நெருப்புக்கோழிகள் திடீர் உயிரிழப்பு.. வாயிலிருந்து கொட்டிய ரத்தம்.. "கவிதா"வும் மரணம்.. வண்டலூரில்

வண்டலூர் பூங்காவில் 7 நெருப்புக்கோழிகள் இறந்துவிட்டன

Subscribe to Oneindia Tamil

சென்னை: வண்டலூர் பூங்காவில் உடம்பு சரியில்லாமல் இருந்த சிங்கம் ஒன்று இறந்துவிட்ட நிலையில், திடீரென நெருப்புக்கோழிகளும் அடுத்தடுத்து இறந்து வருவது பெருத்த அதிர்ச்சியை உண்டு பண்ணி வருகிறது.

வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு விலங்கினங்களுக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டது. இதனால் பூங்கா மூடப்பட்டது.. கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

ஆனாலும் இதில் 2 சிங்கங்கள் இறந்துவிட்டன. மேலும் 8 சிங்கங்களுக்கு நோய் தொற்று பாதிப்பு இருந்தன.. தீவிரமான சிகிச்சைக்கு பிறகு தற்போது அவை மீண்டுவிட்டன.

 சிகிச்சை

சிகிச்சை

இதனிடையே, கொரோனாவைரஸ் பரவல் குறைந்ததை தொடர்ந்து ஆகஸ்டு 25-ந் தேதி பொதுமக்கள் பார்வைக்கு வண்டலூர் பூங்கா திறக்கப்பட்டது.. தொற்று பாதிப்பு ஏற்பட்டு தீவிர சிகிச்சையும் தரப்பட்டு, குணமடைந்த ஒரு சிங்கம், திடீரென இறந்துவிட்டது.. அந்த சிங்கத்தின் பெயர் கவிதா.. 22 வயதாகிறது.. நேற்று முன்முனம் கவிதா இறந்துவிட்டது.. வயது மூப்பு காரணமாக கவிதா இறந்துபோனதாக பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது... அதேபோல 7 நெருப்பு கோழிகளும் இறந்துள்ளன.

 உயிரிழந்தன

உயிரிழந்தன

இந்த பூங்காவில் 35 நெருப்புக்கோழிகள் பராமரிக்கப்பட்டு வந்தன. கடந்த திங்கட்கிழமை ஒரு நெருப்புக்கோழி திடீரென இறந்தது... பிறகு மறுநாள் இன்னொரு நெருப்புக்கோழி இறந்துவிட்டது.. இதையடுத்து கால்நடை டாக்டர்கள் நெருப்புக்கோழிகளின் உயிரிழப்புக்கான காரணம் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.. ஆனால், நேற்று அடுத்தடுத்து 5 நெருப்புக்கோழிகள் சுருண்டு விழுந்து இறந்தன.. பராமரிக்கப்படும் இடத்திலேயே அவைகள் பரிதாபமாக இறந்து கிடந்தன.

 நெருப்பு கோழிகள்

நெருப்பு கோழிகள்

இதுதான் அதிர்ச்சியை கிளப்பி வருகிறது.. அந்த நெருப்புக் கோழிகள் நன்றாகவே இருந்ததாகவும், திடீரென வாயில் இருந்து ரத்தம் கொட்டி இறந்துவிட்டதாகவும், அங்கிருக்கும் ஊழியர்கள் தெரிவிக்கிறார்கள்.. உண்மையிலேயே நெருப்பு கோழிகள் ஏன் இறந்தன? என்பது குறித்து அறிய டாக்டர்கள் நெருப்பு கோழிகளின் உடலை பரிசோதனை செய்து உள்ளனர்... அநேகமாக பறவைக்காய்ச்சல் காரணமாக இருக்கலாம் என்கிறார்கள். இப்போதைக்கு கோழிகளின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், அதன் ரிசல்ட் வந்தால்தான் இதற்கு காரணம் தெரியவரும் என்றனர்.

 கண்காணிப்பு

கண்காணிப்பு

இதனால் அங்குள்ள மற்ற நெருப்புக்கோழிகளை பராமரிக்கும் வேலைகள் துரிதமாகி உள்ளன.. நெருப்பு கோழிகளுக்கு நோய் தடுப்பு மருந்து செலுத்தும் பணியும் நடந்து வருகிறது.. கொரோனா தொற்று விலங்குகளுக்கும் பரவுமா என்பது குறித்த ஆராய்ச்சி முன்பு நடந்ததுபோல, பறவை காய்ச்சல் நெருப்பு கோழிகளுக்கும் பரவ வாய்ப்பு உள்ளதா என்பது குறித்தும் அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+