொடர்பாக ஆலோசனை நடத்த இந்த அழைப்பு சென்றது. டெல்லியில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். இதற்கான கடிதம் கடந்த வாரம் எடப்பாடி பழனிசாமிக்கு அனுப்பப்பட்டது. அந்த கடித்ததில் எடப்பாடி பழனிசாமிக்கு கீழ், அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் என்று கூறப்பட்டு இருந்தது. மத்தியில் பாஜக அரசு இதுவரை எடப்பாடியை இடைக்கால பொதுச்செயலாளர் என்று அழைத்ததே இல்லை. அண்ணாமலை, அமித் ஷா, மோடி என்று யாருமே எடப்பாடி பழனிசாமியை அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் என்று அழைத்ததே இல்லை.

டெல்லி அழைப்பு
ஆனால் சட்டப்படி இப்போது எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளர்தான். அவரின் பதவிக்கு இன்னும் இடைக்கால தடை விதிக்கப்படவில்லை. பொதுக்குழு முடிவிற்கு இன்னும் இடைக்கால தடை விதிக்கப்படவில்லை. இந்த நிலையில்தான் எடப்பாடி பழனிசாமியை முதல்முறையாக டெல்லி அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் என்று அழைத்து உள்ளது. இது எடப்பாடி பழனிசாமிக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாக பார்க்கப்படுகிறது. எடப்பாடி பழனிசாமி தரப்பு இதனால் மிகுந்த குஷியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இப்போது திடீரென அழைத்து உள்ளனர். இதைத்தான் அந்த அரசியல் பிரமுகர் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.

கோபம்
எப்படிங்க அவரை டெல்லிக்கு கூப்பிடலாம். டெல்லிக்கு கூப்பிட்டது கூட ஓகே. அதில் இடைக்கால பொதுச்செயலர் என்று எப்படி குறிப்பிடலாம். அவரை டெல்லி அங்கீகரிக்க தயாராகிவிட்டதா? யார் பார்த்த வேலை இது என்று அந்த அரசியல் பிரமுகர் குமுறி வருகிறாராம். இது தொடர்பாக டெல்லியிலும் அவர் பேசி இருக்கிறாராம். கிட்டத்தட்ட ஓ பன்னீர்செல்வம் தரப்பை மனசு உடைய வைத்து இருக்கிறதாம். மோடி, அமித் ஷா வந்த போதெலலாம் அவரை போய் பார்த்தானே. டெல்லி சொன்னதெல்லாம் கேட்டேனே. அவரோடு ராசியாகத்தானே இருந்தேன். ஆனால் எனக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை கொடுக்க வில்லையே. நான் வழக்கு தொடுத்த நேரம் பார்த்து.. எடப்பாடியை இடைக்கால பொதுச்செயலாளர் என்று அழைத்தால் என்ன நியாயம், என்று ஓ பன்னீர்செல்வம் வருத்தத்தில் இருக்கிறாராம். அதோடு ஓ பன்னீர்செல்வம் அந்த அரசியல் பிரமுகரை சந்தித்து.. டெல்லி ஏன் இப்படி திடீரென செய்தது. நீங்கள் பேசுங்கள் என்று அந்த அரசியல் பிரமுகரிடம் உதவி கேட்டு இருக்கிறாராம். இதனால் தற்போது அந்த அரசியல் பிரமுகருக்கு - எடப்பாடி பழனிச்சாமிக்கும் மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளதாக அரசியல் தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
உதயநிதி கேட்டதில் என்ன தப்பு? - எடப்பாடியை விமர்சித்த சசிகலா.. பழிக்குப் பழியா இது? -
ரூ.8 ஆயிரத்துக்கான கூப்பன் என அறிவித்தது இதற்காகத்தான்.. கனிமொழி பிரசாரம்! -
கொங்கு மண்டலத்தில் அதிமுகவின் கதி அதோ கதிதான்.. புட்டுபுட்டு வைத்த அதிமுக முன்னாள் நிர்வாகி -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
"தமிழகத்தில் டெல்லி மாடல்.." அதிமுக பெரும்பான்மை பெற்றாலும் என்டிஏ ஆட்சிதான்.. ராம்தாஸ் அத்வாலே பரபர -
எங்களுக்குள் அண்ணன் - தம்பி சண்டைதான்! ஒரே வேனில் நின்று பிரசாரம் செய்த எடப்பாடி - டிடிவி தினகரன் -
எப்பா தம்பிகளே! கொரோனாவுல உங்களுக்கு ஆல் பாஸ் போட்டது நான்தான்! அதிமுகவை மறக்கலாமா? இபிஎஸ் கலகல -
குஷ்பு ஜிம்னாஸ்டிக் சாம்பியன்.. சுந்தர் சிக்கு படித்துப் புரிந்து கொள்ளும் அறிவு இல்லை.. பிடிஆர் -
தர்மபுரியில் மருமகள் சௌமியாவுக்கு எதிராக களமிறங்க போகும் மாமனார் ராமதாஸ்.. அன்புமணி ரியாக்ஷ்ன் -
ஜுவல்லரி கடைகளுக்கு விழுந்த அடி! ஒரு ரூபாயில் தங்கம்.. இளைஞர்களின் ஸ்மார்ட் மூவ்! உரிமையாளர்கள் ஷாக் -
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு!












Click it and Unblock the Notifications