உள்ளாட்சிக்கு மட்டும்தான் இப்போது தேர்தல்.. செம பிளான்.. அதிமுகவிற்கு அடிக்க போகும் லக்.. எப்படி?
தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் தேர்தலை தனியாக நடத்துவது ஆளும் அதிமுகவிற்கு அதிக பலன் அளிக்கும் என்று தேர்தல் வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.
Recommended Video
சென்னை: தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் தேர்தலை தனியாக நடத்துவது ஆளும் அதிமுகவிற்கு அதிக பலன் அளிக்கும் என்று தேர்தல் வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.
தமிழகம் மீண்டும் தேர்தல் பரபரப்பிற்கு தயாராகி வருகிறது. அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி இரண்டும் தேர்தலுக்காக தீவிரமாக தயாராகி வருகிறது.
தமிழகத்தில் டிசம்பர் 27 மற்றும் 30 தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி அறிவித்துள்ளார். இரண்டு கட்டமாக தமிழகத்தில் தேர்தல் நடக்கிறது. வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2, 2020ல் நடக்கும்.

ஆனால் இல்லை
ஆனால் தற்போது நகராட்சி அமைப்புகளுக்கு தேர்தல் அறிவிக்கப்படவில்லை. அதாவது நகராட்சி தலைவர், மாநகராட்சி மேயர் உள்ளிட்ட பதவிகளுக்கு தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படவில்லை. இதற்கான தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. நிர்வாக காரணங்களால் இப்படி செய்கிறோம்.

ஏன் இப்படி
தேர்தலை எளிதாக நடத்தும் வகையில் இப்படி செய்கிறோம் என்று தேர்தல் ஆணையம் தேர்தல் தெரிவித்துள்ளது. இப்படி உள்ளாட்சி தேர்தலையும், மாநகராட்சி, நகராட்சி தேர்தலையும் தனியாக நடத்துவது அதிமுகவிற்கு பெரிய அளவில் உதவும். ஆளும் கட்சிக்கு இது அதிகமாக உதவும்.

உள்ளாட்சி அமைப்பு
அதன்படி உள்ளாட்சி தேர்தலில் உள்ளாட்சி அமைப்புகளில் மட்டும் அதிமுக கவனம் செலுத்த முடியும். தங்கள் எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் எல்லோரையும் களமிறக்கி வேலை பார்க்க முடியும். ஆளும் கட்சி என்பதால் உள்ளாட்சி அமைப்புகளை தேர்தலில் பணிகளை எளிதாக செய்ய முடியும்.

இரண்டு அமைப்புகள்
நகராட்சி, மாநகராட்சி அமைப்புகளுக்கு இப்போது தேர்தல் இல்லை என்பதால் அதிமுக அதன் மீது கவனம் செலுத்த தேவையில்லை. உள்ளாட்சி அமைப்புகளில் வென்றுவிட்டு, அதன்பின் நகராட்சி அமைப்புகள் , மாநகராட்சி அமைப்புகள் மீது கவனம் செலுத்தலாம் என்று அதிமுக திட்டமிட்டு இருக்கிறது.

இதற்கு முன் எப்படி
இதற்கு முன்னதாக லோக்சபா தேர்தலின் போதே 21 சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் தமிழகத்தில் நடந்தது. அப்போது அதிமுக லோக்சபா தேர்தலில் கவனம் செலுத்தாமல் சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலில் மட்டுமே கவனம் செலுத்தியது.இதனால் அதில் 9 தொகுதிகளில் வென்று ஆட்சியை தக்க வைத்தது.

ஆட்சியை தக்க வைத்துக்கொண்டது
இதனால் அக்கட்சி ஆட்சியை தக்க வைத்துக்கொண்டது. அதேபோல் இந்த முறையும் படிப்படியாக தேர்தலில் கவனம் செலுத்தி, முதலில் உள்ளாட்சியை வெல்ல அதிமுக திட்டமிட்டுள்ளது. ஆகவே தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பு அதிகமுகவிற்கு பெரிய பலன் அளிக்க போகிறது.
-
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
“தனது தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக் கொண்டுள்ளார் ராகுல்..” முரசொலி சரமாரி விமர்சனம்! -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் நீங்க! விஜய் குறித்து திமுக ஐடி விங்க் விமர்சனம் -
யார் எம்எல்ஏ, யார் அமைச்சர் என்று முதல்வருக்கே தெரியாத ஆட்சி நடக்கிறது.. உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்! -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ! -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே!












Click it and Unblock the Notifications