விஜயின் தமிழக வெற்றிக் கழக மாநாடு.. விக்கிரவாண்டி சாலை மீடியனில் பார்த்தால்.. அதிகாலையிலேயே ஷாக்
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்கள் கூட்டம் கூட்டமாக மாநாட்டு பந்தலுக்கு வர தொடங்கி உள்ளனர். இன்று மாலைதான் கூட்டம் நடக்கிறது. ஆனால் நேற்று இரவே மக்கள் கூட்டம் கூட்டமாக அங்கே வந்துள்ளனர்.
நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு இன்று விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி சாலையில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இதற்காக பிரம்மாண்ட ஏற்பாடுகள் விக்கிரவாண்டியில் செய்யப்பட்டு உள்ளது.

இந்த மாநாட்டிற்கு நடிகர் விஜய் விடுத்துள்ள அழைப்பில், என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களுக்கு, வணக்கம்.
பெயரைப் போல சில விசயங்களைத் திரும்பத் திரும்பச் சொல்லியே ஆக வேண்டும். அப்படித்தான் கடிதங்களில் சொன்னதையே இங்கு மீண்டும் வலியுறுத்தப்போகிறேன்.
காரணம்,எல்லா வகைகளிலும் எனக்கு நீங்களும் உங்கள் பாதுகாப்புமே முக்கியம்.ஆகவே,மாநாட்டுப் பயணப் பாதுகாப்பில் நீங்கள் அனைவரும் மிகக் கவனமாக இருக்க வேண்டும்.
இருசக்கர வாகனப் பயணத்தை தவிர்த்தல் நன்று. உங்கள் பாதுகாப்புக் கருதியே இதைச் சொல்கிறேன்.
அதேபோல, வருகிற வழிகளில் பொதுமக்களுக்கோ போக்குவரத்திற்கோ இடையூறு செய்யாமல் வரவேண்டும். போக்குவரத்து நெறிமுறைகளில் கவனம் செலுத்துவதோடு, மாநாட்டுப் பணிக்கானக் கழகத் தன்னார்வலர்கள் மற்றும் தனியார் பாதுகாவல் படைக்கு ஒத்துழைப்பு நல்குவதோடு, மாநாடு சார்ந்து காவல்துறையின் பாதுகாப்பு நெறிமுறைகளுக்கும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
உங்களின் பாதுகாப்பானப் பயணத்தை எண்ணியபடியே மாநாட்டுக்கு வருவேன்.நீங்களும் அதை மனதில் வைத்தே வாருங்கள்.அப்படித்தான் வரவேண்டும்.
நாளை (27-10-2024) நமது மாநாட்டில் சந்திப்போம்.
மாபெரும் அரசியல் சரித்திரத்தை நிகழ்த்திக் காட்டுவோம்., என்று நடிகர் விஜய் கூறி உள்ளார்.
Event starts at 4pm but look at the crowd now 🥺🙏#TVKMaanadu
— Vijay Fans Trends 🐐 (@VijayFansTrends) October 27, 2024
pic.twitter.com/AZRNs7jvIJ
கூட்டம்: தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்கள் கூட்டம் கூட்டமாக மாநாட்டு பந்தலுக்கு வர தொடங்கி உள்ளனர். இன்று மாலைதான் கூட்டம் நடக்கிறது. ஆனால் நேற்று இரவே மக்கள் கூட்டம் கூட்டமாக அங்கே வந்துள்ளனர். மக்கள் பலரும் அதிகாலையே குடும்பம் குடும்பமாக வந்தனர்.
பொதுவாக அரசியல் கூட்டங்களுக்கு மக்கள் குடும்பமாக வர மாட்டார்கள். ஆனால் இந்த முறை விஜயின் முதல் மாநாட்டிற்கு விஜய்யை பார்க்க.. படம் பார்ப்பது போல மக்கள் கூட்டம் கூட்டமாக அவர் தொடங்கி உள்ளனர். கூட்டத்தின் முன் வரிசையில் அமர்வதற்கு மக்கள்.. இப்போதே மக்கள் பலர் வந்து அமர்ந்து உள்ளனர்.
இதனால் பலர் சேர்களை உடைத்துக்கொண்டு இப்போதே அமர தொடங்கி உள்ளனர். அங்கே வைக்கப்பட்டு இருந்த பேரிகேட்கள் கூட உடைக்கப்பட்டு உள்ளன. பலரும் இரவே வந்து இடம் பிடிக்க முயன்றனர். ஆனால் அவர்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. இதனால் தவெக மாநாட்டின் முகப்பு பகுதிக்கு எதிரேவுள்ள சாலையின் நடுவே அமைந்திருக்கும் சென்டர் மீடியனில் பலரும் அமர்ந்தனர்.
அங்கே பல வாகனங்கள் சென்றன. இதற்கு இடையே ஆபத்தான நிலையில் படுத்து உறங்கினர். இந்த புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன. 150 மருத்துவர்கள் மற்றும் 150 செவிலியர்கள் மாநாட்டிற்கு வரும் தொண்டர்களின் பாதுகாப்பிற்கான பணியில் ஈடுபட உள்ளனர்.
மொத்தம் 18 மெடிக்கல் கேம்ப் மாநாடு நடைபெறும் இடத்தை சுற்றி அமைக்கப்பட்டு உள்ளது. அனைத்து ஆம்புலன்சிலும் ஆக்சிஜன் சிலண்டர் இருக்கும். மேலும் உடனடி சிகிச்சைக்கு தேவைப்படும் அனைத்து மருத்துவ உபகரணங்களும் அதில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications