சத்தமில்லாமல் பண்ருட்டியார் விரித்த வலையில் விழுவது எடப்பாடி? எழுவது விஜய்யா? சாணக்கியரின் செக் மேட்
சென்னை: தமிழக அரசியலில் நீண்ட கால அனுபவம் கொண்ட 'சாணக்கியர்' என அழைக்கப்படும் பண்ருட்டி ராமச்சந்திரன், எம்ஜிஆர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்" என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கி உள்ளார்.. தவெக விஜய் கட்சியின், அரசியல் ஆலோசகராக இல்லாமல், 88 வயதில் எதற்காக பண்ருட்டியார் தனிக்கட்சி துவங்க வேண்டும்? விஷயம் இல்லாமல் இருக்குமா??
தமிழக அரசியலில் பண்ருட்டி ராமச்சந்திரன் என்பவர் ஒரு நிழல் உலகப் பொதுப்பணித்துறை அமைச்சர் போன்றவர்., எதையும் சத்தமில்லாமல் சாதிப்பதிலும், திரைமறைவில் இருந்து காய் நகர்த்துவதிலும் அவர் ஒரு தேர்ந்த ராஜதந்திரி..

பண்ருட்டி ராமச்சந்திரன்
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுக தத்தளித்தபோது, ஓபிஎஸ் மற்றும் சசிகலா என இருவருமே அவருடைய ஆலோசனைகளுக்காகக் காத்திருந்தது அவரது அரசியல் ஆளுமைக்குச் சான்று..
குறிப்பாக, அதிமுகவின் பிளவுபட்ட சூழலில் ஓ. பன்னீர்செல்வம் தன்னை அரசியலில் ஒரு முக்கியமான சக்தியாக நிலைநிறுத்திக்கொண்டதற்குப் பின்னால் இருந்த மூளை பண்ருட்டியாருடையதுதான்.. ஆனால், ஒரு கட்டத்திற்கு மேல் தனது அறிவுரைகள் அங்கு எடுபடவில்லை என்பதை அவர் உணர்ந்தார்..
2024 மக்களவை தேர்தலில் ஓபிஎஸ் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் இணைந்த விதம், பண்ருட்டியாருக்கு உடன்பாடற்ற ஒன்றாக அமைந்தது.. இந்த முடிவின் மூலம் ஓபிஎஸ் தனது தனித்துவமான அரசியல் அடையாளத்தைத் தொலைத்துவிட்டதாக அவர் வெளிப்படையாகவே கருதினார்..
புதிய கட்சி துவங்கிய பண்ருட்டியார்
தனது நீண்டகால அனுபவமும் ஆலோசனைகளும் மதிக்கப்படாத இடத்தில் இனியும் நீடிக்க விரும்பாமல்தான் இப்போது வெளியேறியிருக்கிறார்.. அந்த உறவை துண்டித்தும் கொண்டுள்ளார்.. புதிய கட்சியையும் இன்று அறிவித்துள்ளார்..
புதிய கட்சி தொடங்குவது என்பது வெறும் அரசியல் ஆசை மட்டுமல்ல, அது ஒரு மிகத்தெளிவான கணக்குப்போடப்பட்ட வியூகமாகும்..
பண்ருட்டியார் 88 வயதை கடந்தவர், எம்ஜிஆர் காலத்து மூத்த அமைச்சர்.. அவர் நேரடியாக தவெகவில் இணைந்தால், "கட்சி உறுப்பினர்" என்ற அடையாளத்தையே பெறுவார்.. ஆனால் சொந்தமாக கட்சி ஆரம்பித்து, விஜய்யுடன் கூட்டணி வைக்கும்போது, அவர் ஒரு கூட்டணித் தலைவர் என்ற அந்தஸ்தைப் பெறுகிறார்.. இது விஜய்யுடன் சரிசமமாக அமர்ந்து பேசவும், ஆலோசனை வழங்கவும் அவருக்கு வழிவகுக்கும்..
அதுமட்டுமல்ல, கடந்த காலங்களில் விஜயகாந்த் மற்றும் ஓபிஎஸ் ஆகியோருக்கு ஆலோசகராக இருந்தபோது, ஒரு கட்டத்தில் தான் ஓரம் கட்டப்பட்ட கசப்பான அனுபவங்கள் பண்ருட்டியாருக்கு உண்டு.. ஆலோசகர் பதவி என்பது ஒரு அதிகாரமற்ற கூண்டு போன்றது என்பதால், இந்த முறை அவர் தன்னை ஒரு கூட்டணி தலைவராக நிலைநிறுத்திக்கொள்ள விரும்புவதாக தெரிகிறது..
வாக்கு வங்கி பிளவு
இதன் மூலம் நடிகர் விஜய்யின் கட்சியுடன் சம பலத்துடன் உட்கார்ந்து பேசவும், தனது ஆலோசனைகளை உரிமையோடு முன்வைக்கவும் அவருக்கு ஒரு அரசியல் அந்தஸ்து கிடைக்கிறது..
அதேபோல எம்ஜிஆர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்" என்ற பெயரில் கட்சியை துவங்கி உள்ளதால், பாரம்பரிய வாக்கு வங்கியில் ஒரு பெரிய பிளவை ஏற்படுத்துவதுதான் இந்த முடிவின் மிக முக்கியமான பின்னணி திட்டமாக இருக்கக்கூடும்..
அதிமுகவின் உண்மையான விசுவாசிகள் மற்றும் எம்ஜிஆர் ரசிகர்கள் இன்றும் இரட்டை இலை, எம்ஜிஆர் ஆகிய பெயர்களுக்கு கட்டுப்பட்டவர்கள்.. பண்ருட்டியார் நேரடியாக விஜய்யுடன் சென்றால், இந்த தொண்டர்கள் அவரை ஒரு கட்சி மாறியவராகவே பார்ப்பார்கள்..
மாறாக, எம்ஜிஆர் பெயரில் ஒரு கட்சியைத் தொடங்குவதன் மூலம், "நாங்கள் தான் உண்மையான எம்ஜிஆர் வழிவந்தவர்கள்" என்ற பிம்பத்தை உருவாக்கி, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவின் வாக்கு வங்கியில் பெரிய ஓட்டையைப் போட முடியும்.. இந்த வாக்குகளைத் தந்திரமாகத் தனது கட்சியின் மூலம் விஜய்யின் பக்கம் மடைமாற்றுவதுதான் பண்ருட்டியாரின் திட்டமாக இருக்கக்கூடும்.
கிங் மேக்கர் - சாணக்கியன் செக் மேட்
அதேபோல, தவெக போன்ற ஒரு வளர்ந்து வரும் கட்சிக்கு சமூக ரீதியான அடித்தளத்தை அமைத்துக் கொடுக்கும் அதே வேளையில், தான் ஒரு 'கிங் மேக்கர்' என்ற இடத்தைத் தக்கவைத்துக்கொள்ளவும் இது வழிவகுக்கிறது..
சுருக்கமாக சொல்லப்போனால், தவெகவின் ஆலோசகராக இருந்தால், தலைமைக்குக் கட்டுப்பட வேண்டும், ஆனால் கூட்டணித் தலைவராக இருந்தால் தனது கொள்கைகளை வலியுறுத்தவும், தன் பின்னால் இருக்கும் தொண்டர் பலத்தைக் காட்டவும் முடியும், சமூக பலத்தையும் காட்ட முடியும் என்பதே பண்ருட்டியாரின் கணக்காக இருக்கலாம்..
தவெக விஜய்க்கு லாபம்?
சுருக்கமாகச் சொன்னால், பண்ருட்டியாரின் இந்தத் தனிப்பயணம் விஜய்க்கு ஒரு வலுவான அரசியல் கேடயமாகவும், அதிமுகவிற்கு ஒரு மிகப்பெரிய சவாலாகவும் அமையும் என்பதில் சந்தேகமில்லை.. இந்த வயதில் அவர் எடுக்கும் இந்த அதிரடி முடிவு, தமிழகத்தின் அடுத்த சட்டமன்ற தேர்தலில் ஒரு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தவும் வாய்ப்புள்ளது..
இது வெறும் ஒரு புதிய கட்சி மட்டுமல்ல, பழைய அரசியல் அனுபவத்தையும் புதிய தலைமுறையின் எழுச்சியையும் இணைக்கும் ஒரு பாலமாகும்.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!
-
தவெக சார்பாக களமிறங்கும் அன்புச்செழியன் மகன்.. மதுரை மத்திய தொகுதியில் விவேக் அன்புச்செழியன்? -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
தலைமை செயலகத்திற்கு திடீர் விசிட் வந்த செங்கோட்டையன்.. தேர்தல் அதிகாரியிடம் மனு -
பெரம்பூரில் களமிறங்கும் விஜய்.. ஏசி அலுவலகம் ரெடி.. மார்ச் 28 முதல் பிரச்சாரம் -
கூட்டுறவு கடன் தள்ளுபடி! எடப்பாடி எடுத்த ஸ்மார்ட் முடிவு! வாக்குறுதிக்கு பின்.. இவ்வளவு பிளானிங்கா! -
பாம்புக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் என்ன வித்தியாசம்? நாஞ்சில் சம்பத் ஒற்றை கேள்விக்கு அதிமுக நறுக் -
டிவில கூட விஜய் படத்தை போடக் கூடாது.. அவசர கடிதத்தை தேர்தல் அதிகாரிக்கு எழுதிய காங்கிரஸ் -
கட்டம் கட்டிய திமுக.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை.. கலங்கி வீடியோ வெளியிட்ட தவாக வேல்முருகன் -
தேதி குறிச்சாச்சு.. மேடையேறும் விஜய்.. மாமல்லபுரத்தில் தவெக வேட்பாளர் அறிமுக கூட்டம் -
அதிமுகவிற்கு 17% கூட இல்லை.. 146 தொகுதியில் 3-ம் இடம் போயிட்டாங்க.. ஆதவ் அர்ஜுனாவின் புதிய டேட்டா -
என்னது நாங்க தவெகவை கூட்டணிக்கு அழைத்தோமா.. கடுகடுத்த செல்லூர் ராஜூ -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம்











Click it and Unblock the Notifications